என் மலர்
நீங்கள் தேடியது "tag 101386"
திருவெறும்பூர்:
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் பாத்திமா நகர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் அப்பாஸ் அலி (வயது 36). சொந்தமாக ஆம்னி கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
மேலும் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் வேலையும் பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அப்பாஸ் அலி திருச்சி மஞ்சத்திடல்-பாப்பாக்குறிச்சி இடையே உள்ள சுடுகாடு அருகில் தனக்கு சொந்தமான ஆம்னி வேனில் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று காரில் தீயில் கருகிய நிலையில் கிடந்த அப்பாஸ் அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பாஸ் அலிக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பினர்.
அப்பாஸ் அலி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அவரது தாய் நூர்ஜகானிடம் சவாரி உள்ளதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பாஸ் அலி உடலில், தலை, கை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. காரில் 5 லிட்டர் பெட்ரோல் கேனும் எரிந்த நிலையில் கிடந்தது.
அவரை மர்ம நபர்கள் சவாரி இருப்பதாக கூறி அழைத்து சென்று, வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு, இங்கு வந்து உடலை போட்டு சென்றுள்ளனர். உடலை எரிக்க முயன்றுள்ளனர். ஆனால் அப்போது யாராவது வந்திருக்கலாம். அதனால் உடலை பாதியிலேயே அப்படியே போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.
நேற்று காலை சவாரிக்கு சென்ற அப்பாஸ் அலி திருச்சி ஏர்போட் பகுதியில் காரில் சுற்றியதாக அவரது செல்போன் டவர் காட்டுகிறது. அதன்பிறகு காலை 9 மணிக்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அதன் பிறகு தான் அவர் அடித்து கொலை செய்யபட்டிருக்கலாம் என உறவினர்கள் கூறுகிறார்கள்.
வாடகை கார் ஓட்டி வந்த அப்பாஸ் அலி சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பொதுப்பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முன் நின்று தீர்த்து வைப்பார். எனவே இதில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
காரில் கிடந்த கேன் மற்றும் செல்போன் பொருட்களை கைப்பற்றிய போலீசார் தடயவியல் நிபுணர்களையும் வர வழைத்து துப்பு துலக்கினர். தடயவியல் நிபுணர்கள் காரில் இருந்த கை ரேகைள். பெட்ரோல் கேன் மற்றும் கார் கதவுகளில் இருந்த கை ரேகைகள் ஆகியவற்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்பாஸ் அலி உடல் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் இதில் உள்ள மர்மங்கள் விலகும்.
கொலையுண்ட அப்பாஸ் அலிக்கு பேகம், என்ற மனைவியும், அப்துல் அஜித் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் அப்பாஸ் அலியின் உடல் பிரேத பரி சோதனை நடைபெறும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தலைவர் ஹசன் தலைமையில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்பாஸ் அலி கொலையில் உரிய விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
விருதுநகர்:
ராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்திக்கும் முன் விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று கோவிந்தன் பஜாரில் நின்றபோது அங்கு வந்த ஈஸ்வரமூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அவர் கத்தியால் வெட்டியதில் கோவிந்தன் காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிததும் பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீழராஜ குலராமன் போலீசார் விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ளது கீழ்அருங்குணம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35). இவர் அண்ணா கிராமம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (50). அ.தி.மு.க. பிரமுகர்.
இவர்கள் 2 பேருக்கும் இடையே தேர்தலையொட்டி முன்விரோதம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருபிரிவுகளாக பிரிந்து அடிக்கடி மோதி வந்தனர்.
காணும் பொங்கலையொட்டி நேற்று இரவு தாமோதரன் தரப்பினரும், சுபாஷ் தரப்பினரும் தனித்தனியாக மது குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே திடீரென்று வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இருதரப்பினரும் கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் (37), முத்துக்குமரன் (30), சுபாஷினி (10), ஞானவேல் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சுபாஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேதுபதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 6 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த தங்கவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மணிகண்டனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கீழ்அருங்குணம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் 10 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல் (வயது 23). ரவுடியான இவர் மீது கும்பகோணம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் மோரி வாய்கால் அருகே உள்ள ஒரு தொட்டியில் அரிவாள் வெட்டு காயங்களுடன் சக்திவேல் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட சக்திவேல் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரவுடி சக்திவேலை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சக்திவேலுவுக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று நள்ளிரவில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் சக்திவேலை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். வாலிபரை கொலை செய்து தொட்டியில் வீசி சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
கச்சிராயப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள பன்னிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பித்தன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமாயி (வயது 63).
நேற்று ராமாயி தனது மகன் சீனிவாசனிடம் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் கவலை அடைந்த சீனிவாசன் உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு அவரது தாய் இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும், உறவினர்களும் ராமாயியை அக்கம் பக்கத்தில் தேடினர்.
இந்த நிலையில் பன்னிப்பாடி-முண்டியூர் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ராமாயி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கரியாலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமாயியின் உடலை பார்வையிட்டனர். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. மேலும் அவரது உடல் அருகே ரத்தம் படிந்த நிலையில் கல் ஒன்றும் கிடந்தது.
எனவே மர்ம மனிதர்கள் ராமாயியை தாக்கி அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமா? என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலையில் கல்லை போட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹர்சோலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கலவரத்தை ஏற்படுத்துதல், கொடுமையான ஆயுதங்களால் தாக்குதல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை ஹர்சோலி மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி ராஜேஷ் பரத்வாஜ் முன்பாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட 7 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தார்.
தர்மபுரி மாவட்டம் பாப்புரெட்டிபட்டியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 27). இவர் கரூரில் ஒரு தனியார் ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மற்றொரு ஆம்புலன்சில் டிரைவர்களாக பணியாற்றி வரும் மண்மங்கலம் புஞ்சை தோட்டக்குறிச்சியை சேர்ந்த முருகானந்தம்(38), இளங்கதிர் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி கரூர்-கோவை ரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு முரளிதரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகானந்தம், இளங்கதிர் ஆகியோர் அவரிடம் கடுமையான வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் சேர்ந்து வயர் மற்றும் வாழைமர கன்று ஆகியவற்றால் முரளிதரனை சரமாரியாக தாக்கினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முரளிதரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அவர் கரூர் டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தார். இதில் தொடர்புடைய இளங்கதிரை போலீசார் தேடி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையை சேர்ந்தவர் கோகுலராமகிருஷ்ணன் (வயது32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரவி (55) என்பவருக்கும் கருவேல மரங்கள் வெட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது ரவி அரிவாளால் வெட்டியதில் கோகுல ராமகிருஷ்ணன் காயம் அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.
இதேபோல் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள வேடர்புளியங்குளத்தைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படி கருப்பு (40). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பழனியாண்டி (33) என்பவருக்கும் பொது பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
சம்பவத்தன்று பழனியாண்டி தாக்கியதல் பதினெட்டாம்படி கருப்பு காயம் அடைந்தார்.
இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியாண்டியை கைது செய்தனர்.






