என் மலர்

  நீங்கள் தேடியது "Brian Lara"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார்.
  • ராகுல் டிராவிட் மற்றும் லாராவின் படத்தையும் பிசிசிஐ வெளியிட்டது.

  வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகுக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.

  முதல் ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்திந்து பேசினார். இதனை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

  டீம் இந்தியா டிரஸ்ஸிங் ரூமுக்கு யார் வந்தார் என்று பாருங்கள். ஜாம்பவான் லாரா!" என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. வீடியோவில் லாராவுடன் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பிற வீரர்கள் அரட்டை அடிப்பதைக் காண முடிந்தது.


  முன்னதாக ராகுல் டிராவிட் மற்றும் லாராவின் படத்தையும் பிசிசிஐ வெளியிட்டது. "இரண்டு லெஜண்ட்ஸ், ஒரு பிரேம்!" என பதிவிட்டிருந்தது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா ஒரே ஓவரில் 29 ரன்கள் எடுத்தார்.
  • இதன்மூலம் லாராவின் 19 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்தார்.

  பர்மிங்காம்:

  இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா சதமடித்து அசத்தினர்.

  இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் பும்ரா 83வது ஓவரில் 35 ரன்கள் எடுத்து அசத்தினார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 83 ஓவரில் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பும்ரா.

  பிராட் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாச, அடுத்து வீசப்பட்ட பந்து 'வைடு' முறையில் 5 ரன்களை பெற்றுத் தந்தது. நோ பாலாக வீசப்பட்ட அடுத்த பந்தை பும்ரா சிக்சர் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பும்ரா, அடுத்த பந்துகளை ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 5வது பந்தை மீண்டும் சிக்சருக்கு விளாசிய பும்ரா, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன்மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ரன்கள் விளாசப்பட்டது. பும்ரா மட்டும் 29 ரன் (4,6,4,4,4,6,1) விளாசினார்.

  இதன்மூலம் கடந்த 2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென் ஆப்ரிக்க வீரர் ராபின் பீட்டர்சன் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசிய லெஜண்ட் வீரர் பிரையன் லாராவின் சாதனையை கேப்டனாக தான் பதவியேற்ற முதல் போட்டியிலேயே பும்ரா முறியடித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். #ShikharDhawan #BrianLara
  நேப்பியர்:

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தவான் 10 ரன்னை எடுத்த போது 5 ஆயிரம் ரன்னை தொட்டார்.

  119 ஒருநாள் போட்டியில் 118 இன்னிங்சில் தவான் 5 ஆயிரம் ரன்னை எடுத்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை லாராவுடன் (வெஸ்ட் இண்டீஸ்) இணைந்து பெற்றார்.

  ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), 101 இன்னிங்சிலும், விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), விராட்கோலி (இந்தியா) 114 இன்னிங்சிலும் 5 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தனர். லாராவும், தவானும் 118 இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்தனர். இந்த இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.  வில்லியம்சன் (நியூசிலாந்து) 119 இன்னிங்சிலும், கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்) 121 இன்னிங்சிலும் டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்க) 124 இன்னிங்சிலும் 5 ஆயிரம் ரன்னை எடுத்து அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர்.

  ஒரு நாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்னை எடுத்த 13-வது இந்தியர் தவான் ஆவார்.

  டெண்டுல்கர் (18,426 ரன்), கங்குலி (11,221), டிராவிட் (10,768), விராட் கோலி (10,387), டோனி (10,192), அசாருதீன் (9378), யுவராஜ்சிங் (8609), ஷேவாக் (7995), ரோகித்சர்மா (7650), ரெய்னா (5615), அஜய் ஜடேஜா (5359), காம்பீர் (5238) ஆகியோர் வரிசையில் தவான் இணைந்தார். #ShikharDhawan #BrianLara
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் புகழாரம் சூட்டியுள்ளனர். #AUSvIND #SteveWaugh #BrianLara #SachinTendulkar #ViratKohli
  மெல்போர்ன்:

  ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

  விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர் மிகப்பெரிய வெற்றியை நேசிக்கிறார். டெண்டுல்கர், லாரா போன்றே விராட் கோலியும் சிறந்த வீரர். அபாயகரமான பேட்ஸ்மேன். சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி உள்ளார்.  தற்போதுள்ள இந்திய அணி கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுவதை என்னால் ஏற்க இயலாது. நான் விளையாடிய இந்திய அணிகளை விட தற்போதுள்ள அணி சிறந்ததாக கருதவில்லை. வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க அவர் அவ்வாறு கூறி இருக்கலாம். இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்து இருக்கலாம்.

  ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதே தற்போதுள்ள இந்திய அணி நல்ல தயார் நிலையில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இருக்கிறது. இதனால் இந்த தொடர் பரபரப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  ஸ்டீவ்வாக் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1999-ல் உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #SteveWaugh #BrianLara #SachinTendulkar #ViratKohli
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எனது வாழ்க்கையில் பேட்டிங் என்றாலே சச்சின் தெண்டுல்கர்தான், கடைசி நாளில் சதம் அடிக்கும் வீரர் லாரா என்று வார்னே புகழராம் சூட்டியுள்ளார். #Warne #Sachin #Lara
  ஆஸ்திரேலியா அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஷேன் வார்னே. ‘லெக் பிரேக் ஹூக்ளி’ ஸ்டைலில் பந்து வீசிய வார்னே, உலக பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம் சொப்பனமாக இருந்தார். டெஸ்ட் போட்டியில் சர்வதேச அளவில் 708 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார்.

  இவர் ‘NO SPIN’ என்ற புத்தகத்தை எளிதியுள்ளார். இதில் சச்சின் தெண்டுல்கர், லாரா ஆகியோரின் பேட்டிங் திறமையை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

  சச்சின் தெண்டுல்கர், லாரா குறித்து வார்னே தனது புத்தகத்தில் ‘‘என்னுடைய காலக்கட்டத்தில், என்னுடைய நேரத்தில் சச்சின் தெண்டுல்கர், பிரையன் லாரா தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதை எளிதாக கூறிவிட முடியும்.  டெஸ்ட் தொடரில் கடைசி நாளில் யராவது ஒருவர் செஞ்சூரி அடிக்க வேண்டும் என்று நான் விரும்பினால், லாராவை களம் இறக்குவேன். ஆனால், எனது வாழ்நாளில் ஒரு வீரர் பேட் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினால், சச்சின் தெண்டுல்கரைத்தான் களம் இறக்குவேன். சச்சின் தலைசிறந்த வீரர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார். #ViratKohli #JoeRoot
  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் பிரையன் லாரா. இவருடைய காலத்தில் விளையாடிய வீரர்கள் இவரை தவிர்த்து ஏதும் கூறிவிட முடியாது. முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே ஆகிய தலைசிறந்த பந்து வீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்டவர்.  டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி பெரும்பாலான நேரத்தில் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.  இடது கை பேட்ஸ்மேன் ஜாம்பவான் ஆன பிரையன் லாரா இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ஆகியோர்தான் உலகின் தலைசிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.
  ×