என் மலர்

  நீங்கள் தேடியது "Adam Gilchrist"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 15 அல்லது 20 பந்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றார்.
  • கடந்த 1½ ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை பார்த்து எதிரணிகள் பயப்படுகிறார்கள்.

  மெல்போர்ன்:

  20 ஓவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் இடம் பெற்று உள்ளார். சிங்கப்பூரில் பிறந்த அவர் அந்த நாட்டு அணிக்காக விளையாடி வந்தார்.

  ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் போட்டி தொடர்களில் விளையாடிய அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு அணியில் வாய்ப்பு அளித்து உள்ளது.

  இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரின் 3-வது ஆட்டத்தில் டிம் டேவிட் 27 பந்தில் 54 ரன் எடுத்து அசத்தினார்.

  இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் டிம் டேவிட்டுக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

  ஆஸ்திரேலிய ஆடும் லெவனில் டிம் டேவிட் இடம்பெற வேண்டும். கடந்த 1½ ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை பார்த்த போது எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவரை பார்த்து எதிரணிகள் பயப்படுகிறார்கள்.

  15 அல்லது 20 பந்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் முதல் இடத்தில் உள்ளார்.

  இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.

  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மிட்செல் 109 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

  முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பேர்ஸ்டோவ்-ஓவர்டேன் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.

  இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஒரு சிக்சர்கள் அடங்கும். இந்த சிக்சர்கள் மூலம் அவர் சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் 3-வது இடத்தில் (100 சிக்சர்கள்) உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட் (100 சிக்சர்கள்) சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார்.

  டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மெக்கல்லம் 176 போட்டிகளில் விளையாடி 107 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா வீரர் கில்கிறிஸ்ட் 100 சிக்சர்கள்களுடன் 2-வது இடத்திலும் பென் ஸ்டோக்ஸ் 100 சிக்சர்கள்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இன்னும் 8 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்து சாதனை படைப்பார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்றால் உடல்நிலையை விட மனநிலை முக்கியமானது என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். #AUSvIND
  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உள்ளூர் தொடரை சிறப்பாக முடித்துக் கொண்டு தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. இந்த இரண்டிலும் தொடரை இழந்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் சாதிக்க அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

  ஆனால் இரண்டில் தோல்வியடைந்துள்ள நிலையில், இன்னும் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல வேண்டும் என்றால், உடற்தகுதியை விட மனவலிமை அதிகமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் கில்கிறிஸ் தெரிவித்தார்.
  ×