search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto Driver"

    • சந்தானத்திற்கும், பயணி ராமுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சிகிச்சை அளித்த டாக்டர்கள் கை விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

    திருவான்மியூர்:

    வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் ராமு. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்து திருவான்மியூர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றார். டிரைவராக சந்தானம் இருந்தார். ஆட்டோ சென்று கொண்டு இருந்தபோது டிரைவர் இருக்கையின் பின்புறம் உள்ள கம்பியில் ராமு தனது காலை வைத்ததாக தெரிகிறது. இதற்கு டிரைவர் சந்தானம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சந்தானத்திற்கும், பயணி ராமுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த டிரைவர் சந்தானம் ஆட்டோவில் இருந்த கம்பியால் ராமுவை தாக்கினார். மேலும் ராமுவின் கை சுண்டு விரலை துண்டாக கடித்து துப்பினார். இதில் ரத்தம் வடிந்த நிலையில் துடித்த ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கை விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சந்தானத்தை கைது செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார்.
    • ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பெருமாளகரம் பட்டத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஆறுமுகம் (வயது 49). ஆட்டோ டிரைவர். இவர் இன்று காலை தஞ்சை அருகே குன்னம்- கொரடாச்சேரிக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தலைமை காவலர்கள் சரவணசெல்வம், கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு நகர சாலைகளில் தஷ்ரத் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
    • ஓலா மற்றும் ரேபிடோ என 2 செயலிகளிலும் சவாரி கேட்டு பரிந்துரை வந்துள்ளது.

    கார், ஆட்டோ சவாரிக்கும் கூட ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தும் நிலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் பெங்களூரில் ஒரு ஆட்டோ டிரைவர் ஒரே நேரத்தில் 2 சவாரிக்கு ஒப்புக்கொண்டது தொடர்பான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு நகர சாலைகளில் தஷ்ரத் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இவருக்கு ஓலா மற்றும் ரேபிடோ என 2 செயலிகளிலும் சவாரி கேட்டு பரிந்துரை வந்துள்ளது. 2 சவாரிகளும் வேறு, வேறு இடத்திற்கு முன்பதிவுக்காக வந்த நிலையில் இரு சவாரிகளையும் தஷ்ரத் ஒப்புக்கொண்டுள்ளார். வேறு, வேறு போன்களில் இருந்த வேறு, வேறு செயலிகள் வழியாக 2 இடங்களுக்கு ஒரே நம்பர் உள்ள ஆட்டோவில் தஷ்ரத் ஒப்புதல் அளித்துள்ள போனின் ஸ்கிரீன்ஷாட்டை ஹர்ஷ் என்ற பயனர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பீக் பெங்களூரு என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிண மாக கிடந்தார்.
    • இதுகுறித்து செல்வம் திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பண்ணக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (57). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 17 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர்.

    பிணமாக கிடந்தார்

    கடந்த 7-ந் தேதி மாலை விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இதுகுறித்து செல்வம் திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமி உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜய லட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சாவில் சந்தேகம்

    இதனிடையே பிரேத பரிசோ தனைக்கு பிறகு விஜயலட்சுமி உடல் மறு நாள் உறவினர்களி டம் ஒப்ப டைக்கப்பட்டது. அப்போது விஜயலட்சுமி யின் முகத்தில் காயங்கள் இருந்ததாக கூறப்ப டுகிறது. இதனால் அவரது உறவி னர்கள் விஜயலட்சுமி யின் சாவில் சந்தேகம் இருப்ப தாக போலீசாரிடம் தெரி வித்தனர். இதை தொடர்ந்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வர்மன், டவுன் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீ சார் நேரில் சென்று விஜய லட்சுமியின் குடும்பத்தாரி டம் விசாரணை நடத்தினர்.

    கிடுக்கிப்படி விசாரணை

    அப்போது விஜயலட்சுமி யின் கணவர் செல்வத்திடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் செல்வத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதன் விவரம் வருமாறு:-கடந்த 18 வருடங்களுக்கு முன்பு செல்வம் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணி யாற்றி உள்ளார். அப்போது விஜயலட்சுமி ஒரு கடையில் ஊழியராக வேலை செய்துள்ளார். வேலைக்கு செல்வதற்காக மினிபஸ்சில் தினமும் வந்து சென்றபோது, செல்வத் திற்கும் விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    24 வயது வித்தியாசம்

    இதையடுத்து வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்க ளுக்குள் 24 வயது வித்தி யாசம் உள்ளது. முதலில் இரு வரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். பின்னர் வயது வித்தி யாசம் காரண மாக இருவ ருக்குள்ளும் பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் செல்வம் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இத னால் தினமும் குடித்துவிட்டு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று மாலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் விஜயலட்சுமியை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை நாடகம்

    இதையடுத்து விஜய லட்சுமி உடலை மின்விசிறி யில் தூக்கில் மாட்ட முயற்சி செய்துள்ளார்.ஆனால் முடியா ததால், துப்பட்டா கழுத்தில் சுற்றப்பட்ட நிலையில் விஜய லட்சுமி உடலை வைத்துக் கொண்டு உறவினர்க ளிடம் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி கதறி அழுது நாடகமாடி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதை யடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மனை வியை கொலை செய்த ஆட்டோ டிரைவர் செல்வத்தை கைது செய்தனர்.

    அவரது வாக்கு மூலத்தில் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொ ண்டார். இதை யடுத்து போலீ சார் அவரை திருச்செங்கோ டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மனமுடைந்த கருணாநிதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
    • புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கதிர்காமம் அருகே தட்சணாமூர்த்தி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது50). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேன்மொழி. கடந்த சில நாட்களாக கணவன்-மனை விக்கி டையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல்  அவர்களிடைேய குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கருணாநிதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கவுதம் தரப்பினருக்கும், ஆட்டோ டிரைவர் காமேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் காமேஷ் (வயது25). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு ஒரகடம் அய்யப்பன் தெரு சந்திப்பு அருகே ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் அருகே வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர் நண்பர்களுடன் நடுரோட்டில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    இதனை ஆட்டோ டிரைவர் காமேஷ் கண்டித்தார். மேலும் ஆட்டோ செல்ல வழிவிடுமாறு கூறினார். இதனால் கவுதம் தரப்பினருக்கும், ஆட்டோ டிரைவர் காமேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த கவுதம் தரப்பினர் மறைத்து வைத்துருந்த கத்தி, அரிவாளால் காமேசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த காமேஷ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அலறல் சத்தம்கேட்டு அப்பகுதிக்கு வந்த காமேசின் தம்பி சதீசையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவரது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட காமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த சதீஷ் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கவுதமுடன் அவரது நண்பர்கள் 10 பேர் இருந்ததாக தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்தநாள் கொண்டாடத்தின் போது ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாழுமுனிக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி தேர்முட்டி வீதியைச் சேர்ந்தவர் வாழுமுனி (வயது 40). ஆட்டோ டிரைவர். வாழுமுனிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று வாழுமுனி குடும்பத்துக்கும், ஹரிகிருஷ்ணன் குடும்பத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு குடும்பத்தினருக்கு இடையே கை கலப்பு ஏற்பட்டது. அப்போது ஹரிகிருஷ்ணன் மகன் செந்தில்குமார், அவரது மனைவி சுமதி ஆகியோர் தாங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை ஏவி வாழுமுனியை கடிக்க விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாழுமுனியின் மனைவி சங்கரி மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோரையும் அவர்கள் தாக்கினர்.

    அவர்கள் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றபோது, செந்தில்குமாரின் உறவினர்களான சிங்காரவேலன், மாதேஷ் ஆகியோர் மீண்டும் வாழுமுனியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து வாழுமுனி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சண்முகம் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
    • நேற்று நள்ளிரவு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்: 

    கடலூர் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் சண்முகம் (45). ஆட்டோ டிரைவர். இவர், கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் அவர் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டுக்கு செல்லாமல் அந்த பகுதியிலேயே படுத்து உறங்குவார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முபாரக் ஆட்டோவை ரோட்டோரத்தில் நிறுத்தினார்.
    • முபாரக்கை பரிசோதனை செய்த போது அவர் இறந்தது தெரிய வந்தது.

    கோவை,

    கோவை தெற்கு உக்கடம் பிலால் நகரை சேர்ந்தவர் முபாரக் (வயது 48). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் உக்கடத்தில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு பயணிகளை ஏற்றி சென்றார்.

    பின்னர் பயணிகளை அங்கு இறக்கி விட்டு சர்பவாசலில் இருந்து தண்ணீர் பந்தல் செல்லும் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். முபாரக் ஆட்டோவை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்து கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்சு ஊழியர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று முபாரக்கை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த முபாரக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடைக்குள் பதுங்கி இருந்த 2 கொலையாளிகளையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • கொலை சம்பவத்தின் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்தி கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    சென்னை:

    சென்னை வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் தினேஷ். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    கிண்டி மடுவங்கரை வண்டிக்காரன் தெருவில் நேற்று இரவு 9 மணி அளவில் இவர் சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்தது. அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதை பார்த்ததும் தினேஷ் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்து ஓடினார்.

    அப்போது 6 பேரும் விடாமல் தினேசை விரட்டிச்சென்றனர். இதையடுத்து கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மளிகை கடையில் தினேஷ் புகுந்தார். இருப்பினும் 6 பேரில் 2 பேர் கடைக்குள் புகுந்து தினேசை சரமாரியாக வெட்டினர். இதில் கடைக்குள்ளேயே தினேஷ் துடி துடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    ஆள்நடமாட்டம் அதிகம் இருந்த நேரத்தில் மிகவும் துணிச்சலாக அரங்கேறிய இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கொலையாளிகள் கடைக்குள் புகுந்து வெட்டிய போது வெளிப்புறமாக கடையின் ஷட்டர் பூட்டப்பட்டதால் கொலையாளிகள் இருவரும் கடைக்குள்ளேயே மாட்டிக்கொண்டனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தினேசின் உடலை மளிகை கடையில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடைக்குள் பதுங்கி இருந்த 2 கொலையாளிகளையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களது பெயர் மணி கண்டன், உதய் என்பது தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கொலை சம்பவத்தின் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்தி கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    இதன்படி கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, மேற்பார்வையில் துணை கமிஷனர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

    உதவி கமிஷனர்கள் ரூபன், சிவா ஆகியோரும் களமிறக்கப்பட்டனர். இதில் புழல் சிறையில் இருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவனின் தூண்டுதலின் பேரிலேயே ஆட்டோ டிரைவர் தினேஷ் கொலை செய்யப்பட்டிருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் இருவரையும் அந்த ரவுடியே அனுப்பி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை தொடர்ந்து இதன் பின்னணி தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொலையுண்ட ஆட்டோ டிரைவர் தினேசிடம் ரவுடியும் அவனது கூட்டாளிகளும் பணம் கேட்டு மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலே கொலையில் முடிந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து போலீசார் ரவுடிகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான பணிகளை தொடங்கியுள்ளனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனரான சந்தீப்ராய் ரத்தோர் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

    • செல்போன் மற்றும் மணிபர்ஸ் மறந்து விட்டார்
    • போலீசார் டிரைவரை பாராட்டினர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கள்ளூர், ஜெமினி நகரை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 30) ஆட்டோ டிரைவர்.

    இவர் நேற்று குடியாத்தம் பஸ் நிலையத்தில் இருந்து பிச்சனூர் பகுதிக்கு பெண் ஒருவரை ஏற்றி சென்றார்.

    அந்த பெண் பலமநேர் சாலை அரசமரம் அருகே இறங்கி சென்றார். இதனையடுத்து ஜெயவேலு வேறு இடத்திற்கு சவாரிக்கு சென்றார்.

    அப்போது ஜெயவேல் திடீரென ஆட்டோவில் திரும்பி பார்த்தபோது, பெண் செல்போன் மற்றும் மணிபர்ஸ் தவறவிட்டு சென்றது தெரிந்தது. பின்னர் ஜெயவேலு செல்போன் மற்றும் மணிபர்சை குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் செல்போன் மற்றும் பணத்தை தவறவிட்ட, பிச்சனூர் பகுதியை சேர்ந்த லாவண்யாவிடம் ஒப்படைத்தனர். பயணி தவறவிட்ட பொருட்களை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பாராட்டினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.
    • தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாபுவை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கவரை பாபுவிடம் கொடுத்தார். அதை பிரித்துப்பார்த்த பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் பல ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    இந்த பணம் என்று பாபு பேசத்தொடங்கியதும், எதிரில் நின்ற நபர் என் பயண கடன்...அதைத்தான் தற்போது தீர்க்க வந்துள்ளேன் என்று கூறி புதிர்போட்டார். எதுவும் புரியாமல் விழிபிதுங்கி நின்ற பாபுவிடம் உங்கள் கையில் 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அது உங்களுக்குத்தான் வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த நபர் கூறினார்.

    மேலும், அவர் தான் திருவனந்தபுரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், தனது பெயர் அஜித் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன்பிறகு அந்த பணத்தை கொடுத்ததற்கான காரணத்தை தெரிவித்தார். அதன்விவரம் வருமாறு:-

    கடந்த 1993-ம் ஆண்டு நான் சங்கனாச்சேரியில் பி.எட். படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது மங்கலத்துநடையில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு மூவாற்றுப்புழா செல்ல பஸ்சிற்காக காத்து நின்றேன். பஸ் வராததால் ஆட்டோவில் செல்ல முடிவு செய்தேன். ஆனால் என்னிடம் பஸ்சில் செல்வதற்கான பணம் மட்டுமே கையில் இருந்தது. அப்போது ஆட்டோ டிரைவரிடம் ரூ.100 பிறகு தருவதாக கூறி வீட்டிற்கு சென்றேன்.

    இடைப்பட்ட காலத்தில் பல முறை உங்களை சந்தித்து ஆட்டோ கட்டணத்தை கொடுக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. வாய் வார்த்தை என்றாலும் கூட அதுவும் கடன்தானே. இப்போது ரூ.100 பெரிய தொகையல்ல. அந்த காலத்தில் அது பெரிய தொகை. என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.

    தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது. தங்களை சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ஆதலால் ரூ.100-க்கு பதிலாக ரூ.10 ஆயிரம் தந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அப்போதுதான் பாபுவிற்கும் அந்த பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள பாபு மறுத்தார். அதே நேரம் விடாப்பிடியாக அன்புடன் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அஜித் கூறினார். ரூ.100 கடனை 30 ஆண்டுகள் கடந்தும் நேர்மையுடன் ரூ.10 ஆயிரமாக ஆசிரியர் திருப்பி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×