search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abolition"

    • இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்
    • காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

    காங்கயம்:

    குழந்தை திருமண ஒழிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது.காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்.இதில் பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூா்த்தியாகும் முன்பே திருமணம் செய்யக்கூடாது.குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதோடு, அவா்களின் பள்ளிக் கல்வி தொடா்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.இதைத்தொ டா்ந்து, மாணவிகள், ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள், ஆசிரியா்கள், காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

    • குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது.
    • ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது. சேலம் மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் தலைமை தாங்கி பேசினார்.

    அவர் பேசுகையில், இன்றைய நவீன காலத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வருமானம் சம்பாதிப்பது குழந்தைகளின் பெற்றோருக்கும், வேலை அளிப்பவர்களுக்கும், சமதாயத்துக்கும் நல்லது அல்ல. எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம், வேலைக்கு அல்ல என்ற குறிக்கோளுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.

    குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் முறை தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் குறித்து இணை இயக்குனர் (பொறுப்பு) தினகரன், கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் சட்டம் குறித்து உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி, ஆள் கடத்தல் மற்றும் இளம் சிறார் நீதி, சட்டம் குறித்து சேலம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, வெளிமாநில தொழிலாளர் சட்டம் குறித்து சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் ஆகியோர் பேசினர்.

    இந்த பயிற்சியில் ஓசூர் இணை இயக்குனர் சபீனா, துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் பிளாஸ்டிக் மலைபோல் குவிந்து கிடப்பதால் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளையும் சிரமத்தில் ஆழ்த்துகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இதனை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஓட்டல்கள், வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    பொதுமக்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வரும் மக்களிடமும் பிளாஸ்டிக் பொருட்களை உள்ளே கொண்டு வரக்கூடாது என சோதனை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் கடந்த 3-ந் தேதி முதல் போலீஸ் பணிக்கான உடல் தகுதித் தேர்வு நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்படுகிறது.

    உணவு சாப்பிட்ட பின் பிளாஸ்டிக் கழிவுகளை டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பாகவே அதிகாரிகள் கொட்டியுள்ளனர். அவை கடந்த 4 நாட்களாக மலைபோல் குவிந்துள்ளது.

    4 வழிச்சாலையில் குப்பைகள் கிடப்பதால் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளையும் சிரமத்தில் ஆழ்த்துகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் மட்டும் அக்கறையின்றி செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    ×