என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: மதுரைக்கு சிறப்பு விருது
    X

    குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: மதுரைக்கு சிறப்பு விருது

    • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மதுரை மாவட்டத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
    • தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதுரை மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், மதுரை தொழிலாளர் துணை கமிஷனர் லிங்கம், உதவி கமிஷனர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் கொண்டனர்.

    அப்போது சைல்டு லைன் உதவியுடன் வீதி நாடகம், பறை இசை ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து இயக்க வாகனம் மாட்டுத்தாவணி யில் இருந்து புறப்பட்டு பெரியார், ஆரப்பாளையம், ெரயில் நிலையம் வழியாக சென்றது. அப்போது பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தும், ஸ்டிக்கர்கள் ஒட்டியும் விழிப்புணர்வு நடந்தது.

    தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், மதுரையில் கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்டதில் 10 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றங்க ளில் உள்ள 17 வழக்குகள் முடிக்கப்பட்டு, அபராதமாக ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. அந்த தொகை மதுரை மாவட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் மறுவாழ்வு நலச்சங்கத்தின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த பணியிலும் ஈடுபடுத்தக்கூ டாது. 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தி னரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது தெரியவந்தால் சைல்டு லைன் தொலைபேசி எண். 1098 மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) அலுவலக தொலைபேசி எண்; 0452 - 2604388 மற்றும் மத்திய அரசின் இணையதளம் PENCIL Portal (www.pencil.gov.in) வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதுரை மாவட்டம் தேர்ந்தெ டுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சென்னையில் நடந்த விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சிறந்த களப்பணி அலுவலர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×