search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker murdered"

    • சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

    செங்கல்பட்டு:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி ஊரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார்.

    சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பம்மல், முத்தமிழ்நகர், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மனோகர் (65). இவர்கள் இருவரும் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது சக்திவேலுக்கும், மனோகருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 31-10-2011 அன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மீது செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனார்.

    இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி காயத்ரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் வையாபுரி ஆஜரானார்.

    திருப்பூர் பனியன் தொழிலாளி கொலையில் அவரது தம்பியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சரங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சரசு (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரசு மகனை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சிவக்குமார் தனது தாய் ரத்தினம்மாளுடன் வசித்து வந்தார்.

    ரத்தினம்மாள் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். முதல்மாடியில் வசித்து வருகிறார். தனியே வசிக்கும் மகனுக்காக வாடகை வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி தந்தார். அதில் அவர் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்த ரத்தினம்மாள் நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில் சிவக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமி‌ஷனர் நவீன்குமார், திருப்பூர் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சிவக்குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று துருவித்துருவி விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலையாளி அல்ல என்பதை போலீசார் அறிந்து அவரை விடுவித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணையை வேறு கோணத்தில் அணுகினர். கொலையான சிவக்குமாரின் நீண்ட நாள் நண்பர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, நேற்று காலை புதுக்காடு என்ற பகுதிக்கு நான் மது குடிக்க சென்றேன். அப்போது கொலையான சிவக்குமாரின் தப்பி ரமேஷ் மதுக்குடிக்க வந்தார். காலையில் அவர் மதுக்குடிக்க மாட்டார். ஏன் காலையிலேயே மதுக்குடிக்க வந்தாய்? என்று கேட்டபோது ரமேஷ் என்னிடம் எனது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியாக உள்ளதால் மது குடிக்க வந்தேன் என்று கூறினார். நீண்ட நாள் நண்பர் என்பதால் நான் ஓடி வந்து வீட்டில் பார்த்தபோது சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது என்று போலீசில் தகவல் கூறினார்.

    இதனையடுத்து போலீசார் கொலையான சிவக்குமாரின் தம்பி ரமேசை பிடித்து விசாரணை நடத்தினர். ரமேஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். கிடுக்கிப்பிடி விசாரணையில் சிவக்குமாரை கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக்கொண்டார்.

    போலீசில் அவர் கொடுத்து வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தோம். மாடியில் நாங்கள் குடியிருந்து வருகிறோம். குடிப்பழக்கத்தால் மனைவி, மகனை பிரிந்த அண்ணன் வசிக்க 3 வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி கொடுத்தோம். ஆனால் அண்ணன் தினமும் குடித்து விட்டு வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்தார். கொலையான முதல்நாள் இரவும் தகராறு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அண்ணன் வீட்டில் இருந்தார். தகராறு செய்ததை தட்டிக்கேட்க சென்றேன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன் என்னை குத்த கத்தியை எடுத்து வந்தார். சுதாரித்துக்கொண்ட நான் கத்தியை அவரிடம் இருந்து பறித்து அவரை 10 முறை சரமாரியாக குத்தினேன். அப்போது அக்கம் பக்கத்தினர் வேலைக்கு சென்றிருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.

    கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் அண்ணன் இறந்து விட்டார். அவர் இறந்த பின்னர் கதவை லேசாக சாத்திவிட்டு நான் வீட்டுக்கு சென்று விட்டேன். கொலையில் இருந்து தப்பிக்க விடிய விடிய திட்டமிட்டேன்.

    விடிந்ததும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற அம்மா ரத்தினம்மாள் ஊர் திரும்பி விட்டதாகவும், தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு போனில் கூறினார். இதனையடுத்து நான் மோட்டார் சைக்கிளில் தாயை அழைத்துக்கொண்டு வீட்டில் இறங்கி விட்டு விட்டு புதுக்காடு மதுக்கடைக்கு சென்றேன். அங்கு நான் பதட்டமாக இருப்பதை பார்த்த அண்ணனின் நண்பர் விசாரித்தார். அப்போது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினேன். அண்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து தாய் கதறியதையடுத்து சம்பவம் வெளியே தெரிந்தது.

    உடனே வீட்டுக்கு சென்று நான் போலீசில் புகார் செய்தேன். போலீசார் வாடகைக்கு குடியிருந்த வாலிபரை விசாரணைக்கு அழைத்துச்சென்றதால் நான் தப்பித்து விட்டேன் என்று நம்பினேன். ஆனால் போலீஸ் விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து போலீசார் ரமேசை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலையான சில மணி நேரங்களிலேயே கொலையாளியை கண்டுபிடித்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    காரைக்குடி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சின்னையா (வயது 60). கூலித்தொழிலாளி. இவரது மகன் சுப்பையா (35).

    நேற்று அந்தப்பகுதியில் பாட்டையா முனியசாமி கோவில் திருவிழா நடந்தது. திருவிழா ஊர்வலத்தின் போது இளைஞர்கள் சிலர் மது அருந்தி ஆட்டம் போட்டுச் சென்றனர். அவர்களை சுப்பையா கண்டித்தார்.

    இதனைத் தொடர்ந்து அங்கு நின்ற மற்றவர்களும், இளைஞர்களை சத்தம் போட்டனர். இதனால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    அதன் பிறகு இரவு 9 மணியளவில் 5 இளைஞர்கள் சுப்பையா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கதவை தட்டியதும், சின்னையா கதவை திறந்தார்.

    அவரிடம், ‘உனது மகனை வெளியே அனுப்பு, அவனை அடிக்காமல் விட மாட்டோம்’ என வாக்குவாதம் செய்தனர். ‘மகன் இங்கு இல்லை’ என சின்னையா கூறியபோதும் ‘வீட்டு முன்பு மோட்டார் சைக்கிள் நிற்கிறது. எனவே அவன் உள்ளே தான் இருப்பான், அவனை கொலை செய்வோம்’ என இளைஞர்கள் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த சின்னையா அவர்களிடம் வாக்குவாதம் செய்தார்.

    அப்போது வீட்டு முன்பு கிடந்த இரும்பு பலகையை எடுத்து சின்னையாவை, இளைஞர்கள் தாக்கினர். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் சின்னையாவை மீட்டு காரைக்குடி மற்றும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சின்னையா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நாச்சியப்பன் மகன்கள் ராஜா (19), ராஜேஷ் (18), ரவிச்சந்திரன் மகன் பாண்டியராஜன் (18), முத்து மகன் பாலசுப்பிரமணியன், மாரியப்பன் மகன் பழனிக்குமார் ஆகிய 5 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இதில் ராஜா, ராஜேஷ், பாண்டியராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ×