search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hundi money"

    ஈரோட்டில் கருணாநிதி சிலையை திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார். சிலை திறப்புக்காக 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார். #Karunanidhi #DMK
    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனியில் சென்னை கலைஞர் அறிவாலயத்தில் உள்ளது போல் முழு உருவ கருணாநிதி சிலை வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (30-ந் தேதி) மாலை திறந்து வைக்கிறார். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக கொடுமுடி அருகே உள்ள சாண்டாம்பாளையம் மேலூரை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார்.

    இந்த மாணவி தனது தந்தையிடம் வாங்கும் பணத்தை உண்டியலில் சிறுக... சிறுக சேர்த்து வைத்திருந்தார். இந்த உண்டியல் பணத்தை தான் சிறுமி சோபிகா வழங்க முடிவு செய்தார்.

    உண்டியலை திறந்து பார்த்தபோது அதில் ரூ.1104 இருந்தது. அந்த பணத்துடன் பெற்றோருடன் ஈரோடு வந்த சிறுமி சோபிகா முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமியை சந்தித்து வழங்கினார்.

    அந்த சிறுமி கூறும்போது, ‘‘எனக்கு கலைஞர் தாத்தா ரொம்ப பிடிக்கும். கலைஞர் தாத்தா சிலை திறப்புக்காக இந்த பணத்தை கொடுத்துள்ளேன்’’ என்று கூறினார்.  #Karunanidhi #DMK
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலத்தை சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவி உண்டியல் பணத்தை வழங்கினார். #GajaCyclone
    கொண்டலாம்பட்டி:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமுதா. இவரது மகள் ஹமிதா (வயது 5). தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தனது தாயார் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேகரித்து வந்தார். இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது.

    இந்த நிலையில் அந்த உண்டியல் பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஹமிதா தனது தாயாருடன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து வழங்கினார்.

    அதை பெற்றுக் கொண்ட கலெக்டர் ரோகிணி அந்த சிறுமியை பாராட்டினார். மேலும் இச்சிறுமியை போல மற்றவர்களும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.  #GajaCyclone

    கஜா புயல் நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை வழங்கிய அண்ணன், தங்கையை அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி பாராட்டினார். #GajaCyclone
    அரியலூர்:

    அரியலூரை சேர்ந்த ஜெயக்குமார்-சுபாலதா தம்பதியரின் மகன் நிறை நெஞ்சன் (வயது 14), மகள் சாதனா (9). தாமரைக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் நிறைநெஞ்சன் 9-ம் வகுப்பும், சாதனா 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    மாணவர்களான இவர்களுக்கு பெற்றோர் தினந்தோறும் வழங்கும் பாக்கெட் மணியை உண்டியலில் சேமித்து வைத்து வந்தனர்.

    தற்போது கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட தகவலை அறிந்த இருவரும் உதவ முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தினை எண்ணியுள்ளனர். மொத்தம் ரூ.7 ஆயிரத்து 200 இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு பெற்றோருடன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் பணத்தினை ஒப்படைத்ததோடு, அதனை வைத்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கூறியுள்ளனர்.

    அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாணவர்களான நிறை நெஞ்சன், சாதனா ஆகியோரை பாராட்டினார்.  #GajaCyclone
    ×