search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gun shooting"

    • சரத்குமாரின் 4 வயது மகன் அந்த ‘ஏர்கன்’ துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது
    • தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பான்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி (வயது 30). இவரது அண்ணன் சரத்குமாரின் 4 வயது மகன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு இச்சி மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தை சுற்றி திண்ணை போன்று அமைத்து இருந்தனர். அதில் 'ஏர்கன்' துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சரத்குமாரின் 4 வயது மகன் அந்த 'ஏர்கன்' துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென 'ஏர்கன்' துப்பாக்கியில் இருந்து குண்டு மின்னல் வேகத்தில் வெளியேறியது.

    அப்போது அந்த வழியாக வந்த தமிழரசின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் தமிழரசி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

    தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தமிழரசியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு தமிழரசிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் தமிழரசி பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

    அதன் விவரம் வருமாறு:-

    தமிழரசிக்கும், ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கட்டியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முருகனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும் (34), பெரியப்பா மகன் சதீஷ்குமாரும் (38) சேர்ந்து கோழி வளர்த்து வந்துள்ளனர். கோழி குஞ்சுகளை தூக்கி செல்ல கழுகு வருமாம். அந்த கழுகை விரட்டுவதற்காக 'ஏர்கன்' துப்பாக்கி வாங்கி வைத்துள்ளனர். அந்த துப்பாக்கியில் குண்டை போட்டு கழுகை சுடுவதற்காக தயாராக வைத்துள்ளனர்.

    இதனை சரத்குமாரின் 4 வயது மகன் எடுத்து விளையாடி உள்ளான். அப்போது சிறுவனின் கை பட்டு ஏர்கன்னில் இருந்து குண்டு வெளியேறி தமிழரசி மீது பாய்ந்து அவர் பலியானது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    தமிழரசி பலியானது தொடர்பாக அவருடைய அண்ணன் சரத்குமார், பெரியப்பா மகன் சதீஷ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்தபோது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிராங்க்ஸ் சுரங்கப்பாதை ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் ரெயிலுக்காக காத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இளைஞர்களை கொண்ட இரு குழுக்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர்.

    துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கி சூடு நடத்தியது யார்? எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ரெயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 34 வயதுடைய ஒருவர் பலியானார். ஒரு சிறுமி, ஒரு சிறுவன் உள்பட 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இது ஒரு தற்செயலான துப்பாக்கிச் சூடு என்று நாங்கள் நம்பவில்லை. தனி நபர் கண்மூடித்தனமாக ரெயில் அல்லது ரெயில் நிலையத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பவில்லை.

    இந்த சம்பவம் ரெயிலில் செல்லும் போது சண்டையிட்ட இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்தபோது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

    மக்கள் ரெயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் ஓடத் தொடங்கினர். மேலும் பிளாட்பாரத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கோபி அருகே தங்கையை துப்பாக்கியால் சுட்ட பங்காரு சாமியை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபி:

    கோபி அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மனைவி நதியா (வயது 28).

    தனியார் மில் ஒன்றில் கணேசமூர்த்தி ஊழியராக பணிபுரிகிறார். அதே மில்லில் அவரது மனைவி நதியா கேஷியராக உள்ளார்.

    தீபாவளியையொட்டி அதே பகுதியில் உள்ள தனது தந்தை சின்னசாமி வீட்டுக்கு நதியா சென்றார். இவருக்கும் இவரது அண்ணன் பங்காரு சாமிக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இருவருக்கும் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பங்காரு சாமிதான் வைத்திருந்த பலூன் சுடும் துப்பாக்கியால் நதியாவை சுட்டார். இதில் அவரது இடது தோள் பட்டையை குண்டு துளைத்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். இதை கண்ட பங்காரு சாமி அங்கிருந்து ஓடிவிட்டார்.

    துப்பாக்கி குண்டு பாய்ந்த நதியாவை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு நதியா வீடு திரும்பினார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தங்கையை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடிய அண்ணன் பங்காருசாமியை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் பங்காரு சாமியை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×