என் மலர்

  செய்திகள்

  அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் - லாராவுடன் இணைந்த தவான்
  X

  அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் - லாராவுடன் இணைந்த தவான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். #ShikharDhawan #BrianLara
  நேப்பியர்:

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தவான் 10 ரன்னை எடுத்த போது 5 ஆயிரம் ரன்னை தொட்டார்.

  119 ஒருநாள் போட்டியில் 118 இன்னிங்சில் தவான் 5 ஆயிரம் ரன்னை எடுத்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை லாராவுடன் (வெஸ்ட் இண்டீஸ்) இணைந்து பெற்றார்.

  ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா), 101 இன்னிங்சிலும், விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), விராட்கோலி (இந்தியா) 114 இன்னிங்சிலும் 5 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தனர். லாராவும், தவானும் 118 இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்தனர். இந்த இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.  வில்லியம்சன் (நியூசிலாந்து) 119 இன்னிங்சிலும், கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்) 121 இன்னிங்சிலும் டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்க) 124 இன்னிங்சிலும் 5 ஆயிரம் ரன்னை எடுத்து அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர்.

  ஒரு நாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்னை எடுத்த 13-வது இந்தியர் தவான் ஆவார்.

  டெண்டுல்கர் (18,426 ரன்), கங்குலி (11,221), டிராவிட் (10,768), விராட் கோலி (10,387), டோனி (10,192), அசாருதீன் (9378), யுவராஜ்சிங் (8609), ஷேவாக் (7995), ரோகித்சர்மா (7650), ரெய்னா (5615), அஜய் ஜடேஜா (5359), காம்பீர் (5238) ஆகியோர் வரிசையில் தவான் இணைந்தார். #ShikharDhawan #BrianLara
  Next Story
  ×