search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "annadhanam"

    • அக்ஷய்ய திருதீயா புண்ய காலே
    • பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    தானம் அளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்...

    அக்ஷய்ய திருதீயா புண்ய காலே அக்ஷய்ய புண்ய ஸம்பாதனார்த்தம் (பித்ரு ப்ரீத்யர்த்தம்) தர்மகடாக்ய உதகும்ப தானமஹம் கரிஷ்யே..

    ஏஷ தர்மகடோ தத்தோ ப்ரும்ஹ விஷ்ணு சிவாத்மக: அஸ்ய) பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள்.
    • பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும்.

    மகாத்மாவான தருமரை, துரியோதனன் தன் தாய்மாமன் சகுனியின் உதவி கொண்டு சூழ்ச்சி செய்து சூதாட்டத்தில் தோற்கடித்தான். இதனால் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தது. அவர்கள் அஸ்தினாபுரத்தில் இருந்து திரவுபதியோடு வடக்கு நோக்கி யாத்திரையை தொடங்கினார்கள். அப்போது இந்திராதி தேவர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் மற்றும் மிகுந்த பற்றுள்ள மக்களும் பாண்டவர்களின் பின் சென்றனர்.

    பஞ்சபாண்டவர்கள் அவர்களை நோக்கி, "உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். எனது அருமை மக்களே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்" என்று வேண்டிக்கொண்டனர்.

    ஆனால் மக்களோ, பாண்டவர்களை நோக்கி பலவிதமாக புகழ்ந்தனர். அப்போது தருமர் அவர்களிடம், "நீங்கள் அன்பால் என்னை இவ்வாறு புகழ்கிறீர்கள். எங்களிடம் இல்லாத உயர்ந்த குணங்களை கூட எங்களிடம் உள்ளது போல் சொல்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். இருப்பினும் நீங்கள் திரும்பி செல்லுங்கள்" என்று கூறினார். பின்பு பஞ்ச பாண்டவர்கள், கங்கை கரையில் இருந்த பிரமாணக்கோடி என்னும் ஆலமரத்திற்கு அருகில் சென்று, அன்று இரவை அங்கேயே கழித்தனர்.

    அப்போதும் சில அந்தணர்களும் குறிப்பாக அக்னி ஹோதிரிகள் (தினமும் யாகம் செய்யக்கூடிய அந்தணர்களும்) மற்றும் அவர்களது உறவினர்களும் திரும்பி செல்லாமல் நூற்றுக்கணக்கில் பாண்டவர்களுடன் வந்தனர். அவர்களை நோக்கி தருமர், "ராட்சசர்கள் மற்றும் கொடிய மிருகங்கள் வசிக்கும் இந்த இடத்தில் எங்களுடன் ஏன் வருகிறீர்கள்" என்று கேட்டாலும், அவர்களின் அன்பான பேச்சால் மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் ஒரு காரியம் அவர் மனதை நெருடியது. "சன்னியாசிகளும், அந்தணர்களும், உறவினர்களும் நம்முடன் வருகின்றனர். இவர்களின் பசியை போக்க வேண்டியது எனது கடமை. தர்ம சாஸ்திரத்தில் விதித்தபடி தேவர்களுக்கும், நம்மை தேடி வந்த விருந்தினர்களுக்கும், நாய்களுக்கும், காக்கைக்கும், அன்னம் இடாவிட்டால் மகா பாவம். எனவே இதற்கு என்ன செய்யலாம்" என வருத்தப்பட்டார்.

    அப்போது சவுனகர் என்ற மகா முனிவர் அங்கு வந்தார். அவர் தருமரை நோக்கி, "தவத்தின் மூலம் உன் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். யோக சித்தியை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தவத்தின் மூலம் அடைய முடியாதது எதுவுமில்லை" என்றார்.

    இதையடுத்து தருமர் தன் புரோகிதரான தவுமியரிடம் ஆலோசனை கேட்டார். தவுமியரோ, "தர்ம ராஜாவே.. பிராணிகள் எல்லாம் ஒரு சமயம் கடும் பசியால் துன்பமடைந்த பொழுது, சூரியபகவான் அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் கொண்டு பூமியில் மேக ரூபமாக மாறி மழை நீரை வெளிப்படுத்தினார். அந்த மழை நீரால் பூமி செழித்து, அனைத்து ஜீவ ராசிகளின் பசியும் தீர்ந்தது. சூரியன் அன்ன ரூபம் ஆனவர். அனைத்து உயிரையும் காக்கக்கூடியவர். எனவே நீ அவரை நோக்கி தவம் செய்" என்றார்.

    தருமரும் ஒரு மனதுடன் அன்ன ஆகாரம் இன்றி சூரிய பகவானின் விசேஷமான 108 நாமத்தை கூறி தவம் இயற்றினார். பின்னர் சூரிய பகவானை நோக்கி, "12 ஆதித்யர்களும், 11 ருத்திரர்களும், அஷ்டவசுக்களும், இந்திரனும், பிரஜாபதியும், ஆகாசத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களும், உங்களை ஆராதித்து சித்தி அடைந்தனர். தங்களை ஆராதிப்பதால் ஏழு வகை பித்ருக்களும் திருப்தி அடைகின்றனர். தாங்கள் எனக்கு உதவ வேண்டும்" என்று தருமர் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு சூரிய பகவான், "தர்மராஜா.. நீ வேண்டியது அனைத்தும் உனக்கு கிடைக்கும்படி செய்கிறேன். இப்பொழுது நான் தரும் பாத்திரம் உனக்கு 12 ஆண்டு வரை சக்தி உள்ளதாக இருக்கும். இந்த பாத்திரத்தை பெற்றுக்கொள். இதில் நீ இடும் பழமோ, கிழங்கோ, கீரையோ, காய்கறிகளோ அல்லது அவற்றை கொண்டு தயார் செய்த உணவோ, தான் உண்ணாமல் திரவுபதி அந்த உணவை பரிமாறிக் கொண்டே இருக்கும் வரை, அது வளர்ந்து கொண்டே இருக்கும். இன்றைய தினத்தில் இருந்து நீ இதை பயன்படுத்தலாம்" என்றார்.

    தருமரும் ஒரு அடுப்பு மீது அந்த பாத்திரத்தை வைத்து சமையல் தயார் செய்தார். அதில் தயாரித்த உணவு சிறிய தாக தோன்றினாலும், அந்த பாத்திரத்தின் சக்தியால் அது வளர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் உணவளித்த பிறகு மீதமிருந்த அன்னத்தை பிரசாதமாக தருமரும் மற்றவர்களும் சாப்பிட்டனர். இறுதியாக திரவுபதி சாப்பிட்டாள். அட்சய பாத்திர மகிமையால் அங்கிருந்த அனைவரும் பசி நீங்கி மகிழ்ந்தனர். 

    தருமர், மற்றவர்களின் பசியை தீர்க்க சூரிய பகவானிடம் இருந்து, சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அன்று அட்சய பாத்திரம் பெற்றதால் அந்த தினம் 'அட்சய திருதியை' என அழைக்கப்பட்டது.

    'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய இந்த திருதியை மிக விசேஷமானது. அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளோ, அபிஷேகமோ, ஜபமோ, ஹோமமோ மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களைத் தரும். அன்றைய தினம் ஏழைகளுக்கு வழங்கப்படும் அன்னதானம், நீர் மோர் போன்றவை நமக்கு குறைவற்ற செல்வத்தை பெற்றுத் தரும். சிலர் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் அது தானத்தையும், தர்மத்தையும் தான் சிறப்பாக சொல்லியுள்ளது.

    முன்னோர்களின் (பித்ருக்களின்) பிரீதிக்காக நீர் நிறைந்த ஒரு செப்பு பாத்திரத்தை தானம் செய்வார்கள். இதற்கு 'தர்மகட தானம்' என்று பெயர். இதனால் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் தாகமின்றி இருப்பார்கள். ஒரு செப்பு பாத்திரத்தில் அல்லது கலசத்தில் நல்ல நீரை நிரப்பி ஏலக்காய் மற்றும் வாசனை திரவியங்களை சேர்த்து அதற்கான மந்திரத்தை சொல்லி தானம் அளிப்பது மிகச் சிறப்பானது. 

    இந்த நாளில் எந்தவிதமான பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல் அனைவருக்கும் அன்னதானம் அளிப்பது உயர்ந்த பலனை தரும். மேலும், பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும். இறந்த முன்னோர்களுக்கு நல்ல கதி உண்டாகும். வேதம் படித்த பெரியோர்களுக்கு குடை, விசிறி, நீர் மோர் போன்றவை அளிப்பார்கள். மேலும் அட்சய திருதியை அன்று தான் கிரத யுகம் ஆரம்பித்த நாள். எனவே அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    - 'ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

    • கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 25-வது மாத அன்னதான நிகழ்ச்சி புது ரோடு சந்திப்பு சாலையில் உள்ள முச்சந்தி செல்வ விநாயகர் கோவிலில் நடைபெற்றது.
    • கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 25-வது மாத அன்னதான நிகழ்ச்சி புது ரோடு சந்திப்பு சாலையில் உள்ள முச்சந்தி செல்வ விநாயகர் கோவிலில் நடைபெற்றது. முன்னதாக செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டு நினைவு பரிசினை வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கு தொழிலதி பரும், நகர் மன்ற உறுப்பி னரு மான முத்துராஜன் தலைமை தாங்கினார். கோவில் தர்மகர்த்தா முருகன், முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் மந்திரசூடாமணி வரவேற்று பேசினார். தொழிலதிபர்கள் மாடசாமி, செல்லத்துரை, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் பொங்கல் பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறு வனர் சீனிவாசன், தலை வர் ஜெயக்கொடி, செய லாளர் ஜோதி கா மாட்சி, பொருளாளர் கார்த்தி கேயன், செயற்குழு உறுப்பி னர்கள் நடராஜன், பாண்டி யன், மாரிமுத்து, லவ ராஜா, சுப்பிரமணியன், பால முருகன், கதி ரேசன், முருகன், சண்முக சுந்த ரம், தங்கராஜ், முத்து மாரி யம்மன், செல்வம் மற்றும் பெரியராஜ், செல்லத்துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 24-வது மாத அன்னதான நிகழ்ச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.
    • கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 24-வது மாத அன்னதான நிகழ்ச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். தொழில் அதிபர்கள் அசோக், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர்கள் கிருஷ்ணமூர்த்தி, கடம்பூர் மாரியம்மன் கோவில் அறங்காவலர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதன்மை சிறப்பு விருந்தினர்களாக நெல்லை முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, உறுப்பினர்கள் நடராஜன், லவராஜா, கதிரேசன், தங்கராஜ், எஸ்.பி. பாண்டியன், சுப்பிரமணியன், முருகன், முத்துமாரியம்மன், மாரிமுத்து, காளிராஜ், செல்வம் மற்றும் ஆசிரியர்கள் ஜீவானந்தம், சக்திவேல், மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் மூர்த்தி, மிலிட்டரி சந்திரசேகர், பஜ்ரங் நர்த்தனாலயா கணபதி, பசுமை இயக்க செந்தில், கோவில்பட்டி அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் சுகன்யா, கொல்லம் சேகர், அசோக் மாறன், காளிராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முடிவில் தொழில் அதிபர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

    • மாதம் தோறும் பவுர்ணமி நாளன்று ஜீவஅனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • சிறப்பு அழைப்பாளராக டாக்டர் வெங்கடேஷ் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவவார்டில் மாதம் தோறும் பவுர்ணமி நாளன்று ஜீவஅனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தமாத பவுர்ணமி அன்று அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் சண்முகவேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் வெங்கடேஷ் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுமார் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று தொடர்ந்து அன்னதானம் நடத்தி வரும் பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரனை டாக்டர் வெங்கடேஷ் பாராட்டி பேசினார். ஏற்பாடுகளை ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் செய்திருந்தார்.

    • தூத்துக்குடி இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட 3-ம் மைல் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 25-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.
    • கோவில் கொடைவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட 3-ம் மைல் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 25-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மாணவரணி சத்யா செந்தில்குமார், கோவில் தர்மகர்த்தா, ராமசந்திரன், தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர்கள் கனகராஜ், ஆறுமுகம், மாரியப்பராஜா, மணிகண்டன், பரமசிவன், பாலசுப்பிரமணியன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சந்திரசேகர், துணைச்செயலாளர்கள் நாகராஜன், சந்தனராஜ், சுந்தர், மாசானமுத்து, கார்த்திஸ்துரை, முத்து, ராஜகுரு, சுப்பிரமணி, ராஜன், அர்ச்சகர்கள் இசக்கிமுத்து, லெட்சுமணன், பரமசிவன் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் விசேஷமானது.
    • கூழ் மற்றும் பதார்த்தங்களை வீட்டில் சமைக்க வேண்டும்.

    பொதுவாகவே ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் விசேஷமானது. ஆடி மாதம் ஞாயிற்று கிழமை அம்மன் வழிபாட்டை எப்படி முறையாக செய்து அம்மனின் அருள், ஆசியை முழுமையாக எப்படி பெறுவது? என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

    ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷமானது. இந்த தினத்தில் நாம் அம்மனுக்கு கூழ் காய்ச்ச உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, ஆடி ஞாயிறு, அன்னதானத்திற்கும் உரிய தினம்.

    கூழ் மற்றும் பதார்த்தங்களையும் வீட்டில் சமைக்க வேண்டும். முருங்கைக்கீரை, காராமணி குழம்பு, வாழைக்காய், கத்திரிக்காய், இவைகளோடு சில பேர் வீடுகளில் கொழுக்கட்டையும் செய்வார்கள். இவைகளை சமைத்து ஏழை எளிய மக்களுக்கு கூழுடன் சேர்ந்த பதார்த்தத்தை தானமாக அளிக்கும் பட்சத்தில், பல மடங்கு புண்ணியம் நம் குடும்பத்திற்கு சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உங்களுக்கு எந்த வாரம் உகந்த வாரமாக இருக்கின்றதோ, அந்த ஞாயிறு கிழமைகளில் அம்மனை இவ்வாறு வழிபாடு செய்யலாம். இந்த ஞாயிறு தான், வழிபட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. 5 வாரங்களில் வரும் கிழமைகளில் உங்களுக்கு எந்த வாரம் உகந்ததாக உள்ளதோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

    • கறுப்பு வேட்டி வாங்கி தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும்.
    • 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

    ராகு, கேது, தலமான காளகஸ்திக்கு சென்று மூன்று இரவுகள் தங்கி ஈசனை வணங்கி வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.

    ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் சர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து குழந்தைகள் பிறப்பார்கள்.

    ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி தேவிபட்டினம் போகும் பஸ்சில் ஏறி நவபாஷணத்தில் இறங்கவும். கடலில் ஸ்ரீராமபிரானால் அமைக்கப்பட்ட நவக்கிரகங்கள் இருக்கின்றன. கடலில் நீராடி நவக்கிரக பூஜை செய்தால் நாகதோஷம் பரிகாரமடையும். இதனால் குழந்தை பாக்யம் உண்டாகும்.

    ராமநாதபுரத்தில் இருந்து தர்ப்ப சயனம் சென்று விபீடணனுக்கு அபயமளித்த சேத்திரம் வணங்கி, அங்குள்ள தல விருட்சத்தில் தாங்கள் கட்டியுள்ள உடையில் சிறிது கிழித்து ஒரு சிறு கல் வைத்து மரக்கிளையில் கட்டி வந்தால் நாகதோஷம் விலகும்.

    நாகர்கோவிலில் நாகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கு சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷம் பரிகாரமாகும்.

    கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேசுவரம் இருக்கிறது. அந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    பொருள் படைத்தவர் தங்கத்தால் குழந்தை உருவம் செய்து ஏழைக்கு அன்னம் அளித்து வேட்டி, துண்டு தாம்பூலம் பழத்துடன் சொர்ண விக்ரகத்தைத் தானம் செய்தால் நாகதோஷம் விலகும்.

    தங்கத்தில் செய்ய சக்தியில்லாதவர்கள் வெள்ளியில் செய்து தானம் அளிக்கலாம்.

    தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூஜித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி, துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.

    கருங்கல்லில் நாக பிரதிஷ்டை செய்து ஆறு, குளம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

    இரண்டு நாகங்கள் பின்னிக்கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாட்கள் விளக்கேற்றி வைத்து பூஜித்தால் நாகதோஷம் விலகும்.

    கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலைநாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் பூஜித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.

    குளம் அல்லது நதிக்கரையில் அரசு வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும். நல்ல குழந்தைகள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.

    வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    ஓர் ஏழைக்கு அன்னதானம் செய்து அளித்து புது வேட்டி துண்டு. தாம்பூலம் தட்சணையுடன் பால் பசுவும் கன்றையும் தானம் செய்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.

    வீட்டில் ராகு படம் வைத்து தினமும் பூஜை செய்யலாம். தினமும் இராமாயணம் படிக்கலாம்.

    மாதம் ஒரு சிவாலயம் சென்று ஈசனை வழிபட்டு வரலாம். நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்யலாம்.

    ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஒரு தம்பதிக்கு உணவு அளித்து தாம்பூலம் தட்சணை கொடுத்து வலம் வந்து நமஸ்கரித்து வருவதால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

    புத்திரதோஷம் ராகுவால் ஏற்பட்டால் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தின் போது ராகுவின் இஷ்ட தெய்வமான பத்ரகாளிக்கு எலுமிச்சம் பழத்தோலில் எண்ணெய் விட்டுத் திரிபோட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தோஷம் நீங்கி குழந்தை பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர்.

    சிவாலயம் சென்று நவக்கிரகப் பிரதட்சணம் செய்யும் போது முதலில் வசமாக ஒன்பது முறை வலம் வந்து பிறகு ராகு கேதுவுக்கு பிரீதியாக இரண்டு முறை இடமாக வலம் வரவேண்டும். இவ்விதம் தினமும் செய்து வந்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறந்து நீண்ட ஆயுகளுடன் இருப்பார்கள்.

    நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்ய செல்லும் போது ஓரு பிடி உளுந்து எடுத்துச் செல்லவும். ராகுவின் பாதங்களில் உளுந்தையும் கேதுவின் பாதங்களில் கொள்ளையும் வைத்து வணங்கி வந்தால் நாக தோஷம் பரிகாரமாகும்.

    ராகுவை பிரீதி செய்ய கறுப்பு வேட்டி வாங்கி தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா திசையன்விளை நேருஜி கலையரங்கம் அருகில் நடைபெற்றது
    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கி உணவுகள் வழங்கி அன்ன தானத்தை தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக திசையன்விளை நேருஜி கலையரங்கம் அருகில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமை தாங்கி உணவுகள் வழங்கி அன்ன தானத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்ட மைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட அறங்காவல்குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெனி ஸ்டன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகமணி, மார்த்தாண்டம், அமைச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் ரமேஷ், ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் மௌலின், இசக்கி பாபு, நவ்வலடி சரவண குமார், திசைய ன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், உதயா, திசைய ன்விளை பேரூர் இளை ஞரணி அமை ப்பாளர் நெல்சன், உவரி அல்போன்ஸ், அந்தோனி, க. புதூர் ராம கிரு ஷ்ணன், ரம்கிஷோர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 20-வது மாத அன்னதான நிகழ்ச்சி செண்பகவல்லி அம்பாள்- பூவனநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்றது.
    • வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 20-வது மாத அன்னதான நிகழ்ச்சி செண்பகவல்லி அம்பாள்- பூவனநாத சுவாமி கோவில் முன்பு நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். கணபதி ஜூவல்லர்ஸ் கதிரேசன், சரவணா ஸ்டோர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமலேஷ்வர் மேட்ச் ஒர்க் நடராஜன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் அறக்கட்டளை நிறுவனரும், தொழிலதிபருமான சீனிவாசன், செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், கதிரேசன், பாலமுருகன், மாரிமுத்து, லவராஜா, தங்கராஜ், சண்முகசுந்தரம், முருகன், செல்வம், சுப்பிரமணியன், முத்துமாரியம்மன், பொன்னுப்பாண்டி, காளிராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் செல்வலட்சுமி ஸ்வீட்ஸ் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • காலை உணவிற்கு ரூ.7.70 லட்சமும், மதியம் ரூ.12.65 லட்சம், இரவு உணவிற்கு ரூ.12.65 லட்சம் செலவாகிறது.
    • காலை, மதியம், இரவு என தனித்தனியாகவும் அன்னதான நன்கொடை வழங்கலாம்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை சார்பில் தினமும் காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வைகுண்ட க்யூ காம்ப்ளக்ஸ் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.

    தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அன்னதானம் வழங்க ரூ.33 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அன்னதானத்திற்காக நாளொன்றுக்கு சுமார் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 டன் முதல் 7.5 டன் வரை காய்கறிகளும் பயன்படுத்துவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காலை உணவிற்கு ரூ.7.70 லட்சமும், மதியம் ரூ.12.65 லட்சம், இரவு உணவிற்கு ரூ.12.65 லட்சம் செலவாகிறது.

    எனவே அன்னதானம் வழங்க விருப்பமுள்ள பக்தர்கள் ஒரு நாளைக்கு தேவையான அன்னதானம் வழங்க ரூ.33 லட்சம் செலுத்தலாம்.

    மேலும் காலை, மதியம், இரவு என தனித்தனியாகவும் அன்னதான நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அன்னதான செலவுத் தொகையை வழங்கும் பக்தர்கள் அன்னதானம் செய்யும் நாள் அன்று அவர்களே முன் நின்று அன்னதானம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அன்னதான நிதியாக இதுவரை ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது.
    • தினசரி 22 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

    திருவனந்தபுரம் :

    மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த மாதம் இறுதி வரை 8.79 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நடப்பு சீசனையொட்டி இதுவரை சபரிமலை தரிசனத்திற்கு வந்த பக்தர்களில் 4¼ லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு உள்ளது. தினசரி சராசரியாக 22 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

    ஒரே நேரத்தில் 3,500 பக்தர்களுக்கு பந்தி பரிமாறும் வகையில் அன்னதான மண்டபம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தினசரி காலை 6.30 மணி முதல் பகல் 11 மணி வரை உப்புமா, பருப்பு சாதம், சுக்குநீரும், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை புலாவ், சாலட், சுக்குநீரும், மாலை 6.30 முதல் இரவு 11.15 வரை கஞ்சி மற்றும் சிறுபயறு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அன்னதான நிதியாக இதுவரை ரூ.50 லட்சம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ளது.

    மண்டபத்தில் அன்னதானம் வழங்குவது குறித்த அறிவிப்பு பிற மாநில பக்தர்களுக்காக பிற மொழிகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. உணவை பரிமாறிய பிறகு பாத்திரங்களை சுத்தம் செய்ய மின்சார எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அன்னதான மண்டபத்தில் 230 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×