search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mammootty"

    • 'காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார்.
    • ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, சமூகத்தை ஊக்குவிக்க முடியும்.

    பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான மலையாள படம் 'காதல் தி கோர்'.

    இப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்கினார். இது மம்முட்டியின் சொந்த தயாரிப்பு படமாகும். 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜோதிகா மீண்டும்



    இப்படத்தில் மம்மூட்டி தன்பால் ஈர்ப்பாளர் வேடத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகரான மம்முட்டி தயங்கும் விஷயத்தை எப்போதும் மிக சாதரணமாக் செய்துவிடுபவர் ஆவார். 'காதல் தி கோர்' படத்தில் தன்பால் ஈர்ப்பாளராக நடித்திருந்த மம்மூட்டியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இப்படத்திற்கு பல வித விமர்சனங்கள் வந்தன.

    இந்நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மலையாள கிளாசிக் படங்களை பார்த்துள்ளார்.ஒரு பேட்டியில் வித்யாபாலன் கூறியதாவது :-

    மம்முட்டி நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் ''காதல் தி கோர்' படம் பார்த்து வியந்தேன். அப்படத்தில் மம்முட்டி சிறப்பாக நடித்துள்ளார். இதை மம்முட்டியிடம் தெரிவிக்க துல்கருக்கு மெசேஜ் அனுப்பினேன்.




    மம்முட்டி நடித்தது மட்டுமின்றி படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். ஒரு சிறந்த நடிகரால் மட்டுமே இதுபோன்ற கேரக்டர்களை செய்து, பெருமைக்குரிய சமூகத்தை ஊக்குவிக்க முடியும். ஒரு இந்தி நடிகர் இப்படி ஒரு படத்தை ஏற்கவே மாட்டார்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது .கேரளாவில் முற்போக்கான பார்வையாளர்கள் உள்ளனர். அதுதான் முக்கிய வேறுபாடு. கேரளாவில் ஒரு நடிகர் தன் இமேஜைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    கேரள சினிமா ரசிகர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். சினிமா கலைஞர்களை மிகவும் மதிக்கிறார்கள்". என்றார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் கொச்சியில் வனிதா பிலிம் பேர் அவார்ட் வழங்கும் விழா நடைப்பெற்றது.
    • மோகன் லால் அந்த விழாவில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்தின் பாடலான ஜிந்தா பண்டா பாடல் மற்றும் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாடலான ஹுக்கும் பாடலுக்கு நடனமாடினார்.

    மலையாள திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களாக இருப்பவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி. இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாலமே இருக்கின்றன. எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் என்றுமே போட்டி பொறாமை என்று இருந்ததே இல்லை.

    அவர்கள் இருவரும் இணைந்து பலப் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். திரையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி அவர்களுக்குள் இருக்கும் நட்பு பந்தம் மிகவும் அழகானது.

    சமீபத்தில் கொச்சியில் வனிதா பிலிம் பேர் அவார்ட் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மமூட்டி மற்றும் மோகன்லால் அதில் பங்கேற்றனர். மோகன் லால் அந்த விழாவில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்தின் பாடலான ஜிந்தா பண்டா பாடல் மற்றும் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாடலான ஹுக்கும் பாடலுக்கு நடனமாடினார்.

    மோகன்லால் ஆடிய நடன வீடியோ மோகன்லால் ரசிகர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகியது. அதைப் பார்த்த ஷாருக்கான் அவரது எக்ஸ் பக்கத்தில்

    'இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் ஸ்பெஷலாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நான் உங்களைப்போல் பாதி நன்றாகச் ஆடியிருக்க விரும்புகிறேன். லவ் யூ சார் மற்றும் உங்கள் வீட்டின் இரவு உணவிற்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒர்ஜினல் ஜிந்தா பண்டா" என்ற பதிவை பகிர்ந்துள்ளார்.

    அதற்கு மோகன்லால் பதிலளிக்கும் வகையில் அன்புள்ள @iamsrk, உங்களைப் போல் யாரும் நடனமாட முடியாது! நீங்கள் எப்போதும் உங்கள் உன்னதமான, ஒப்பற்ற பாணியில் OG ஜிந்தா பண்டாவாக இருப்பீர்கள். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. மேலும், வெறும் இரவு உணவா? காலை உணவுக்கு மேல் ஏன் ஜிந்தா பண்டாவை விரும்பக்கூடாது? என்று பதிலலித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த விருது வழங்கும் விழாவில் மம்மூடிக்கு சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் அதை மோகன்லால் அவருக்கு வழங்கினார். விருதை வாங்கி கொண்டு மமூட்டி "நான் இந்த திரையுலகில் 42 வருடங்களாக இருக்கிறேன். என்னோடு இத்தனை காலங்கள் பயணித்து தோளோடு தோள் நின்று இருப்பது மோகன்லால் ஆவார், அவர் திறமையான நடிகர், நல்ல நடனமாட கூடியவர் எல்லாத்தையும் சிறப்பாக செய்பவர்" என்று கூறிய பிறகு மம்மூட்டி மோகன்லால் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட மோகன்லால் அதே அன்போடு மம்மூட்டி கன்னத்திலும் முத்தம் கொடுத்தார். இப்புகைப்ப்டம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 1983 ஆம் ஆண்டு வெளியான ’விசா’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
    • இந்நிலையில் அடுத்ததாக ’டர்போ’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    அதைத் தொடர்ந்து அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், போன்ற படங்களில் நடித்தார்.

    ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் அப்படத்தை இவரே தயாரிக்கவும் செய்கிறார்.

    இந்நிலையில் அடுத்ததாக 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

    மிதுன் மானுவேல் தாமஸ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். வரும் ஜூன் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. நேற்று படம் வெளியாகும் தேதி அறிவிப்புடன் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அரசவையில் மன்னன் - புலவர் இடையே நடக்கும் ஒரு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.
    • முழுக்க முழுக்க கருப்பு-வெள்ளை வடிவில் எடுக்கப்பட்ட படம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திரையரங்க அனுபவத்தை வழங்கி உள்ளது.

    'பிரம்மயுகம்' கடந்த 15- ந்தேதி மலையாள மொழியில் வெளிவந்த 'திகில்' படம். இப்படத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த், பரதன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்திருந்தார்.

    நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.27 கோடி பட்ஜெட்டில் தயாரித்தது. இந்த படம் அரசவையில் மன்னன் - புலவர் இடையே நடக்கும் ஒரு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.



    இந்த படம் மலையாள திரையுலகில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் 10 நாட்களில் இந்த படம் ரூ.50 கோடி வசூலை குவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழுக்க முழுக்க கருப்பு-வெள்ளை வடிவில் எடுக்கப்பட்ட இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான திரையரங்க அனுபவத்தை வழங்கி உள்ளது.

    • தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் மம்மூட்டி இரங்கல்.
    • நடிகர் மம்மூட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மம்மூட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விஜயகாந்த் நம்மோடு இல்லை. அவர் எனது நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர். அவரது இழப்பை திரையுலகினர், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் நானும் ஆழமாக உணர்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • நடிகை சாக்‌ஷி அகர்வால் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.


    இவர் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.


    இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில், இவர் டார்ஜிலிங்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.


    • 1980ல் தனது முதல் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் மோகன்லால்
    • எனது படங்கள் அனைத்தும் ஒரு கூட்டு முயற்சி என்றார் மோகன்லால்

    மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள், மோகன்லால் மற்றும் மம்முட்டி.

    ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும், இயக்குனர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதிலும் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் திறன் படைத்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறும் போது அவை மிக பெரிய வெற்றியாகவும் பிற மொழி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவற்றின் உரிமத்தை வாங்கி தங்கள் மொழிகளில் எடுக்க விரும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.

    1980ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் மோகன்லால்.


    ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்ட "த்ரிஷ்யம்", தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் வசூலை அள்ளி குவித்தது.


    2021ல் இதே போல் இவர்கள் இணைந்து உருவாக்கிய "த்ரிஷ்யம் 2" திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள "நெரு" திரைப்படம் 21 அன்று ரிலீஸ் ஆகிறது.

    "எனது படங்களின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி. அதில் எனது தனிப்பட்ட பங்கு என எதுவும் இல்லை. எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. விமர்சனங்களால் எனது நீண்ட 46-ஆண்டு கால திரைப்பயணத்தை பின்னுக்கு தள்ளி விட முடியாது" என விமர்சனங்களை குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் தோன்றுவதால் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தில் இடம்பெற்றுள்ள 'மாமதுர' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது.


    மம்முட்டியை சந்தித்த ஜிகர்தண்டா 2 படக்குழு

    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படக்குழு பிரபல மலையாள நடிகரான மம்முட்டியை நேரில் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • 'யாத்ரா 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இதில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

    மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'யாத்ரா'. இந்த படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இதில், ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்பாகம் ஆந்திர முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது. இதில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைக்கிறார்.


    இந்நிலையில், இந்த படத்தில் சோனியா காந்தியாக ஜெர்மன் நடிகை சுசானே பெர்னார்ட் நடிக்கிறார். இவர் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த நடிகர் அகில் மிஸ்ராவின் மனைவி ஆவார். சுசானே பெர்னார்ட்டின் சோனியா காந்தி கதாபாத்திர புகைப்படத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வரவேற்பு பெற்று வருகிறது.

    'யாத்ரா- 2' பிப்ரவரி 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதல்- தி கோர்'.
    • இந்த படத்தை மம்முட்டி கம்பெனி தயாரித்துள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


    தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    காதல் தி கோர் போஸ்டர்

    இந்நிலையில், காதல் - தி கோர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர். மம்முட்டியை கட்டியணைத்தபடி ஜோதிகா இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • நடிகர் மம்முட்டி ராகுல் சதாசிவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

    பிரபல மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் இயக்குனர் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் 'பிரமயுகம்'. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியரிடர் இசையமைத்துள்ளார். ஷேனாத் ஜலால் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


    மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள 'பிரமயுகம்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.


    இந்நிலையில், 'பிரமயுகம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பு ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×