என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணன் கொல்ல முயன்ற தம்பி கைது"

    திருப்பூரில் அண்ணனை கொல்ல முயன்ற தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் சூரியா காலனி கோல்டன் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மாணிக்கம் (வயது 25). பனியன் கம்பெனியில் டெய்லராக உள்ளார். இவரது தம்பி கார்த்திக் (19). வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    நேற்று மாணிக்கம் தனது தம்பியிடம் வேலைக்கு செல்லும்படி கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஆத்திரமடைந்த தம்பி அருகில் கிடந்த குழவிக்கல்லை எடுத்து அண்ணன் தலையில் போட்டார். இதில் மாணிக்கம் படுகாயம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மாணிக்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணனை கொல்ல முயன்ற தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×