என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pre hostility"

    பண்ருட்டி அருகே வேலி பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த நடுசாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 50). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே வேலி பிரச்சினை உள்ளது.

    இதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ராமலிங்கத்தை ராஜேஷ், கல்கி, வேல்முருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாதவார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதேபோல் ராமலிங்கம், அவரது மகன் சிவக்குமார், சுந்தர் ஆகியோர் சேர்ந்து வேல்முருகனை தாக்கினர். இந்த மோதலில் வேல்முருகன், ராமலிங்கம் ஆகியோர் காயமடைந்து பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் ராமலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் ராஜேஷ், கல்கி, வேல்முருகன் ஆகிய 3 பேர் மீதும் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் சுந்தர், சிவக்குமார், ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையை சேர்ந்தவர் கோகுலராமகிருஷ்ணன் (வயது32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரவி (55) என்பவருக்கும் கருவேல மரங்கள் வெட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    அப்போது ரவி அரிவாளால் வெட்டியதில் கோகுல ராமகிருஷ்ணன் காயம் அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

    இதேபோல் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள வேடர்புளியங்குளத்தைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படி கருப்பு (40). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பழனியாண்டி (33) என்பவருக்கும் பொது பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

    சம்பவத்தன்று பழனியாண்டி தாக்கியதல் பதினெட்டாம்படி கருப்பு காயம் அடைந்தார்.

    இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியாண்டியை கைது செய்தனர்.

    ×