என் மலர்

  நீங்கள் தேடியது "Aadhaar card"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு ஆதார் திருத்தம் செய்ய பொதுமக்கள் வந்தனர். இந்த சேவை சரியாக செயல்படாததால் அவர்கள் ஆதார் எடுக்க முடியாமல் திரும்பி ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
  • இதனை உடனடியாக சரி செய்து ஆதார் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  அந்தியூர், ஆக .7-

  நாடு முழுவதும் அரசு தேவைகளுக்கும முக்கிய அடையாள அட்டையாக பயன்படுத்தக்கூடிய ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடையாள அட்டையாகவும் பயன்படு கிறது.

  அந்த வகையில் எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்டவை திருத்தங்கள் செய்யவும் புதியதாக ஆதார் எடுப்பவர்களும் எடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக இந்த சேவை (இணைய தளம்வேலை செய்யாததால்) சரிவர செயல்படவில்லை என கூறப்படுகின்றது.

  இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட அந்தியூர் தவிட்டு பாளையம், வெள்ளை யம்பாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கரா பாளையம், அண்ணாமடுவு, அம்மா பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, அத்தாணி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய புதியதாக எடுப்பதற்கும் வருகிறார்கள்.

  அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு ஆதார் திருத்தம் செய்ய பொதுமக்கள் வந்தனர். இந்த சேவை சரியாக செயல்படாததால் அவர்கள் ஆதார் எடுக்க முடியாமல் திரும்பி ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

  எனவே இதனை உடனடியாக சரி செய்து ஆதார் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னாள் ராணுவத்தினா் ஒதுக்கீட்டில் 64 இடங்களுக்கு 282 மாணவியா் விண்ணப்பித்திருந்தனர்.
  • பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் கணக்கிடப்பட்டு நோ்காணல் நடைபெற்றது

  நாமக்கல்:

  நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை, இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது. கல்லூரி முதல்வர் பொறுப்பு பாரதி, கணிதத்துறை தலைவர் எனிமல் நவனோதி, பொருளாதாரத்துறை தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் நேர்காணலை நடத்தினர்.

  மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், என்.சி.சி. மற்றும் முன்னாள் ராணுவத்தினா் ஒதுக்கீட்டில் 64 இடங்களுக்கு 282 மாணவியா் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் கணக்கிடப்பட்டு நோ்காணல் நடைபெற்றது. இக்கல்லூரியில், மொத்தம் இளங்கலை, இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு 970 மாணவியா் சோ்க்கை இடங்கள் உள்ளன. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவியா் காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்துக்குள் வர வேண்டும். கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள் மற்றும் 2 நகல்களை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என கல்லூரி முதல்வா் (பொ) பாரதி தெரிவித்துள்ளாா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர் உள்ளனர்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராகவும் இருக்கின்றனர்.

  திருப்பூர் :

  கடந்த ஜனவரி 5-ந்தேதி வெளியான வாக்காளர் பட்டியல் விவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர் உள்ளனர். ஆண்கள் - 11,76, 924, பெண்கள் -12, 12, 381, திருநங்கைகள்- 309 பேர் உள்ளனர்.ஏறத்தாழ 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர் நிறைந்த மாவட்டம் என்பதால் அடிக்கடி குடிபெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். வாடகை வீடு என்பதால் மாறிக்கொண்டே இருக்கின்றனர். அதன்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராகவும் இருக்கின்றனர். தாங்களாக முன்வந்து பெயர் நீக்க விண்ணப்பித்தும் பெயர் நீக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.பொது வினியோக திட்டத்தில் ஆதார் இணைக்கப்பட்டதும் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டன.

  அதேபோல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைத்தால் மட்டுமே செம்மையான பட்டியல் தயாரிக்க முடியும். தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதமும், துல்லியமாக இருக்கும்.ஒருவழியாக, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க இந்திய தேர்தல் கமிஷன் தயாராகிவிட்டது. இன்று முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

  இப்பணி தொடர்ச்சியாக டிசம்பர் மாத இறுதி வரை நடக்க உள்ளது. அடுத்து வெளியாகும் வாக்காளர் இறுதி பட்டியல், ஆதார் விவரத்துடன் இணைந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முறையாக அறிவிப்பு வெளியிட, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், படிவம் -6 பி பூர்த்தி செய்து, ஆதார் விவரங்களை இணைக்கலாம். ஆன்லைனில் இணைக்க முடியாதவர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைவில் அறிவிப்பு செய்யும் என்றனர்.

  வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க தேர்தல் கமிஷன் வசதி செய்துள்ளது. 'ஆன்லைன்' மூலமாக படிவம் - 6பி' யை பூர்த்தி செய்து சமர்ப்பித்தாலே போதும். https://www.nvsp.in, voterhelpline - மொபைல் ஆப் வழியாக படிவம் - 6பி'யை பூர்த்தி செய்து எளிய முறையில் ஆதார் விவரத்தை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணி தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வரி செலுத்துபவர்கள் ஹெல்த் இன்ஷ்யூரன்சுக்கு பணமாக தவணை தொகையை செலுத்தினால் 80டி-யின் கீழ் வரி கழிவு பெற முடியாது.
  • வங்கிகள் மூலம் செலுத்தினால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

  புதுடெல்லி:

  சட்ட விரோதமாக பண பரிவர்த்தனைகள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் வருமான வரித்துறை அவ்வப்போது கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது.

  வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் 'பான்கார்டு' கட்டாயமாக இருந்து வருகிறது.

  அதேநேரம் ஆண்டுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இப்போது புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

  அதன்படி ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பணபரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  இந்த புதிய விதிமுறையின் படி வங்கிகளில் ஒரே நேரத்திலோ அல்லது பல முறையோ, ஒரே வங்கியிலோ அல்லது பல வங்கிகளிலோ ஒரே கணக்கில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்வது கண்காணிக்கப்படும்.

  * பண மோசடி, சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் மற்றும் நிதி தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வரும் தொடர் நடவடிக்கையின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரொக்கமாக பணம் பரிமாறுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

  * ரூ. 2 லட்சத்துக்கும் மேல் எந்த காரணத்துக்காகவும் ரொக்கமாக பணம் பரிமாற்றம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக ரூ. 3 லட்சத்துக்கு நகையோ, பொருட்களோ வாங்க நேர்ந்தால் செக், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, அல்லது வங்கி மூலமே பணம் செலுத்தப்பட வேண்டும்.

  * நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றுக்கொள்ள முடியாது.

  * ஒருவரிடம் இருந்து ஒரே நேரத்தில் ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிசாக பணத்தை பெறுவது குற்றம். அதற்கு அபராதம் விதிக்கப்படும்.

  * வரி செலுத்துபவர்கள் ஹெல்த் இன்ஷ்யூரன்சுக்கு பணமாக தவணை தொகையை செலுத்தினால் 80டி-யின் கீழ் வரி கழிவு பெற முடியாது. வங்கிகள் மூலம் செலுத்தினால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

  * நிறுவனங்களுக்கு செலுத்துவதற்கோ, நண்பர்களுக்கு கொடுக்கவோ ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக எடுத்து செல்லக்கூடாது. வங்கிகள் மூலமாகவே கொடுக்கப்பட வேண்டும்.

  * சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்றவற்றிலும் பணமாக கொடுக்க ரூ.20 ஆயிரம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  * சுய தொழில் செய்து வரி செலுத்தியவர்கள் ஒரு நபருக்கு ஒரு நாளில் செலவினமாக ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுத்தால் வரி சலுகை கோர முடியாது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆகஸ்டு 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
  • 2023 மார்ச் 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 100 சதவீதம் விபரங்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  திருப்பூர் :

  வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கு தேர்தல் கமிஷன் பச்சைக்கொடி காட்டியுள்ளது. வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும். வருகிற 2023 மார்ச் 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 100 சதவீதம் விபரங்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

  பட்டியலை செம்மைப்படுத்தும் வகையில் வாக்காளரின் ஆதார் விபரங்களை இணைக்கும் திட்டம் துவங்கியுள்ளது. சிறப்பு முகாம் நடத்தியும் விபரம் இணைக்கப்படும்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வீடு, வீடாக சென்று விபரம் சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முதற்கட்டமாக கலெக்டர்களுடன் ஆலோசிக்கப்பவாக்காளரின் ஆதார் விவரங்களை

  இணைக்கும் திட்டம்

  விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவுட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஆதார்-பான் எண்ணை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்.

  புதுடெல்லி:

  ஒவ்வொருவரும் தன்னுடைய பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

  இந்த இரு எண்களையும் இணைப்பதற்கு கடந்த மார்ச் 31-ந் தேதி வரை வருமான வரித்துறை அலுவலகம் அவகாசம் அளித்தது. அதன் பிறகு அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  அதே நேரத்தில் கடந்த மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

  அதன்படி தற்போது ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.500 அபராதத்துடன் பான் எண், ஆதார் எண்ணை இணைக்க ஜூன். 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அபராதம் ரூ.1000 என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.500 அபராதத்துடன் கூடிய காலக்கெடு இன்றுடன் முடிகிறது.

  எனவே நாளை (1-ந் தேதி) முதல் இரண்டையும் இணைக்க அபராதம் ரூ.1000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம். அதற்குள் இணைக்காவிட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாக மாறி விடும். அதன்பிறகு பான் எண்ணை எதிலும் பயன்படுத்த முடியாமல் போய் விடும் என்றும் வருமான வரித்துறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் ஆதார் விவரங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்கி உத்தரவிட்டு உள்ளது.
  ராமநாதபுரம்:

  தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற இணையம் மூலம் விண்ணப்பிக்கும்போது ஆதார் விவரங்கள் கட்டாயம் என்று கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.


  தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற இணையம் மூலம் விண்ணப்பிக்கும்போது ஆதார் விவரங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

  சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் ஆதார் விவரங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்கி உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஆதார் விவரங்களை பதிவு செய்த மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

  இக்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கக்கூடிய புதிய விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31 வரையிலும் மற்றும் புதுப்பிக்க கூடிய விண்ணப்பதாரர்கள் ஜனவரி 15 வரையிலும் ஆதார் விவரங்களை பதிவு செய்வதற்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  சென்னை:

  உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணைய தளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம்.

  தமிழக அரசு

  தொடர்பில்லா சேவைகளை பெறவும், ஆதாரை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, அவருக்கு தொடர்பில்லா சேவைகள் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் புகைப்படம் எடுக்க 11 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  திண்டுக்கல்:

  மத்திய மாநில அரசுகளின் கல்வி ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்டங்கள் பெற ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  உதவிகள் பெறும் மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விபரங்களுடன் ஆதார் எண்ணையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் ஆதார் அட்டை நகல் பெறப்படுகிறது. ஆதார் அட்டை பெற கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு புகைப்படம் எடுப்பவர்கள் வி.ஏ.ஓ.விடம் சான்றுபெற வேண்டி உள்ளது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் வண்ணம் பள்ளிகளில் மையங்கள் அமைத்து ஆதார் அட்டைக்கு புகைபடம் எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக புகைப்பட கருவி, கருவிழி பதிப்பு கருவிகள், படிவங்கள் போன்றவை வந்துள்ளன.

  அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஆதார் மையம் அமைய உள்ளது. அதன்பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் இங்கு வரவழைக்கப்பட்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #PanCard #AadhaarCard
  புதுடெல்லி :

  ஆதார் என்னும் அடையாள அட்டைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, அரசியல் அமைப்பு சட்டப்படி ஆதார் செல்லத்தக்கதுதான் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

  வருமான வரி சட்டத்தின் பிரிவு 139 ஏஏ, வருமான வரி கணக்கு தாக்கலின் போது, ஆதார் எண்ணுடன் ‘பான்’ எண் என்று அழைக்கப்படுகிற வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறுகிறது. இதுவும் சுப்ரீம் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

  இதற்கு இடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ சத்புட்டே ஆகிய இருவரும் 2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரிமான வரி கணக்குகளை ஆதார், பான் எண் இணைக்காமல் தாக்கல் செய்யலாம் என டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

  இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

  இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ். அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

  விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டனர்.

  இந்த உத்தரவில் நீதிபதிகள், ‘‘ஆதார் பற்றிய வழக்கு இந்த கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்பதை கருத்தில் கொண்டுதான் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் இது தொடர்பான வருமான வரிச்சட்டம் பிரிவு 139 ஏஏ செல்லுபடியாகத்தக்கது என்று இந்த கோர்ட்டு முடிவு செய்தது. அதை கருத்தில் கொண்டு, வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிடப்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.

  மேலும், ‘‘2018-19 மதிப்பீட்டு ஆண்டை பொறுத்தமட்டில், டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி 2 பேரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துவிட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2019-20 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை இந்த கோர்ட்டின் உத்தரவுக்கு உட்பட்டுதான் அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. #SupremeCourt #PanCard #AadhaarCard
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தையும் இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. #Aadhaar #Drivinglicence
  பக்வாரா:

  106-வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் நடைபெற்று வருகிறது.

  இதில் பங்கேற்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:-

  ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தையும் (லைசென்ஸ்) இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.

  தற்போது விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து மாற்று லைசென்சையும் அவர்கள் பெற்று விடுகிறார்கள். இதனால் தண்டனையில் இருந்து எளிதில் தப்பி விடுகிறார்கள்.

  இந்த மோசடிகளை தடுக்க ஆதார் எண்ணுடன், டிரைவிங் லைசென்ஸ் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.  சம்பந்தப்பட்ட நபர் பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அவரது விரல் ரேகை, கண் கருவிழி பதிவுகள் உள்ளிட்டவற்றை மாற்ற முடியாது. புதிய உரிமம் பெறும்போது கம்ப்யூட்டர் எச்சரிக்கும். எனவே ஆதார்-லைசென்ஸ் உரிமம் இணைப்பு அவசியமாகும்.

  இதுவரை 127 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டு வந்து திறம்பட செயலாற்றி வருகிறது.

  இவ்வாறு அவர் பேசினார். #Aadhaar #Drivinglicence

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print