search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Brinda"

  • நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தக்ஸ்'.
  • இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

  பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் 'தக்ஸ்'. இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார்.


  தக்ஸ்

  இப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக விழா கடந்த ஆண்டு சென்னையில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.  • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு.
  • இப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  வெந்து தணிந்தது காடு - பிருந்தா

  வெந்து தணிந்தது காடு - பிருந்தா

   

  இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது.

   

  வெந்து தணிந்தது காடு - பிருந்தா

  வெந்து தணிந்தது காடு - பிருந்தா

  இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ என்ற பாடல் குறித்து அந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், மல்லிப்பூ பாடலின் நினைவு. இந்த பாடலுக்காக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிகவும் அழகான நடனக் கலைஞர் சிம்புவுக்கு நன்றி. இந்த பாடலை ஒரே ஷாட்டில் முடித்தவுடனே பாடலுக்கான வரவேற்பைப் பார்த்தேன், நீங்கள் அனைவரும் பாடலை விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்குக் காரணம் ஏ.ஆர்.ரகுமான் ஐயாவின் மந்திர இசை என்று குறிப்பிட்டுள்ளார்.

  • இந்திய திரையுலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் நடன இயக்குனர் பிருந்தா.
  • இவர் இயக்கும் திரைப்படத்தின் டைட்டிலை பிரபலங்கள் இன்று வெளியிடுகின்றனர்.

  இந்திய திரையுலகில் பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றியவர் நடன இயக்குனர் பிருந்தா. இவர் முதன் முதலாக ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்குகிறார். ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

  இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகவுள்ளது. இதனை முன்னணி நட்சத்திர நடிகர்களான விஜய் சேதுபதி, ஆர்யா, ராணா, நிவின் பாலி, அனிருத் ரவிசந்தர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் லோகேஷ் கனகராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகிய இயக்குனர்களும், முன்னணி திரைப்பட விமர்சகர்களான தரன் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை ஆகியோர் வெளியிடுகின்றனர்.


  பிருந்தா
  பிருந்தா

  மேலும், இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படத்தை தயாரிக்கும் ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  சென்னை பல்கலைக் கழக தடகள போட்டியில் பிருந்தா, ரகுராம் ஆகியோர் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றனர். #UniversityofMadras #AthleticChampionship
  சென்னை:

  சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மத்திய அமலாக்கத்துறை உதவி இயக்குனர் டெர்ரான்ஸ் ரோட்ரிஜோ போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

  முதல் நாளான நேற்று 2 புதிய போட்டி சாதனைகள் படைக்கப்பட்டன. பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை எம்.பிருந்தா 47.73 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் எத்திராஜ் வீராங்கனை சாந்தி 46.96 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.சி.சி. வீரர் எம்.ரகுராம் 1 நிமிடம் 52.2 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 2016-ம் ஆண்டில் லயோலா கல்லூரி வீரர் வெள்ளையதேவன் 1 நிமிடம் 53.1 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. சாதனை படைத்த பிருந்தா, ரகுராம் ஆகியோர் செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

  தங்கம் வென்ற வினோதா உயரம் தாண்டிய காட்சி.

  பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஐஸ்வர்யாவும், உயரம் தாண்டுதலில் வினோதாவும், டிரிபிள் ஜம்ப்பில் ஆர்.ஐஸ்வர்யாவும், 5 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் லாவண்யாவும் (4 பேரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 400 மீட்டர் தடை ஓட்டத்தில் திவ்யாவும் (அண்ணா ஆதர்ஷ்), 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுஷ்மிதாவும் (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) முதலிடம் பிடித்தனர்.

  ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய் தர்மாவும், போல்வால்ட்டில் சந்தோஷ்குமாரும், டிரிபிள்ஜம்ப்பில் அரவிந்தும், 20 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் வெற்றிவேலும் (4 பேரும் டி.ஜி.வைஷ்ணவா), சங்கிலி குண்டு எறிதலில் முரளிதரனும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கெவின் குமார் ராஜூம் (2 பேரும் லயோலா) தங்கம் வென்றனர்.  #UniversityofMadras #AthleticChampionship
  ×