என் மலர்
நீங்கள் தேடியது "brother arrested"
- அண்ணன்- தம்பி கைது
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை அடுத்த சொரங்கன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிராஜன். இவரது மகன்கள் ஜானகிராமன் (30). தாமோதரன் (25). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் ரோஜாப்பூக்கள் பயிரிட்டுள்ளனர். பக்கத்து நிலத்தை சேர்ந்த ரவி மகன்கள் குமரேசன் (30), திருமூர்த்தி (28) ஆகிய 2 பேரும், நேற்று காலை அங்கு சென்று, பூக்கள் பயிரிடப்பட்டுள்ள நிலம் எங்களுக்கு சொந்தமானது' எனக்கூறியுள்ளனர்.
இதற்கு ஜானகிராமன் தாமோதரன் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருமூர்த்தி, குமரேசன் இருவரும் சேர்ந்து, ஜானகிராமன், தாமோதரனை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து ஆஸ்பத்திரிக்கு குமரேசனும், திருமூர்த்தியும் வந்து சிகிச்சை பெற்று வந்த ஜானகிராமன், தாமோதரனிடம், 'உங்களை இங்கேயே கொன்றுவிடுகிறோம்' எனக்கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் பக்கத்தில் நின்றிருந்த ஜோதிரா ஜனையும் சரமாரியாக தாக்கினர்.தொடர்ந்து அவர்கள், அவசர சிகிச்சை பிரிவு அறையின் கண்ணாடி களை அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இதைக்கண்டு பணியில் இருந்த டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டனர். ஆனால் இவர்கள், டாக் டர்கள், செவிலியர்களை யும் மிரட்டி அங்கிருந்த மருந்து, மாத்திரைகளை சூறை யாடியுள்ளனர். இதனால் டாக்டர்கள், நர்ஸ்கள், நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட குமரேசன், திருமூர்த்தி ஆகிய 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நிலத்தகராறில் சகோ தரர்களை வெட்டிய அண்ணன், தம்பிகள் 2 பேரும் மருத்துவமனைக்குள் புகுந்து சூறையாடி டாக்டர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
திருப்பூர் சரங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சரசு (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரசு மகனை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சிவக்குமார் தனது தாய் ரத்தினம்மாளுடன் வசித்து வந்தார்.
ரத்தினம்மாள் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். முதல்மாடியில் வசித்து வருகிறார். தனியே வசிக்கும் மகனுக்காக வாடகை வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி தந்தார். அதில் அவர் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்த ரத்தினம்மாள் நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில் சிவக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் நவீன்குமார், திருப்பூர் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சிவக்குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று துருவித்துருவி விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலையாளி அல்ல என்பதை போலீசார் அறிந்து அவரை விடுவித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணையை வேறு கோணத்தில் அணுகினர். கொலையான சிவக்குமாரின் நீண்ட நாள் நண்பர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, நேற்று காலை புதுக்காடு என்ற பகுதிக்கு நான் மது குடிக்க சென்றேன். அப்போது கொலையான சிவக்குமாரின் தப்பி ரமேஷ் மதுக்குடிக்க வந்தார். காலையில் அவர் மதுக்குடிக்க மாட்டார். ஏன் காலையிலேயே மதுக்குடிக்க வந்தாய்? என்று கேட்டபோது ரமேஷ் என்னிடம் எனது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியாக உள்ளதால் மது குடிக்க வந்தேன் என்று கூறினார். நீண்ட நாள் நண்பர் என்பதால் நான் ஓடி வந்து வீட்டில் பார்த்தபோது சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது என்று போலீசில் தகவல் கூறினார்.
இதனையடுத்து போலீசார் கொலையான சிவக்குமாரின் தம்பி ரமேசை பிடித்து விசாரணை நடத்தினர். ரமேஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். கிடுக்கிப்பிடி விசாரணையில் சிவக்குமாரை கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக்கொண்டார்.
போலீசில் அவர் கொடுத்து வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தோம். மாடியில் நாங்கள் குடியிருந்து வருகிறோம். குடிப்பழக்கத்தால் மனைவி, மகனை பிரிந்த அண்ணன் வசிக்க 3 வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி கொடுத்தோம். ஆனால் அண்ணன் தினமும் குடித்து விட்டு வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்தார். கொலையான முதல்நாள் இரவும் தகராறு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அண்ணன் வீட்டில் இருந்தார். தகராறு செய்ததை தட்டிக்கேட்க சென்றேன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன் என்னை குத்த கத்தியை எடுத்து வந்தார். சுதாரித்துக்கொண்ட நான் கத்தியை அவரிடம் இருந்து பறித்து அவரை 10 முறை சரமாரியாக குத்தினேன். அப்போது அக்கம் பக்கத்தினர் வேலைக்கு சென்றிருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.
கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் அண்ணன் இறந்து விட்டார். அவர் இறந்த பின்னர் கதவை லேசாக சாத்திவிட்டு நான் வீட்டுக்கு சென்று விட்டேன். கொலையில் இருந்து தப்பிக்க விடிய விடிய திட்டமிட்டேன்.
விடிந்ததும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற அம்மா ரத்தினம்மாள் ஊர் திரும்பி விட்டதாகவும், தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு போனில் கூறினார். இதனையடுத்து நான் மோட்டார் சைக்கிளில் தாயை அழைத்துக்கொண்டு வீட்டில் இறங்கி விட்டு விட்டு புதுக்காடு மதுக்கடைக்கு சென்றேன். அங்கு நான் பதட்டமாக இருப்பதை பார்த்த அண்ணனின் நண்பர் விசாரித்தார். அப்போது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினேன். அண்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து தாய் கதறியதையடுத்து சம்பவம் வெளியே தெரிந்தது.
உடனே வீட்டுக்கு சென்று நான் போலீசில் புகார் செய்தேன். போலீசார் வாடகைக்கு குடியிருந்த வாலிபரை விசாரணைக்கு அழைத்துச்சென்றதால் நான் தப்பித்து விட்டேன் என்று நம்பினேன். ஆனால் போலீஸ் விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து போலீசார் ரமேசை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலையான சில மணி நேரங்களிலேயே கொலையாளியை கண்டுபிடித்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
கோபி அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மனைவி நதியா (வயது 28).
தனியார் மில் ஒன்றில் கணேசமூர்த்தி ஊழியராக பணிபுரிகிறார். அதே மில்லில் அவரது மனைவி நதியா கேஷியராக உள்ளார்.
தீபாவளியையொட்டி அதே பகுதியில் உள்ள தனது தந்தை சின்னசாமி வீட்டுக்கு நதியா சென்றார். இவருக்கும் இவரது அண்ணன் பங்காரு சாமிக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இருவருக்கும் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பங்காரு சாமிதான் வைத்திருந்த பலூன் சுடும் துப்பாக்கியால் நதியாவை சுட்டார். இதில் அவரது இடது தோள் பட்டையை குண்டு துளைத்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். இதை கண்ட பங்காரு சாமி அங்கிருந்து ஓடிவிட்டார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்த நதியாவை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு நதியா வீடு திரும்பினார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தங்கையை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிய அண்ணன் பங்காருசாமியை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் பங்காரு சாமியை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் சூரியா காலனி கோல்டன் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மாணிக்கம் (வயது 25). பனியன் கம்பெனியில் டெய்லராக உள்ளார். இவரது தம்பி கார்த்திக் (19). வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
நேற்று மாணிக்கம் தனது தம்பியிடம் வேலைக்கு செல்லும்படி கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஆத்திரமடைந்த தம்பி அருகில் கிடந்த குழவிக்கல்லை எடுத்து அண்ணன் தலையில் போட்டார். இதில் மாணிக்கம் படுகாயம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணிக்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணனை கொல்ல முயன்ற தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுசு (வயது 61). இவருக்கும், நல்லாம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது தம்பி ராஜாராமனுக்கும் நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ராஜா ராமன், தனுசின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த தனுசு மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றி ராஜாராமன் ஆத்திரம் அடைந்து தனுசு, துரை ஆகியோரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தனுசு, துரை ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தனுசு, பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தார்.