என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெக்கான் சார்ஜர்ஸ் ரீயூனியன்.. ரோகித்தை kepke என அழைத்த கில்கிறிஸ்ட்- வைரல் வீடியோ
- 2009-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது.
- அந்த அணியில் ரோகித் சர்மா ஆல் ரவுண்டராக விளையாடினார்.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக பாக்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளராக ஆடம் கில்கிறிஸ்ட் பணியாற்றி வருகிறார். அதற்காக களத்தில் நின்று பணிகளை மேற்கொண்ட போது, அருகிலேயே ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டு நீண்ட நேரமாக உரையாடி கொண்டிருந்தனர்.
அதன்பிறகு இருவரும் செல்பி வீடியோ ஒன்றை எடுத்துக் கொண்டனர். அதில் ரோகித் ரசிகர்களே இவர் யார் தெரியுமா? டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் kepke என கில்கிறிஸ்ட் கூறினார்.
இதனை ரசிகர்கள் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ரீயூனியன் என சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2009-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது. அப்போது ரோகித் சர்மா பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தி கொண்டிருந்தார். அந்த அணியில் இருந்துதான் ரோகித் சர்மா உருவாகினர்.
அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவுக்கு அப்போதே கில்கிறிஸ்ட் துணைக் கேப்டன் பதவி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






