குழந்தையுடன் இளம்பெண் மாயம்

திருமங்கலம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.
குழந்தையுடன் இளம்பெண் மாயம்
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே யுள்ள சாத்தங்குடி யை சேர்ந்தவர் ராஜாராம் (வயது30). கோவையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பேச்சி யம்மாள்(24). இவர்களுக்கு 3வயதில் பெண் குழந்தை உள்ளது. ராஜாராம் கோவையில் வேலை பார்ப்பதால் வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் அவர் ஊருக்கு வந்தபோது குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பேச்சியம்மாள் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி ப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ராஜாராம் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com