குஜராத் காந்தி நகரில் தெருவில் ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ரஷித் கான்

மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.அனைவராலும் விரும்பப்படும் ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என டுவிட்டர் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் காந்தி நகரில் தெருவில் ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ரஷித் கான்
Published on

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கி வருகிறார். மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவர் குஜராத் காந்திநகரில் தெருவில் இந்திய ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முபாடல் வோக்ரா என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள 26 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ காட்சியில் ரஷித்கான் பேட்டிங் செய்கிறார். பின்னணியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்த இந்த வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் ரஷித்கானை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், வெறுப்பாளர்கள் இல்லாத, அனைவராலும் விரும்பப்படும் ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com