ஆக்‌ஷன் படத்தை இயக்கும் பிருந்தா

இந்திய திரையுலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் நடன இயக்குனர் பிருந்தா.இவர் இயக்கும் திரைப்படத்தின் டைட்டிலை பிரபலங்கள் இன்று வெளியிடுகின்றனர்.
ஆக்‌ஷன் படத்தை இயக்கும் பிருந்தா
Published on

இந்திய திரையுலகில் பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றியவர் நடன இயக்குனர் பிருந்தா. இவர் முதன் முதலாக ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்குகிறார். ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகவுள்ளது. இதனை முன்னணி நட்சத்திர நடிகர்களான விஜய் சேதுபதி, ஆர்யா, ராணா, நிவின் பாலி, அனிருத் ரவிசந்தர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் லோகேஷ் கனகராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகிய இயக்குனர்களும், முன்னணி திரைப்பட விமர்சகர்களான தரன் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை ஆகியோர் வெளியிடுகின்றனர்.

பிருந்தா
பிருந்தா

மேலும், இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படத்தை தயாரிக்கும் ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com