search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child"

    • குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார்.
    • சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    போரூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி சிவகன்னி. இவர்களுக்கு ரம்யா என்கிற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

    குழந்தை ரம்யாவிற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது குழந்தையின் 2 சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வந்த சூர்யா கூலிவேலைக்காக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை வந்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தை ரம்யாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

    இதனை கண்ட தாய் சிவகன்னி கதறி துடித்தார். அவர் இறந்த தனது குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார். அங்கிருந்த அவரது கணவர் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

    இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் குழந்தை ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக சூர்யா மற்றும் அவரது மனைவி சிவகன்னி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சென்னை வந்ததாகவும் என்ன செய்வது என்று தெரியமால் பஸ்நிலைய பிளாட்பாரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    • குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
    • குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மாட சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன் லட்சுமி (வயது 25). இவருக்கும், கணவர் முருகானந்தத்திற்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த பொன் லட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் தனது 4-வயது மகள் கவிபாரதியுடன் மாயமானார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    • குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது.
    • ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது. சேலம் மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் தலைமை தாங்கி பேசினார்.

    அவர் பேசுகையில், இன்றைய நவீன காலத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வருமானம் சம்பாதிப்பது குழந்தைகளின் பெற்றோருக்கும், வேலை அளிப்பவர்களுக்கும், சமதாயத்துக்கும் நல்லது அல்ல. எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம், வேலைக்கு அல்ல என்ற குறிக்கோளுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் முறை தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் குறித்து இணை இயக்குனர் (பொறுப்பு) தினகரன், கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் சட்டம் குறித்து உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி, ஆள் கடத்தல் மற்றும் இளம் சிறார் நீதி, சட்டம் குறித்து சேலம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, வெளிமாநில தொழிலாளர் சட்டம் குறித்து சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் ஆகியோர் பேசினர்.

    இந்த பயிற்சியில் ஓசூர் இணை இயக்குனர் சபீனா, துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

    • வண்டிப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மே மாதம் 24-ந்ேததி காடையாம்பட்டி மாட்டுக்காரனூர் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.
    • போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா ேஜாடுகுளியை சேர்ந்தவர் ெஜயப்பிரகாஷ் (வயது 28). இவருக்கும், ஜலகண்டாபுரம் வண்டிப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மே மாதம் 24-ந்ேததி காடையாம்பட்டி மாட்டுக்காரனூர் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.

    இதை அறிந்த சமூக நலத்துறையின் நங்கவள்ளி வட்டார விரிவாக்க அலுவலர் மகேஸ்வரி விசாரணை நடத்தினார். இதையடுத்து ெஜயப்பிரகாஷ் மற்றும் அவரது தாய் விஜயா, சிறுமியின் தாய் லலிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வட்டார விரிவாக்க அதிகாரி புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழும்.
    • 2025-க்குள் மயிலாடுதுறையை குழந்தை தொழிலாளர் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலககூட்ட ரங்கில் குழந்தை தொழி லாளர் முறையினை அகற்று வதற்காக உறுதிமொழி மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழும் நிலையில் முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க 2025-ம் ஆண்டுக்குள் மயிலாடுதுறை மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை முதல் கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன் , மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே யுள்ள சாத்தங்குடி யை சேர்ந்தவர் ராஜாராம் (வயது30). கோவையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பேச்சி யம்மாள்(24). இவர்களுக்கு 3வயதில் பெண் குழந்தை உள்ளது. ராஜாராம் கோவையில் வேலை பார்ப்பதால் வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார்.

    இந்த நிலையில் அவர் ஊருக்கு வந்தபோது குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பேச்சியம்மாள் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி ப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ராஜாராம் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.

    • பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போலீசார் சிறுமிக்கு அறிவுரை கூறி அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 6-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று வீட்டில் இருந்த சிறுமி, அருகே உள்ள கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதையடுத்து அவரது பெற்றோர் கடைக்கு சென்று விசாரித்த போது, அவர் வரவில்லை என தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனடியாக சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி, அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான பிரதீபன்(25) என்பவருடன் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் எங்கு சென்றனர் என விசாரித்தபோது, அவர்கள் கரூரில் இருப்பது தெரிய வரவே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு பிரதீபன், சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமி மற்றும் அவரை திருமணம் செய்த பிரதீபனை பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு வைத்து விசாரணை நடத்தி விட்டு, அவர்களை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியின் பெற்றோரை வரவழைத்து, சிறுமிக்கு அறிவுரை கூறி அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த பிரதீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சிறுமி இதே வாலிபருடன் மாயமானது, போலீசார் அவர்களை கண்டு பிடித்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்து, வாலிபரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்ததும், அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    • இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. இவர்களது 1½ வயது மகள் தனுஷ்கா.

    இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்தது.

    இதனால் குழந்தை அலறி துடித்துள்ளது. சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது குழந்தையை பாம்பு கடித்தது தெரிந்தது. உடனடியாக அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சாலை வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதமானது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தை உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை உடலை வீட்டிற்கு ஆம்புலன்சு மூலம் அத்தி மரத்து கொல்லை கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

    கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்டனர். பின்னர் இறந்த குழந்தை பிணத்தை 10 கிலோ மீட்டர் தூரம் கையில் சுமந்து சென்றனர்.

    அல்லேரி மலைப் பகுதியில் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சாலை வசதி கேட்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    பாம்பு கடித்த உடன் குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.

    ஆனால் சாலை வசதி இல்லலாததால் உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

    மேலும் இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கணேஷ் தனது 1 ½ வயது மகன் கணேசனை மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு பாளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக கணேஷின் மோட்டார் சைக்கிளில் மோதியது.

    நெல்லை:

    செய்துங்கநல்லூர் தென்னஞ்சாவடி தெருவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மகன் கணேஷ் (வயது 28). இவர் இன்று மதியம் தனது 1 ½ வயது மகன் கணேசனை மோ ட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு பாளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    பாளை நீதிமன்றம் அருகே சங்கர் காலனி பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக கணேஷின் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தந்தை, மகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சிறுவனுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கணேசுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • செங்கல்‌ சூளை மற்றும்‌ மரம்‌ அறுக்கும்‌ ஆலையில்‌ பணிபுரிந்த 5 குழந்தை தொழிலாளர்‌ மற்றும்‌ வளரிளம்‌ பருவத்‌ தொழிலாளர்கள்‌ கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர்.
    • தொடர்ந்து தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர் மூலம் தொடர்‌நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் சேலம் மாவட்ட ஆள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறை, சைல்டு லைன் கள அலுவலர்கள், காவல் ஆய்வாளர், வட்டாட்சியர், கிராமிய பெண்கள் மேம்பாட்டு சமூக ஆர்வலர் ஆகியோருடன் தொழிலாளர் துறை சார்ந்த தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டிணம் தைலானூர் வலசையூர், சின்ன வீராணம் மற்றும் குப்பனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் கொத்தடிமை தொழிலாளர், குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவத் தொழிலாளர்கள் உள்ளனரா என்று அதிரடி ஆய்வு செய்தனர்.

    மேலும் செங்கல் சூளை மற்றும் மரம் அறுக்கும் ஆலையில் பணிபுரிந்த 5 குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள்

    கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். தொடர்ந்து தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர் மூலம் தொடர்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆய்வின் போது அரிசி ஆலை உரிமையாளர்கள், செங்கல் சூலை மற்றும் மரம் அறுக்கும் ஆலை உரிமை யாளர்களிடம் கொத்தடிமை தொழிலாளர் மற்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் எவரையும் தொழிற்கூடங்களில் பணியமர்த்த கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது. நிர்வாகத்தினரிடம் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தி னர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவன ங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனை யும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்ப டும் என்றும் எச்சரிக்கை செய்யப்ப ட்டது.

    மேலும் குழந்தை களை பணி செய்ய அனுப்பி வைக்கும் பெற்றோர் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ண வேணி தெரி வித்துள்ளார்.

    • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மதுரை மாவட்டத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
    • தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதுரை மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், மதுரை தொழிலாளர் துணை கமிஷனர் லிங்கம், உதவி கமிஷனர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் கொண்டனர்.

    அப்போது சைல்டு லைன் உதவியுடன் வீதி நாடகம், பறை இசை ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து இயக்க வாகனம் மாட்டுத்தாவணி யில் இருந்து புறப்பட்டு பெரியார், ஆரப்பாளையம், ெரயில் நிலையம் வழியாக சென்றது. அப்போது பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தும், ஸ்டிக்கர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு நடந்தது.

    தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், மதுரையில் கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்டதில் 10 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றங்க ளில் உள்ள 17 வழக்குகள் முடிக்கப்பட்டு, அபராதமாக ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. அந்த தொகை மதுரை மாவட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் மறுவாழ்வு நலச்சங்கத்தின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த பணியிலும் ஈடுபடுத்தக்கூ டாது. 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தி னரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது தெரியவந்தால் சைல்டு லைன் தொலைபேசி எண். 1098 மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) அலுவலக தொலைபேசி எண்; 0452 - 2604388 மற்றும் மத்திய அரசின் இணையதளம் PENCIL Portal (www.pencil.gov.in) வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதுரை மாவட்டம் தேர்ந்தெ டுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சென்னையில் நடந்த விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சிறந்த களப்பணி அலுவலர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.

    செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் காங்கேயன்(வயது 60). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார்.

    உடனே அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் காங்கேயனை எச்சரித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 25-ந்தேதி சிறுமியை மீண்டும் காங்கேயன் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் காங்கேயன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

    இதற்கிடையே காங்கேயன் போலீசாருக்கு பயந்து தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×