search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜபாளையம்"

    • ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள குறிச்சியார்பட்டி தெற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. சுவாமி சிலைகள் ஊர்வலமாக கேரளா செண்டை மேளதாளத்துடன் காளியம்மன் கோவில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்டு தெற்கு தெரு காளியம்மன் கோவில் வந்தடைந்தது. சுவாமி சிலைகளுக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து யாகசாலை பூஜை ஆச்சாரி யர் வர்ணம் கணபதி பூஜை யுடன் தொடங்கியது. 2 நாள் யாகசாலை பூஜையை அடுத்து கிருஷ்ணன் கோவி லில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேளதாளத்துடன் வந்தனர்.

    ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பின் அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் தீப ஆராதனை வழிபாடு நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது

    சங்கரன்கோவில் சக்தி பிரியா தெம்மாங்கு குழு வினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கேரளா ராஜ்மகாதேவன் நம்பூதிரி நடத்தி வைத்தார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை பொருளாளரும், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரு மான குறிச்சியார்பட்டி மாரியப்பன் தலைமையில் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • ராஜபாளையத்தில் நேருவின் 135-வது பிறந்த நாள் விழா நடந்தது.
    • என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் 135-வது பிறந்த நாள் விழாவை யொட்டி அவரது சிலைக்கு பராமரிப்பு குழு சார்பில் கொண்டாடப்பட்டது. நேரு சிலைக்கு பராமரிப்பு குழுவின் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் நாகராஜன், வருவாய் அலுவலர் முத்துசெல்வம், அனைத்துமகளிர் காவல் ஆய் வாளர் மாரியம்மாள், போக்குவரத்துக் காவல் துணை ஆய்வாளர் கார்த்திகேயன், என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி உதவி தலை மையாசிரியர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். இந்த விழாவில் சிலை பராமரிப்புக் குழுவை சேர்ந்த ரகு, வாசுதேவராஜா, என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் ராஜா, என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை உறுப்பினர் ராம்விஷ்ணு ராஜா, ராம் வெங்கட்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறி னார். நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினவிழாவில் என்.ஏ. ராமச்சந்திர ராஜா குருகுலத் தொடக்கப் பள்ளி, முருகன் நடுநிலைப்பள்ளி, என்.ஏ.பாப்புராஜா நடுநிலைப்பள்ளி, என்.ஏ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் வ.உ.சி.152-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜபாளையம் நகர வடக்கு, தெற்கு அ.தி.மு.க. சார்பில் சுதந்தி ரபோராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர வடக்கு செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் தலை மையில், தெற்கு செயலாளர் பரமசிவம் முன்னிலையில் ராஜபாளையம் டி.பி.மில்ஸ் ரோட்டில் உள்ள வ.உ.சி. சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் அழகு ராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் யோகசேகரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரியான், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தி, நகர மகளிர் அணி செயலாளர் ராணி மற்றும் முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சமந்தபுரம் காஜியார் மினி ஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் லீவா உதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சையது இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் முகமது பிலால் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செய்யது அலி பாதுஷா வரவேற்று பேசினார். நகரத் தலைவர் முகமது ரபிக் மிஸ்பாகி, மாநில தொழில் நுட்ப இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், மண்டல ஒருங்கிணைப்பாளர் அவ்தா காதர் வாழ்த்தி பேசினார்கள். மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது அபூபக்கர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் லீவாவுதீன் மாவட்ட தலைவராகவும், சையது இப்ராஹிம் மாவட்ட செயலாளராகவும், முகமது பிலால் மாவட்ட பொருளாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜபாளையம் காதர் மைதீன், முகமது அபூபக்கர், பார்கவி தேர்ந்தெடுக்கப் பட்டனர். பொது சிவில் சட்டத்தை முழுமையாக எதிர்ப்பது எனவும், மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. அரசை கலைத்து ஆளுநர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காதர்மைதீன் நன்றி கூறினார்.

    • குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
    • குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மாட சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன் லட்சுமி (வயது 25). இவருக்கும், கணவர் முருகானந்தத்திற்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த பொன் லட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் தனது 4-வயது மகள் கவிபாரதியுடன் மாயமானார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    • மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
    • தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது38). இவருக்கு மகேஷ் என்ற மனைவியும், இன்பராஜ், அழகுராஜா என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    மாரியப்பன் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவும் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்தார்.

    மாரியப்பன் வேலை பார்க்கக்கூடிய மாந்தோப்புக்கு அருகில் மற்றொரு நபரின் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்காக, தோட்டத்தின் உரிமையாளர் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது.

    இதனை அறியாத மாரியப்பன், அந்த தோட்டத்திற்குள் இரவு நேரத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மாரியப்பன் தெரியாமல் மிதித்து விட்டதாக தெரிகிறது.

    இதனால் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மின்வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை இன்று காலை தோட்டத்துக்கு சென்றவர்கள் பார்த்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின் வேலியில் சிக்கி மாரியப்பன் இறந்து கிடந்ததை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதையடுத்து அவரது உடலை போலீசார் அங்கிருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரியப்பன் இறந்து கிடந்த தோட்டத்தில் உரிமையாளர் அனுமதி பெற்று மின்வேலி அமைத்திருந்தாரா அல்லது அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக அமைத்து உள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே நேரத்தில் மாரியப்பன், தான் வேலை பார்த்த தோட்டத்திலிருந்து அருகில் உள்ள தோட்டத்திற்கு இரவு நேரத்தில் சென்றது ஏன்? என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். தோட்டத்து காவலாளி மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜபாளையத்தில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி இன்று மாலை தொடங்குகிறது.
    • நகர்மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டிகள் இன்று (20-ந் தேதி) மாலை முதல் தொடங்குகிறது.

    ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் மாலை 4 மணியளவில் கபடி போட்டிகள் தொடங்குகின்றன.

    நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார். ராஜுக்கள் கல்லூரி செயலாளர் சிங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு கபடி போட்டிகளை தொடங்கி வைக்கின்றனர்.

    கே.எஸ்.ஆர். பஸ் சர்வீஸ் அதிபர் பிரகாஷ் சங்கர், அர்ஜுனா விருது பெற்ற வீரர் கணேசன், கலால்துறை கண்காணிப்பாளர் கனிமுத்து குமரன், மதுரை வல்லத்தரசு ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனிமுத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இந்த போட்டிகளை காவல்துறை அணி உள்பட 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    • ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
    • கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் புகார் கொடுத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கீழராஜகுலராமன் வருவாய் ஆய்வாளர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது இறந்து கிடந்தவர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜபாளையம் மில்லில் தொழிலாளி திடீர் இறந்தார்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 45). இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்துவந்தார். சம்பவத்தன்று இரவு பணிமுடிந்து ஓய்வறையில் சென்று தூங்கியுள்ளார்.

    காலையில் வெகுநேரமாகியும் பூமிநாதன் எழாமல் இருந்ததால் சக ஊழியர்கள் எழுப்பிப்பார்த்துள்ளனர். ஆனால் அவர் எழாததால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூமிநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் 20-ந்தேதி முதல் மூடப்படும்.
    • அரசு ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    ராஜபாளையம்,

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை ரூ.2.90 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 20-ந்தேதி முதல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.

    கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை மேம்ப டுத்துவதற்காக தமிழக அரசு ரூ.2.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு வணிக வளாகத்துடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    பழைய பஸ் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று தொடங்குவதால் கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்காமல் போக்குவரத்து மாற்றங்கள் செய்வது குறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசு பஸ் மேனேஜர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

    இந்த கூட்டத்தில் செங்கோட்டை, தென்காசி மற்றும் திருநெல்வேலி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் புதிய பஸ் நிலையம் சென்று ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் வெளிப்புறம் மதுரை செல்லும் பயணிகளை ஏற்றி செல்லவும், அதேபோல் மதுரை, தேனியில் இருந்து வரக்கூடிய பஸ்கள் டி.பி மில்ஸ் சாலை வழியாக ரயில் நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு ெரயில்வே பீடர் சாலை வழியாக செல்லவும், சத்திரப்பட்டி பகுதியில் இருந்து வரக்கூடிய பஸ்கள் புதிய பஸ் நிலையம் செல்ல வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதியிடம் கேட்டபோது, இன்று பழைய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் செல்வது நிறுத்தப்படவில்லை. வருகிற 20-ந்தேதி முதல் ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்ல அனுமதிக்க மாட்டாது. அன்று முதல் மேற்குறிப்பட்ட முறையில் பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றார்.

    • ராஜபாளையம் அருகே கூட்டுறவு விவசாய பண்ணை சங்கம் சார்பில் சிமெண்டு களம்-குடோன் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • கவுன்சிலர் அம்பிகா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கூட்டுறவு விவசாய குத்தகைதாரர் பண்ணை சங்கம் சார்பில் சிமெண்ட் களம் மற்றும் குடோன் திறப்பு விழா நடந்தது.

    பெருந்தலைவர் காமராஜர் நினைவு நெல் களஞ்சியம் என்ற பெயரில் சிமெண்டு களத்தை தனுஷ் குமார் எம்.பி. தலைமையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். கல்வெட்டை ராஜபாளையம் யூனியன் தலைவர் சிங்கராஜ் திறந்து வைத்தார்.

    கூட்டுறவு விவசாய பண்ணை சங்க தலைவர் மிசாநடராஜன் வரவேற்றார். பெரியகுளம் கண்மாய் தலைவர் கலைச்செல்வன், வாண்டையார்குளம் கண்மாய் தலைவர் கண்ணன் உள்பட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், தேவதானத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள் முதல் நிலையத்தை இந்த சிமெண்டு களத்திற்கு மாற்றுவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார். கூட்டுறவு சங்க துணை தலைவர் காசி நன்றி கூறினார்.

    இயற்கை ஆர்வலர் தலைமலை, சேகர், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மாசானக் காளை, கிருஷ்ணாபுரம் கவுன்சிலர் காமராஜ், நக்கனேரி கவுன்சிலர் அம்பிகா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முப்பெரும் விழா நடந்தது.
    • செயலாளர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பழையபாளையம் இல்லத்துப் பிள்ளைமார் சமூகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இளைஞர் சங்க தலைவர் விக்னேஷ்திருமால் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணகுரு நூலகம், மற்றும் டிஜிட்டல் தனிப்பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசினார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும், எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான 2022, 23 ஆகிய 2ஆண்டுகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் கல்வி நிதி நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது.

    விழாவில் இல்லத்து பிள்ளைமார் பொதுநல பண்டு தலைவர் காளிமுத்து, பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக துணை தலைவர் சரவணகண்ணன், பொருளாளர் ஆறுமுகம் என்ற துரைராஜ்,முன்னாள் செயலாளர் கணேசன், உப செயலாளர்கள் ராஜா, அய்யனார், நகர் மன்ற உறுப்பினர் ஷாலினி சரவண கண்ணன் உட்பட பலர் பேசினர். விழாவில் பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.

    ×