என் மலர்
நீங்கள் தேடியது "brother killed"
- பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் , பிரபு , இளையராஜா.
- இளையராஜா, தனது மூத்த அண்ணனிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமலக்கண்ணன் (வயது 41), பிரபு (38), இளையராஜா (35). இவர்கள் சகோதரர்கள். விவசாயம் செய்து வருகின்றனர். இதில் கமலக்கண்ணனுக்கு திருமணமாகி விட்டது. மீதமுள்ள 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இவர்களுக்குள் சொத்து பிரிப்பதில் நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் இளையராஜா, தனது மூத்த அண்ணனிடம் சொத்தை பிரித்து பாகப் பிரிவினை பத்திரம் எழுதி கேட்டுள்ளார். இதில் கமலக்கண்ணனுக்கும் இளையராஜாவிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், அருகிலிருந்த இரும்பு கம்பியால் இளையராஜாவை தாக்கினார். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்த இளையராஜா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கும், பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இளையராஜ் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கமலக்கண்ணனுடன் இருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
சொத்தை பிரித்து கேட்ட தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் திருநாவலூர் பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன இளையராஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து கேட்டு அவரது தந்தை ஏழுமலையை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது39). இவருடைய தம்பி ராஜேஷ்(31). இவர்கள் பரமேஸ்வரன் காலனியில் எதிர் எதிர் வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளாக வெளியூரில் வேலை பார்த்து வந்த ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை சின்னப்பனும், ராஜேசும் தங்கள் வீடுகளில் இருந்தனர். அப்போது திடீரென இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சின்னப்பன் தனது வீட்டில் இருந்து கூர்மையான ஆயுதமான சுளுக்கியை எடுத்து வந்து ராஜேசை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுப்பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து சின்னப்பனை பிடித்து வைத்துக்கொண்டு திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னப்பனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ராஜேசுக்கு திருமணமாகி செல்வராணி என்ற மனைவி உள்ளார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பாலத்தோட்டனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த சித்தப்பா மகன்கள் மாதேஷ் (வயது 28), கிருஷ்ணா (21). இவர்கள் 2 பேரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.
இதில் கிருஷ்ணா வேலை செய்யாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளார். அண்ணனிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கி செலவு செய்து வந்தார். நேற்று இரவு குடிப்பதற்காக பணம் கேட்டார். ஆனால் மாதேஷ் பணம் கொடுக்கவில்லை. இதனால் அண்ணன், தம்பி 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கத்தி எடுத்து வந்த கிருஷ்ணா மாதேசை குத்தினார். உறவினர்கள் தடுத்து கத்தியை பிடுங்கினார்கள். ஆத்திரம் தீராத கிருஷ்ணா அரிவாளை எடுத்து வந்து அண்ணனின் தலையில் பின்பக்கம் அடித்தார். இதில் அவர் சுருண்டு விழுந்தார்.
பின்னர் அங்கிருந்து கிருஷ்ணா தப்பி ஓடிவிட்டார். சுருண்டு விழுந்த மாதேசை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இந்த கொலை குறித்து தளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து கிருஷ்ணாவை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை தெலுங்குபாளையம் அருகே உள்ள பாரதி வீதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரர் சவுந்தர்ராஜன் (30). வேலைக்கு செல்லும் இவர் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். பலமுறை குடிபழக்கத்தை கைவிடுமாறு சுந்தர்ராஜன் கூறியும் சவுந்தர்ராஜன் கேட்கவில்லை.
சம்பவத்தன்றும் சவுதர் ராஜன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தனது அண்ணனிடம் தகராறு செய்தார். இதனை அண்ணனின் மனைவி தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சவுந்தர்ராஜன் அவரை தரக்குறைவாக பேசினார். தனது மனைவியை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜன் வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து சவுந்தர் ராஜனின் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் சுந்தர்ராஜன் செல்வபுரம் போலீசில் சரணடைந்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சவுந்தர்ராஜனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கொன்ற சுந்தர்ராஜனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் அருகே தம்பியை உருட்டுக்கட்டையால் அண்ணன் அடித்து கொன்றார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குருகூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன்கள் கலைச்செல்வன் (வயது 42). செந்தில்குமார் (39).
இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார், மதுகுடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு நின்ற கலைச்செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் கலைச்செல்வனின் மனைவி மாலா, மகன் விமல் ஆகியோர் செந்தில்குமாரை தட்டிக் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அவர்களையும் சத்தம் போட்டு திட்டினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வன் ஆவேசத்துடன்அருகே கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து செந்தில்குமாரை, சரமாரியாக தாக்கினார். மேலும் மாலாவும், விமலும் சேர்ந்து தாக்கினர்.
3 பேரும் தாக்கியதால் செந்தில்குமார் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போதையில் தகராறு செய்த தம்பியை அவரது அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது மகன் என 3 பேரும் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகூர்:
கிருமாம்பாக்கம் ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் தொழில் அதிபர். இவரது மனைவி பத்மாவதி. இவர் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவர்களது மகன்கள் விக்னேஷ் (19), பிரவீன்குமார் (16).
விக்னேஷ் தாகூர் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டும், பிரவீன்குமார் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1-ம் படித்து வந்தனர்.
இன்று காலை புத்தகம் வாங்குவதற்காக விக்னேசும், பிரவீன்குமாரும் புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர்.
விக்னேஷ்மோட்டார் சைக்கிளை ஓட்ட, பிரவீன்குமார் பின்னால் அமர்ந்து வந்தார். வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்த போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட விக்னேசும், பிரவீன்குமாரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரவீன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து விக்னேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக், ஏட்டு புவனேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து சம்பவம் காரணமாக கிருமாம்பாக்கம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி அருகே கீழகுப்பம் காலனியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள். குடும்ப பிரச்சினை காரணமாக வீரமுத்துவை பிரிந்து பழனியம்மாள் சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று வீரமுத்து, தன்னுடைய அண்ணன் சக்திவேலிடம்(50) என்னுடைய மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல் கீழே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து வீரமுத்துவை சரமாரியாக தாக்கினார். இதில் வீரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர். #tamilnews
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாயக்கர்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி, கணேசன் (வயது38). அண்ணன்-தம்பிகளான இவர்கள் அறந்தாங்கியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை இருவரும் ஓட்டலுக்கு வேலைக்கு சென்றனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி கத்தியால் கணேசனை குத்த முயன்றார். இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பியோடினார்.
இருப்பினும் வெள்ளைச்சாமி, கணேசனை துரத்தி சென்று சரமாரியாக கத்தியால் குத்திக்கொன்றார். நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெள்ளைச்சாமியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






