என் மலர்
நீங்கள் தேடியது "old man murder"
- நேற்று நம்பி வழக்கம்போல் தனது ஆடுகளை புதுக்கோட்டை அருகே தெய்வச்செயல்புரத்தை அடுத்த செட்டிமல்லன்பட்டியில் உள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.
- அப்போது ஆடுகள் மேய்ப்பது தொடர்பாக நம்பிக்கும், சங்கிலிமாடனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நம்பி (வயது 70). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வந்தார்.
கொலை
நேற்று நம்பி வழக்கம்போல் தனது ஆடுகளை புதுக்கோட்டை அருகே தெய்வச்செயல்புரத்தை அடுத்த செட்டிமல்லன்பட்டியில் உள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அங்கு நம்பியின் தம்பி உறவுமுறையான ராமநாதபுரத்தை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சங்கிலிமாடன் (30) என்பவரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தார். அப்போது ஆடுகள் மேய்ப்பது தொடர்பாக நம்பிக்கும், சங்கிலிமாடனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கிலிமாடன் கத்தியால் நம்பியை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
வாலிபர் கைது
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஞான்ராஜ் ஆகியோர் சங்கிலிமாடனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மாடு மேய்த்த போது நம்பி திட்டிக் கொண்டு இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த சங்கிலிமாடன் கத்தியால் குத்திக்கொன்றதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
ராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்திக்கும் முன் விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று கோவிந்தன் பஜாரில் நின்றபோது அங்கு வந்த ஈஸ்வரமூர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த அவர் கத்தியால் வெட்டியதில் கோவிந்தன் காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிததும் பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீழராஜ குலராமன் போலீசார் விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர்.






