என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dad-Son"

    • கணேஷ் தனது 1 ½ வயது மகன் கணேசனை மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு பாளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக கணேஷின் மோட்டார் சைக்கிளில் மோதியது.

    நெல்லை:

    செய்துங்கநல்லூர் தென்னஞ்சாவடி தெருவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மகன் கணேஷ் (வயது 28). இவர் இன்று மதியம் தனது 1 ½ வயது மகன் கணேசனை மோ ட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு பாளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    பாளை நீதிமன்றம் அருகே சங்கர் காலனி பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக கணேஷின் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தந்தை, மகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சிறுவனுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. கணேசுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×