என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2026 உலக கோப்பை கேப்டன் யார்? கில்கிறிஸ்ட் கேள்வியால் அதிர்ச்சியான மிட்செல் மார்ஷ்
    X

    2026 உலக கோப்பை கேப்டன் யார்? கில்கிறிஸ்ட் கேள்வியால் அதிர்ச்சியான மிட்செல் மார்ஷ்

    • பேட் கம்மின்ஸ் உடற்குதியுடன் இருந்தால் அவர் கேப்டனாக இருக்கப்போகிறாரா அல்லது நீங்கள் தொடர்ந்து நீடிப்பீர்களா?.
    • பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பினால், அவர்கள் உங்கள் கேப்டன் பதவியின் கீழ் விளையாடப் போகிறார்?.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. 4.5 ஓவரில் மழை குறுக்கீடு செய்ததால், அத்துடன் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

    மழையால் போட்டி கைவிடப்பட்ட நிலையில், கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் ஆடம் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்செல் மார்ஷிடம் கேள்வி கேட்டார். அப்போது 2026 டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை வழி நடத்திச் செல்லப் போவது யார்? நீங்களா அல்லது பேட் கம்மின்ஸா? என கேள்வி எழுப்பினார். இதற்கு என்ன பதில் சொல்ல என்று மிட்செல் மார்ஷ் வார்த்தை இல்லாமல் நின்றார். பின்னர் சமாளித்துக் கொண்டு பேசினார்.

    ஆடம் கில்கிறிஸ்ட்: யார் கேப்டன்? நீங்களா அல்லது பேட் கம்மின்ஸா?. பேட் கம்மின்ஸ் உடற்குதியுடன் இருந்தால் அவர் கேப்டனாக இருக்கப்போகிறாரா அல்லது நீங்கள் தொடர்ந்து நீடிப்பீர்களா?

    மிட்செல் மார்ஷ்: நல்ல கேள்வி. நான் அங்கே இருப்பேன் (கேப்டன் பொறுப்பில்) என நினைக்கிறேன்.

    கில்கிறிஸ்ட்: ஆகவே, நீங்கள் அதிகாரப்பூர்வ கேப்டன்?. பேட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பினால், அவர்கள் உங்கள் கேப்டன் பதவியின் கீழ் விளையாடப் போகிறார்?

    மிட்செல் மார்ஷ்: நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஆமாம்.

    கில்கிறிஸ்ட்: விளக்கம் அளித்ததற்கு நன்றி. இது பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.

    டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எந்தபொரு டி20 அட்டவணையும் இல்லை. அணித் தேர்வுக்கு பிக் பாஷ் டி20 லீக் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

    மிட்செல் மார்ஷ் 2024 டி20 உலக கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி கேப்டனாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கில்கிறிஸ்ட் இதுபோன்ற கேள்வியை எழுப்பியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×