search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brother"

    குடிபோதையில் அண்ணியின் கையை பிடித்து இழுத்த தம்பியை அண்ணன் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேக்களப்பா. இவரது மனைவி பச்சையம்மாள். மேக்களப்பா இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு மாதப்பன் (வயது 35), நாகராஜ் (வயது28) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    மாதப்பன் என்பவருக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். மாதப்பன் கட்டிட தொழில் செய்து வருகிறார். அவரது தம்பி நாகராஜ் கார்பெண்டர். நாகராஜ்ஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி நாகராஜுக்கும், மாதப்பன் மனைவி வரலட்சுமிக்கும் மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு நாகராஜ் குடித்துவிட்டு வரலட்சுமியின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாதப்பன் இன்று காலை அவரது வீட்டின் அருகிலேயே நாகராஜை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், மாதப்பன் சூளகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    இதுகுறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு தனியாக சுற்றி திரிந்த அக்கா, தம்பியை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் நேற்றிரவு வழக்கம் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது 1-வது பிளாட்பார்மில் ஒரு சிறுமியும், ஒரு சிறுவனும் தனியாக நீண்ட நேரமாக சுற்றி சுற்றி வந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த காளியப்பன் மகள் பிரியா (8) மற்றும் அவரது தம்பி அருள் (5) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் எதற்காக வீட்டில் இருந்து அப்போது ரெயில் நிலையத்திற்கு வந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் 2 பேரையும் சேலம் மாநகர சைல்ட் லைன் அமைப்பிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த சிறுமி மற்றும் சிறுவனை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.

    கஜா புயல் நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை வழங்கிய அண்ணன், தங்கையை அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி பாராட்டினார். #GajaCyclone
    அரியலூர்:

    அரியலூரை சேர்ந்த ஜெயக்குமார்-சுபாலதா தம்பதியரின் மகன் நிறை நெஞ்சன் (வயது 14), மகள் சாதனா (9). தாமரைக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் நிறைநெஞ்சன் 9-ம் வகுப்பும், சாதனா 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    மாணவர்களான இவர்களுக்கு பெற்றோர் தினந்தோறும் வழங்கும் பாக்கெட் மணியை உண்டியலில் சேமித்து வைத்து வந்தனர்.

    தற்போது கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட தகவலை அறிந்த இருவரும் உதவ முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தினை எண்ணியுள்ளனர். மொத்தம் ரூ.7 ஆயிரத்து 200 இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு பெற்றோருடன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் பணத்தினை ஒப்படைத்ததோடு, அதனை வைத்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கூறியுள்ளனர்.

    அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாணவர்களான நிறை நெஞ்சன், சாதனா ஆகியோரை பாராட்டினார்.  #GajaCyclone
    கோவை மாணவி சிவரஞ்சனி தொடர்ந்து கல்லூரியில் படிப்பதற்கும், அவருடைய சகோதரர் பள்ளியில் படிப்பதற்கும் ஆகும் செலவை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம், காளிதிம்பம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகள் சிவரஞ்சனி. தனது தாய், தந்தை மறைவுக்குப் பிறகு, தன்னுடைய சகோதரர் ஹரிபிரசாந்த்தை தொடர்ந்து படிக்க வைப்பதற்காக, கோவை அரசு கலைக்கல்லூரியில் தான் படித்து வந்த பி.ஏ. படிப்பினை நிறுத்தி விட்டு, 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதாகவும், தனக்கு அரசு வேலையோ அல்லது தொடர்ந்து படிப்பதற்கு உதவியோ தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று ஊடகத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.




    சிவரஞ்சனியின் பேட்டியை தொலைகாட்சியில் 21-ந்தேதி அன்று காலை நான் பார்த்தேன். ஏழை எளிய மக்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அம்மாவின் வழியில் செயல்படும் அரசு, சிவரஞ்சனி தொடர்ந்து கோவை அரசு கலைக் கல்லூரியில் படிப்பதற்கும், அவருடைய சகோதரர் ஹரிபிரசாந்த் தாளவாடி உண்டு உறைவிடப்பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கும். அவர்கள் இருவரும் தொடர்ந்து படிப்பதற்கு ஆகும் செலவை அரசே ஏற்கும். இதற்கான உத்தரவை நான் பிறப்பித்துள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami


    தேனி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு சகோதரியை தம்பி கத்தியால் குத்திக்கொன்றார்.

    தேனி:

    தேனி அருகே கோட்டூர் காளியம்மன கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு ஜெயந்தி மாலா (வயது 25) என்ற மகளும், செல்வக்குமார் (23) என்ற மகனும் உள்ளனர். ஜெயந்தி மாலாவுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தை கருப்பையா வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இவரது தம்பி செல்வக்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

    கணவரை பிரிந்து வாழ்ந்த ஜெயந்தி மாலா நடத்தையில் செல்வக்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் இது குறித்து வாக்குவாதம் நடத்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் மற்றும் அவரது பெற்றோர் அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜெயந்தி மாலாவை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயந்தி மாலா பலியானார். இது குறித்து கோட்டூர் வி.ஏ.ஓ. தங்கமுத்து அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையா மற்றும் பேச்சியம்மாளை கைது செய்தனர். தப்பி ஓடிய செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.

    திருப்பூரில் அண்ணனை கொல்ல முயன்ற தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் சூரியா காலனி கோல்டன் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மாணிக்கம் (வயது 25). பனியன் கம்பெனியில் டெய்லராக உள்ளார். இவரது தம்பி கார்த்திக் (19). வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    நேற்று மாணிக்கம் தனது தம்பியிடம் வேலைக்கு செல்லும்படி கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஆத்திரமடைந்த தம்பி அருகில் கிடந்த குழவிக்கல்லை எடுத்து அண்ணன் தலையில் போட்டார். இதில் மாணிக்கம் படுகாயம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணிக்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணனை கொல்ல முயன்ற தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது லாரி மோதியதில் மதுராந்தகத்தை சேர்ந்த அக்கா-தம்பி பலியாகினர்.
    வத்தலக்குண்டு:

    சென்னையை அடுத்த மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடைய மகன் பிரதாப் (வயது 21). இவர், அங்குள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அவருடைய சித்தப்பா மகன் மெர்வின் (26), அவருடைய தங்கை கவுசல்யா (23). மெர்வினின் தோழி கயல்விழி (23). இவர்கள் 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி 4 பேரும், 2 மோட்டார் சைக்கிளில் நேற்று காலை கொடைக்கானலுக்கு புறப்பட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளை பிரதாப் ஓட்ட, பின்னால் கவுசல்யா அமர்ந்திருந்தார். இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளை மெர்வின் ஓட்ட தோழி கயல்விழி உடன் சென்றார்.

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில், கன்னிமார் கோவில் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரி, எதிர்பாராதவிதமாக பிரதாப் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பிரதாப்பும், கவுசல்யாவும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மெர்வின், கயல்விழி ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மாரிமுத்துவை (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை அமைந்தகரையில் வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்து அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர்.
    கோயம்பேடு:

    சென்னை அமைந்தகரை கக்கன் நகரைச் சேர்ந்தவர் அன்சார். இவர், தனது தந்தை அன்வர் பாஷா, தனது சகோதரர் பரோசின் ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். அன்சாரின் மகன் தயான் (வயது 8), பரோசின் மகள் முஸ்கான் (4½).

    இவர்களது வீட்டின் முன்பக்க சுவரையொட்டி பெரிய மரம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் நல்ல மழை பெய்ததால், வீட்டின் சுவர் ஈரப்பதமாக இருந்தது.

    நேற்று மாலை தயான், அவருடைய தங்கை முஸ்கான் இருவரும் வீட்டின் முன்புறம் இருந்த மரத்தின் அருகில் தங்களது தாத்தா அன்வர் பாஷாவுடன் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தால் மரம் அங்கும், இங்குமாக வேகமாக அசைந்தது. இதனால் ஏற்கனவே மழையில் ஊறி இருந்த வீட்டின் முன்பக்க சுவர், திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

    இதில் சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தயான், அவனுடைய தங்கை முஸ்கான் இருவர் மீதும் கட்டிட இடிபாடுகள் விழுந்தது. இதில் இருவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 2 பேரின் உடல்களை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதறி அழுதனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த அமைந்தகரை போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுவர் இடிந்து விழுந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    நடைபெற உள்ள தேர்தல்களில் ரஜினி தனித்தே போட்டியிடுவார் என்றும், எந்த கட்சிகளுடனும் கூட்டு சேரமாட்டார் என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் பேட்டி அளித்தார். #Rajinikanth #SatyanarayanaRao
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் மத்திகிரி பகுதி மராட்டிய சமுதாய மக்களின் சார்பில், சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    ஓசூர் தேன்கனிக் கோட்டை சாலையில், கூட்டு ரோடில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இவ்விழாவில், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.



    பின்னர், சத்யநாராயண ராவ் கெய்க்வாட், நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

    ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயரை விரைவில் அவரே அறிவிப்பார். கட்சி தொடங்கியதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். அதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது.

    மேலும் அவர் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டார். தனித்து தான் போட்டியிடுவார். தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். சட்டம்,ஒழுங்கு பிரச்சினை காரணமாக, அவர் அங்கு நேரில் செல்ல முடியவில்லை.

    காவிரி விவகாரத்தில், எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. தற்போது கர்நாடகாவில் நல்ல மழை பொழிந்து கொண்டிருக்கிறது. எனவே, பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை, சுமுகமாகவே காவிரி விவகாரம் முடிவடையும்’’. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது, கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவர் சந்திரகாந்த் உடனிருந்தார்.

    மேலும் இந்த விழாவில், மராட்டிய மாநிலம் நாராயண்பூரை சேர்ந்த சத்குரு நாராயண் மகாராஜ் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு ஆசி வழங்கி பேசினார். விழாவில், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சிட்டி ஜெகதீசன், பிரபாகர் ரெட்டி மற்றும் மராட்டிய சமுதாய பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  #Rajinikanth #SatyanarayanaRao
    கிருஷ்ணகிரி அருகே கால்வாயில் மூழ்கி அண்ணன் - தங்கை பரிதாபமாக இறந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே உள்ள சின்ன பேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (8) என்ற மகனும், நந்தினி (3) என்ற மகளும் இருந்தனர். தமிழ்ச்செல்வன் அருகில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று நரசிம்மன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பூப்பறிப்பதற்காக சென்றார். மேலும் ஆட்டையும் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது சிறுவன் தமிழ்ச்செல்வனும், சிறுமி நந்தினியும் உடன் சென்றனர். அந்த நேரம் நரசிம்மன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற ஆடு வேறு பக்கம் சென்றது.

    இதைப் பார்த்த நரசிம்மன் அந்த ஆட்டை பிடித்து வருமாறு தமிழ்ச்செல்வனிடம் கூறினார். இதனால் தமிழ்ச்செல்வனும், நந்தினியும் ஆட்டை பிடிப்பதற்காக ஓடிச் சென்றனர். அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள கே.ஆர்.பி. அணை தண்ணீர் செல்லும் கால்வாயில் இறங்கினர். அந்த நேரம் இருவரும் சேற்றில் சிக்கினார்கள்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு நரசிம்மன் அங்கு ஓடி சென்றார். ஆனால் அதற்குள் தமிழ்ச்செல்வனும், நந்தினியும் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். குழந்தைகளின் உடலை நரசிம்மன் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது 2 பேரின் உடல்களை பார்த்து நரசிம்மன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி அணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அவர்கள் பலியான சிறுவன் தமிழ்ச்செல்வன், சிறுமி நந்தினி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கால்வாயில் மூழ்கி அண்ணன் - தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    செல்லூர் அருகே வீட்டு தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியது தொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    செல்லூர் கொன்னவாயன் சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 39). இவர்களுக்கு சொந்தமான வீட்டை சாகுல்ஹமீது (40), அவரது தம்பி சுல்தான் ஆகியோர் ஒத்திக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.

    அதற்கான தவணை காலம் முடிந்ததும் வீட்டை காலி செய்வது தொடர்பாக அவர்களுக்கும், ராஜலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது.

    இந்த விரோதத்தில் சாகுல்ஹமீது மற்றும் சுல்தான் அரிவாளால் வெட்டியதில் ராஜலட்சுமி காயம் அடைந்தார்.

    இது குறித்து செல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல்ஹமீது, சுல்தானை கைது செய்தனர்.#tamilnews
    ×