கோவில்பட்டியில் ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை சார்பில் அன்னதான நிகழ்ச்சி

மாதம் தோறும் பவுர்ணமி நாளன்று ஜீவஅனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு அழைப்பாளராக டாக்டர் வெங்கடேஷ் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அன்னதானத்ைத டாக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
அன்னதானத்ைத டாக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவவார்டில் மாதம் தோறும் பவுர்ணமி நாளன்று ஜீவஅனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தமாத பவுர்ணமி அன்று அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் சண்முகவேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் வெங்கடேஷ் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுமார் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று தொடர்ந்து அன்னதானம் நடத்தி வரும் பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரனை டாக்டர் வெங்கடேஷ் பாராட்டி பேசினார். ஏற்பாடுகளை ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com