என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வாலுக்கு பிரைன் லாரா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் புகழாரம்
- ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
- கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார்.
பெங்களூரு:
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.
அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவரது பேட்டிங் திறமையை பலரும் பாராடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெய்ஸ்வாலை, பெங்களூரு வீரர் விராட் கோலி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கோலி, சமீபத்தில் தான் பார்த்த மிகச்சிறப்பான பேட்டிங் என்றும், ஜெய்ஸ்வாலின் திறமை அற்புதமானது என்றும் கோலி குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கூறுகையில்:- நான் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இருந்தால் நிச்சியமாக ஜெய்ஸ்வால்-ஐ இன்றே தேர்வு செய்து உலகக்கோப்பை போட்டிக்கு விளையாட வைத்திருப்பேன். ஏனென்றால் இளம் வீரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகிறார்.
அதேபோல ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ப்ரெட் லீ அவரது ட்விட்டர் பக்கத்தில் சூப்பராக விளையாடுகிறார் ஜெய்ஸ்வால். இப்பொழுதே அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.
இதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்த அதிரடி தொடருங்கள் என கூறியிருந்தார்.