என் மலர்
நீங்கள் தேடியது "Trisha"
- வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
- இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் 6 வில்லன்கள் என்றும் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் உள்ளிட்ட பலரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது. இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்து இருந்தார்.

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரிஷா தற்போது மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்து வருகிறார்.
- மணிரத்னம் இயக்கியுள்ள "பொன்னியின் செல்வன்-1" படத்தின் போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.
- இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன்-1" வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவையாக திரிஷாவும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் திரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து அவரை கலாய்த்துள்ளார். அதில், "இளவரசி... ப்ளீஸ் உங்களின் லைவ் லொக்கேஷனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை ட்ராப் ஆஃப் பண்ணனும்" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இளவரசி😁😁😁😁
— Actor Karthi (@Karthi_Offl) July 7, 2022
Please send me live location,
உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்! https://t.co/IaP3xbP5p4
இதற்கு பதிலளித்து பதிவிட்ட திரிஷா, சாரி, அரண்மனையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஸ்மார்ட் ஆட்களுக்கு அனுமதி இல்லை என்று பதிலளித்துள்ளார். இவர்களின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed. https://t.co/7k2tXHdz1E
— Trish (@trishtrashers) July 7, 2022
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பொன்னியின் செல்வன்-1".
- "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.குந்தவை

வந்தியத்தேவன் - ஆதித்ய கரிகாலன்
இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது.

நந்தினி
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விக்ரம், ஆதித்ய கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், கார்த்தி, வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் மற்றும் ஐஸ்வர்யா ராய், நந்தினி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

குந்தவை
தொடர்ச்சியாக இப்படத்தின் அறிவிப்புகளை கொடுத்து வரும் படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் திரிஷா, குந்தவை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு திரிஷாவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஆண்களின் உலகில், தைரியமான பெண். குந்தவை இளவரசி! என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
In a world of men, a woman of courage. Presenting Princess Kundavai! #PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! 🗡️@LycaProductions #ManiRatnam @arrahman pic.twitter.com/DgqCVNNrnB
— Madras Talkies (@MadrasTalkies_) July 7, 2022
Forever Fan!!#Ilayaraja#IsaiGnani#thalapathi#Rajinikanthpic.twitter.com/ALyLB7f9eA
— Govind Vasantha (@govind_vasantha) May 29, 2019






— Trish Krish (@trishtrashers) April 19, 2019