search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷித் கான்"

    • ராஜஸ்தான் அணிக்கெதிராக 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீ்ழ்த்தினார்.
    • 11 பந்தில் 24 ரன்கள் அடித்து அணியை கடைசி பந்தில் வெற்றி பெற வைத்தார்.

    ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் உலகின் தலைசிறந்த டி20 பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். உலகளவில் நடைபெறும் பெரும்பாலான தொழில்முறையான டி20 லீக்கில் விளையாடி வருகிறார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒருவேளை அவரது பந்து வீச்சு எடுபடவில்லை என்றால் பீல்டிங் மற்றும் பேட்டிங்கிலும் அணியை வெற்றிபெற வைக்க துடிப்பார். அணியின் வெற்றிக்காக தனது 100 சதவீத பங்களிப்பை கொடுக்க எப்போதும் தவறியதில்லை.

    நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும் அப்படித்தான் பேட்டிங்கில் களம் இறங்கி 11 பந்தில் 24 ரன் எடுத்து குஜராத் அணியின் வெற்றிக்கு பங்காற்றினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    இந்த நிலையில் ரஷித் கான் குறித்து கவாஸ்கர் கூறுகையில் "அவர் வழக்கம்போல் விக்கெட் வீழ்த்துவது போல் விக்கெட் வீழ்த்தவிலலை. ஆனால், பேட்டிங்கில் அவரது பங்களிப்பு தேவை என்று வந்தபோது, களத்தில் இறங்கி அதை கச்சிதமாக செய்து முடித்தார்.

    இந்த காரணத்தினால்தான் உலகளவில் உள்ள தொழில்முறை கிரிக்கெட் அணிகள் இவர் போன்ற வீரர்களை விரும்புகிறது. ரஷித் கானை அவர்கள் விரும்புகின்றனர். ஏனென்றால் அவர்கள் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் அவருடைய உள்ளார்ந்த ஈடுபாட்டை காண முடியும்.

    அவர் பீல்டிங் செய்யும்போது, தன்னால் முடிந்த அனைத்தையும் வெளிப்படுத்துவார். பந்து வீச்சாளர்கள் அவர்கள் பந்து வீசும் கைகளின் தோள்பட்டை கீழே படும்படி டைவிங் அடிக்க யோசிப்பார்கள். ஏனென்றால், ஒருவேளை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டால் அவர்களது பந்து வீச்சுக்கு மிகப்பெரிய வகையில் அச்சுறுத்தலாகிவிடும்.

    ஆனால் அந்த பயம் ரஷித் கானிடம் இருக்காது. அவர் தனது 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்த விரும்புவார்.

    இதேபோல் இன்னொரு வீரர் உள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அவர் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் பீல்டிங், பந்து வீச்சு, பேட்டிங் ஆகிவற்றில் 100 சதவீதம் தனது பங்களிப்பை வெளிப்படுத்துவார். இதேபோன்ற வீரர்களைத்தான் பயிற்சியாளர்கள், கேப்டன்கள் விரும்புவார்கள்.

    • நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான், உலகக் கோப்பை போட்டியில் வாங்கும் சம்பளத்தை தனது நாட்டு மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    உலகக் கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் வங்காளதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை தழுவியது. இதை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி அக்டோபர் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
    • அனைவராலும் விரும்பப்படும் ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என டுவிட்டர் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கி வருகிறார். மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அவர் குஜராத் காந்திநகரில் தெருவில் இந்திய ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    முபாடல் வோக்ரா என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள 26 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ காட்சியில் ரஷித்கான் பேட்டிங் செய்கிறார். பின்னணியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்த இந்த வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் ரஷித்கானை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், வெறுப்பாளர்கள் இல்லாத, அனைவராலும் விரும்பப்படும் ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் இருந்திருக்கிறார்.
    • ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது.

    டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.

    இதையடுத்து ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.

    பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து ஆப்கானிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரஷித் கான், ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.

    2019-ல் 7 டி20, 7 ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. இந்நிலையில், இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெறும் 24 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள ரஷித் கான் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், அணியை முன்னின்று வழிநடத்த சரியான வீரர் ஆவார். 

    • அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ரஷித் கான் கூறினார்.
    • இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானர். கடந்த 1990-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2007 வரை மிகச் சிறந்த இடது கை பேட்ஸ்மனாக அந்த சமயத்தில் இருந்த கிளன் மெக்ராத் முதல் சோயப் அக்தர் வரை அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டிலும் தலா 10000-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.

    நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழும் அவர் கடந்த 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரைன் லாரா வர்ணனையாளராக செயல்பட்டார்.

    மறுபுறம் டிசம்பர் 13-ம் தேதி முதல் துவங்கும் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார். அந்த நிலையில் நேராக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்ற அவர்கள் சர்வதேச அரங்கில் மோத வாய்ப்பில்லை என்றாலும் நட்பின் அடிப்படையில் வலைப் பயிற்சியில் மோதினால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக போட்டி போட்டார்கள்.


    அதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அதைப் பார்க்க ஆவலுடன் கூடிய நிலையில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கானை எதிர்கொண்ட பிரைன் லாரா எந்த பந்துகளிலும் கொஞ்சமும் தடுமாறாமல் அதிரடியாக பேட்டிங் செய்தார். குறிப்பாக காத்திருந்து அடித்த ஸ்கொயர் கட் மற்றும் இறங்கி வந்து பவுண்டரி பறக்க விட்ட அவரது ஷாட்களை பார்த்து உற்சாகமான ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    24 வயதாகும் நம்பர் ஒன் டி20 பவுலரான ரஷித் கான் பந்துகளை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரஷித் கான் பேசியது பின்வருமாறு. "அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் சுழல் பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொள்ளும் பிரைன் லாரா போன்ற ஒருவருக்கு பந்து வீசுவது சவாலாகும். இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்" என்று கூறினார்.

    அவரை எதிர்கொண்டது பற்றி லாரா பேசியது பின்வருமாறு. "இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இருப்பினும் ரசித் தற்போது பார்மில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற பெரிய பவுலரை எதிர்கொள்வது அற்புதமானது. அது எனக்கு அதிர்ஷ்டமாகும்" என்று கூறினார்.

    ×