search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கை"

    • கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார்.
    • முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார்.

    தொட்டியம்:

    கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை கருப்பம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 25) கோவையில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கரூர் வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த கோபிகா (வயது 19) என்பவரை கடந்த 11ந் தேதி காதலித்து திருமணம் செய்தார். கிருஷ்ண மூர்த்திக்கு அந்தப் பெண் தங்கை உறவு முறை என்பதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இருவரையும் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று கோபிகாவின் உறவினர்கள் கங்கணம் கட்டினர்.

    பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் கோபிகாவை பிரித்தனர்.

    இருப்பினும் அவர் காதல் கணவருடன் வாழ்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து சில தினங்களில் பெற்றோரின் பிடியிலிருந்து தப்பி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து கொண்டார்.

    பின்னர் அவர் காதல் மனைவியை கோவைக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்த தொடங்கினார். இந்நிலையில் ஏற்கனவே நடந்த ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டம் தொட்டியம் நீதி மன்றத்திற்கு கிருஷ்ண மூர்த்தி ஆஜராக வந்தார்.

    முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார். இதனை மோப்பம் பிடித்துக் கொண்ட கோபிகாவின் உறவினர்கள் மீண்டும் அவர்களை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என திட்டமிட்டு நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய கிருஷ்ண மூர்த்தியை காரில் கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கரூர் மாவட்டம் ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநாத் (24), அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (25), கரூர் கோயம்பள்ளி பகுதியை சேர்ந்த சரவணன் (29), அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கோபிகாவை கடத்திச் செல்லும் முடிவில் கடத்தல் புள்ளிகள் வந்தனர். ஆனால் கிருஷ்ணமூர்த்தி அவரை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு வந்ததால் வேறு வழியில்லாமல் கிருஷ்ண மூர்த்தியை கடத்தியுள்ளனர்.

    கைதான நான்கு பேரும் கோபிகாவின் நெருங்கிய உறவினர்கள் என்றனர்.

    தங்கை உறவுமுறை கொண்ட இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த விவகாரத்தில் புது மாப்பிள்ளை கடத்தப்பட்ட சம்பவம் தொட்டியம் மற்றும் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • தாயாரை ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே ஆற்றூர் புல்லாணிவிளை பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 32), கர்ப்பிணியாக உள்ளார். இவர் தன் தாய் வீட்டில் இருக்கும்போது இவரது அண்ணன் செந்தில் (37) வந்து கவிதாவை அவதூறாக பேசி தாக்க முயற்சித்தார். இதனை கவிதாவின் தாயார் தங்கம் தடுக்க வந்தார். அப்போது செந்தில் தன் தாயாரை தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் அடிப்பட்டது. கவிதா தன் தாயாரை ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதுபற்றி கவிதா கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் செந்தில் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×