ஆற்றூர் அருகே தாய்-தங்கை மீது தாக்குதல்

திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தாயாரை ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே ஆற்றூர் புல்லாணிவிளை பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 32), கர்ப்பிணியாக உள்ளார். இவர் தன் தாய் வீட்டில் இருக்கும்போது இவரது அண்ணன் செந்தில் (37) வந்து கவிதாவை அவதூறாக பேசி தாக்க முயற்சித்தார். இதனை கவிதாவின் தாயார் தங்கம் தடுக்க வந்தார். அப்போது செந்தில் தன் தாயாரை தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் அடிப்பட்டது. கவிதா தன் தாயாரை ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதுபற்றி கவிதா கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் செந்தில் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com