என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

கச்சிராயப்பாளையம் அருகே தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை

கச்சிராயப்பாளையம்:
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள பன்னிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பித்தன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமாயி (வயது 63).
நேற்று ராமாயி தனது மகன் சீனிவாசனிடம் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் கவலை அடைந்த சீனிவாசன் உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு அவரது தாய் இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும், உறவினர்களும் ராமாயியை அக்கம் பக்கத்தில் தேடினர்.
இந்த நிலையில் பன்னிப்பாடி-முண்டியூர் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ராமாயி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கரியாலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமாயியின் உடலை பார்வையிட்டனர். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. மேலும் அவரது உடல் அருகே ரத்தம் படிந்த நிலையில் கல் ஒன்றும் கிடந்தது.
எனவே மர்ம மனிதர்கள் ராமாயியை தாக்கி அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமா? என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தலையில் கல்லை போட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.