search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாப்பிள்ளை"

    • சாலையில் நடந்து சென்ற சிறுமியின் கை வாகனத்தின் கண்ணாடியில்பட்டது.
    • திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே உள்ள வடக்கன்நாடு பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 28), லாரி டிரைவர்.

    நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து பூவன் கோடு நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சாலையில் நடந்து சென்ற சிறுமியின் கை வாகனத்தின் கண்ணாடியில் பட்டது.

    இதனால் நவீன், தனது வாகனத்தை திருப்பிய போது எதிரே வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் நவீன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் உறவினர்களும் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நவீன் பரிதாபமாக இறந்தார். இவருக்கு திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    விபத்து குறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் டிரை வரை போலீசார் தேடி வருகிறார்கள். திரும ணமான 8 மாதத்தில் புது மாப்பிளை விபத்தில் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார்.
    • முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார்.

    தொட்டியம்:

    கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை கருப்பம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 25) கோவையில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கரூர் வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த கோபிகா (வயது 19) என்பவரை கடந்த 11ந் தேதி காதலித்து திருமணம் செய்தார். கிருஷ்ண மூர்த்திக்கு அந்தப் பெண் தங்கை உறவு முறை என்பதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இருவரையும் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று கோபிகாவின் உறவினர்கள் கங்கணம் கட்டினர்.

    பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் கோபிகாவை பிரித்தனர்.

    இருப்பினும் அவர் காதல் கணவருடன் வாழ்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து சில தினங்களில் பெற்றோரின் பிடியிலிருந்து தப்பி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து கொண்டார்.

    பின்னர் அவர் காதல் மனைவியை கோவைக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்த தொடங்கினார். இந்நிலையில் ஏற்கனவே நடந்த ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டம் தொட்டியம் நீதி மன்றத்திற்கு கிருஷ்ண மூர்த்தி ஆஜராக வந்தார்.

    முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார். இதனை மோப்பம் பிடித்துக் கொண்ட கோபிகாவின் உறவினர்கள் மீண்டும் அவர்களை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என திட்டமிட்டு நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய கிருஷ்ண மூர்த்தியை காரில் கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கரூர் மாவட்டம் ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநாத் (24), அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (25), கரூர் கோயம்பள்ளி பகுதியை சேர்ந்த சரவணன் (29), அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கோபிகாவை கடத்திச் செல்லும் முடிவில் கடத்தல் புள்ளிகள் வந்தனர். ஆனால் கிருஷ்ணமூர்த்தி அவரை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு வந்ததால் வேறு வழியில்லாமல் கிருஷ்ண மூர்த்தியை கடத்தியுள்ளனர்.

    கைதான நான்கு பேரும் கோபிகாவின் நெருங்கிய உறவினர்கள் என்றனர்.

    தங்கை உறவுமுறை கொண்ட இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த விவகாரத்தில் புது மாப்பிள்ளை கடத்தப்பட்ட சம்பவம் தொட்டியம் மற்றும் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காலை சரஸ்வதி வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அன்பழகனை பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை
    • வடசேரி போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள்

    நாகர்கோவில் :

    மார்த்தாண்டம் தெங்கன் குழி விளை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 33), கொத்தனார்.

    இவர் சரஸ்வதி (21) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அன்பழகன்-சரஸ்வதி தம்பதியினர் நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியில் வசித்து வந்தனர். சரஸ்வதி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் அன்பழகன் மட்டும் இருந்தார்.

    நேற்று காலை சரஸ்வதி வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அன்பழகனை பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக சரஸ்வதி பார்த்த போது அன்பழகன் தூக்கில் பிணமாக தூங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இத னால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வடசேரி போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட அன்பழகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட் டுள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடைய ஏற்பட்ட தகராறில் சரஸ்வதி வீட்டில் இருந்து அன்பழகன் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அன்பழ கன் தற்கொலை செய்து இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விக்டர்ஜோஸ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • தக்கலை அருகே பட்டாணிகுளம் வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது, கார் ஓட்டி வந்த விக்டர் ஜோஸ் சம்பவ இடத்திலே பலியானார்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்தவர் விக்டர்ஜோஸ் (வயது 36 ). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் தற்போது புலியூர்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு விக்டர் ஜோஸ் தனது நண்பர் சோபனுடன் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு சென்றுவிட்டு காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். தக்கலை அருகே பட்டாணிகுளம் வந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது, கார் ஓட்டி வந்த விக்டர் ஜோஸ் சம்பவ இடத்திலே பலியானார். பின் இருக்கையில் அமர்ந்து இருந்த சோபன் லேசான காயத்துடன் தப்பினார். இது சம்பந்தமாக பஸ் டிரைவர் ரவீந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×