search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "study cost"

    கோவை மாணவி சிவரஞ்சனி தொடர்ந்து கல்லூரியில் படிப்பதற்கும், அவருடைய சகோதரர் பள்ளியில் படிப்பதற்கும் ஆகும் செலவை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம், காளிதிம்பம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகள் சிவரஞ்சனி. தனது தாய், தந்தை மறைவுக்குப் பிறகு, தன்னுடைய சகோதரர் ஹரிபிரசாந்த்தை தொடர்ந்து படிக்க வைப்பதற்காக, கோவை அரசு கலைக்கல்லூரியில் தான் படித்து வந்த பி.ஏ. படிப்பினை நிறுத்தி விட்டு, 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதாகவும், தனக்கு அரசு வேலையோ அல்லது தொடர்ந்து படிப்பதற்கு உதவியோ தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று ஊடகத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.




    சிவரஞ்சனியின் பேட்டியை தொலைகாட்சியில் 21-ந்தேதி அன்று காலை நான் பார்த்தேன். ஏழை எளிய மக்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அம்மாவின் வழியில் செயல்படும் அரசு, சிவரஞ்சனி தொடர்ந்து கோவை அரசு கலைக் கல்லூரியில் படிப்பதற்கும், அவருடைய சகோதரர் ஹரிபிரசாந்த் தாளவாடி உண்டு உறைவிடப்பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கும். அவர்கள் இருவரும் தொடர்ந்து படிப்பதற்கு ஆகும் செலவை அரசே ஏற்கும். இதற்கான உத்தரவை நான் பிறப்பித்துள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami


    தாராபுரம் அருகே படிப்பு செலவுக்காக விவசாய கூலி வேலைக்கு வந்த நர்சிங் மாணவி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தாராபுரம்:

    திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிகளில் ஏராளமானோர் வந்து தங்கி விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள்.

    இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகள் சரஸ்வதி (வயது 23). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    படிப்பு செலவுக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு 80 கி.மீட்டர் தூரமுள்ள தாராபுரம் அலங்கியம் பகுதிக்கு அந்த ஊரை சேர்ந்த பெண்களுடன் வேனில் விவசாய கூலி வேலைக்கு வந்தார். 4 நாட்களாக சின்ன வெங்காய அறுவடை வேலை செய்தார். வேலை முடிந்ததும் தோட்ட உரிமையாளர் ஒதுக்கி கொடுத்த ஒரு குடிசையில் தூங்கினார்.

    சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து தூங்கிய போது சரஸ்வதியின் காலில் பாம்பு கடித்தது. அதிர்ச்சியடைந்த மற்ற பெண்கள் அவரை நாட்டு வைத்தியரிடம் அழைத்துச்சென்றனர். அங்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. இருந்தாலும் நிலைமை மோசமடைந்தது.

    இதனையடுத்து சரஸ்வதியை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    குண்டம் அருகே வந்தபோது வரும் வழியிலேயே நர்சிங் மாணவி சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×