என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் ஆசிய வீரர்... சாதனைக்கு மேல் சாதனைகளை குவித்த ரஷித்கான்
    X

    முதல் ஆசிய வீரர்... சாதனைக்கு மேல் சாதனைகளை குவித்த ரஷித்கான்

    • வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • இதன்மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட்லீயின் சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார்.

    அபுதாபி:

    ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 48.5 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 60 ரன்னும், தவ்ஹித் ஹ்ரிடோய் 56 ரன்னும் ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ரஷித் கான், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

    அதன்படி ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    மேலும் டி20 150-க்கு கூடுதலான விக்கெட்டும் ஒருநாளில் 200-க்கு கூடுதலான விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஆசிய வீரராவார்.

    ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தில் ரஷித்கான் உள்ளார். முன்னாள் நியூசிலாந்து வீரர் சவுத்தி 174 டி20 விக்கெட்டும் 221 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் உள்ளார்.

    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட்லீயின் சாதனையையும் ரஷித் கான் முறியடித்துள்ளார். குறைந்த ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் 4 இடங்களில் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக் (101 போட்டிகள்), ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் (102 போட்டிகள்), இந்திய வீரர் முகமது ஷமி (103 போட்டிகள்) நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் (106 போட்டிகள்) ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் (107 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.

    Next Story
    ×