என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூர் அகமது"

    • டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரகானே 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரசல் 38 ரன்னும், மனீஷ் பாண்டே 36 ரன்னும், சுனில் நரைன் 26 ரன்னும் எடுத்தனர்.

    சிஎஸ்கே சார்பில் நூர் அகமது 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    அடுத்து இறங்கிய உர்வில் படேல் 11 பந்தில் 4 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அஷ்வின் 8 ரன்னும், ஜடேஜா 19 ரன்னும் எடுத்தனர்.

    அதிரடியாக ஆடிய பிரேவிஸ் 25 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    6வது விக்கெட்டுக்கு ஷிவம் துபேவுடன் எம்.எஸ்.தோனி இணைந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.

    • ரஜத் படிதார் அரைசதம் அடித்தார்.
    • டிம் டேவிட் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார்.

    ஐபிஎல் 2025 சீசினின் 8ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் பதிரனா, ஆர்சிபி அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.

    தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினர். விரட் கோலி நிதானமாக விளையாட பில் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தொடக்கத்தில் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    5-வது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பில் சால்ட் ஆட்டமிழந்தார். எம்.எஸ். தோனி மின்னல் வேகத்தில் சால்ட்-ஐ ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். அப்போது ஆர்சிபி 5 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருந்தது. சால்ட் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்கருடன் 32 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து தேவ்தத் படிக்கல் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடி 14 பந்தில் தலா 2 பவுண்டரி, சிக்சருடன் 27 ரன் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு கோலி உடன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். ரஜத் படிதார் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ரன்அவுட் மிஸ், கேட்ச் மிஸ் என படிதாருக்கு ஏராளமான வாய்ப்புகள் கொடுத்தனர்.

    மறுமுனையில் விராட் கோலி 30 பந்தில் 31 ரன்கள் எடுத்து நூர் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 12.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

    ஏராளமான வாய்ப்புகள் பெற்ற ரஜத் படிதார் 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து பதிரனா பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஜித்தேஷ் சர்மா 12 ரன்களும், லிவிங்ஸ்டன் 10 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் டிம் டேவிட் 3 சிக்சர்கள் விளாச இறுதியாக ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

    சிஎஸ்கே அணியில் சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். பதிரனா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், நூர் அகமது 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே பேட்டிங் செய்து வருகிறது.

    • 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
    • 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    சென்னை:

    ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்.

    சென்னை தரப்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை 19.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஆட்டநாயகன் விருதுடன் நூர் அகமது குறித்து ஒரு வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் பிரபலமான டயலாக்கான நான் ஒரு தடவ சொன்னா நூரு தடவ சொன்ன மாதிரி என்ற டயலாக்கை நூர் அகமது பேசியுள்ளார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவுக்கு Baasha of spin என தலைப்பிட்டுள்ளது. 

    ×