search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 வழிச்சாலை"

    ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்துக்குள்ளானதில், சுரங்கத்தினுள் வேலை செய்துகொண்டிருந்த 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #GoldMineCollapsed #MiningDisasters
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த ஆண்டின் இரண்டாவது சுரங்க விபத்து இதுவாகும். இதே மாகாணத்தில் கடந்த 4-ம் தேதி ஏற்பட்ட சுரங்க விபத்தில் 40 பேர் பலியாகினர்.

    ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்கங்களில் பெரும்பாலான சுரங்கங்கள் மிகவும் பழமையானவை. அவை சரியான முறையில் பராமரிக்கப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. #GoldMineCollapsed #MiningDisasters
    துருக்கி நாட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #TurkeyCarAccident
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தெக்ரிடாக் மாநிலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறிய கார் சாலையில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

    தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கிருந்து 8 உடல்களை மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    துருக்கியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். #TurkeyCarAccident
    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். #ChennaiSalemExpressway #Farmers
    சேலம்:

    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இந்த நிலையில் 8 வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை சர்வே எண்ணுடன் பட்டியலிட்டு கடந்த வாரம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே 8 வழிச்சாலைக்காக கூடுதலாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.

    இதைத்தொடர்ந்து மீண்டும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசாரின் தடையை மீறி சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    8 வழிச்சாலை தொடர்பாக சேலம் அருகே உள்ள நிலவாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.


    இதையடுத்து சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த விவசாயிகளை மல்லூர் போலீசார் அழைத்து கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர், இதையும் மீறி நிலவாரப்பட்டியில் விமல் என்பவரது விவசாய தோட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இந்த கூட்டத்தில் வருகிற 14-ந்தேதி விவசாயிகள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுப்பது என்றும், 2-வது கட்டமாக அந்தந்த பகுதியில் ஒரே இடத்தில் திரண்டு விவசாய நிலங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்தனர். கூட்டத்தில் பேசிய அனைவரும் 8 வழிச்சாலைக்கு எதிராக ஆவேசமாக பேசினர்.

    8 வழிச்சாலைக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதுதொடர்பாக கோர்ட்டிலும் முறையிட்டதால் 8 வழிச்சாலை பணிக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்தோம்.

    இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பால் மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் ஒரே வாழ்வாதாரமாக திகழும் அந்த நிலத்தையும் பறித்துக் கொண்டால் நாங்கள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.

    8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் யாரும் ஒன்று திரண்டுவிடக் கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

    போலீசாரின் மிரட்டல்படி கைது செய்தாலும் எங்கள் உயிர் இருக்கும் வரை தொடர்ந்து போராடுவோம், ஒருபோதும் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் ஆவேசமாக கூறினர்.

    இதனால் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது.  #ChennaiSalemExpressway #Farmers
    டெல்லியில் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து நைஜீரியன் உள்பட 2 பேரை கைது செய்தனர். #DelhiMetro #Heroin
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் சாகேத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் போதை பொருள் கடத்தப்படுவதாக டெல்லி போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, டெல்லி போலீசார் இன்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். 

    அவர்களிடம் நடத்திய சோதனையில் 8 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 32 கோடி ரூபாய் மதிப்புடையது.

    இதையடுத்து, அவர்கள் கடத்தி வந்த 8 கிலோ ஹெராயினை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஹெராயினை கடத்தி வந்த ஆஸ்கார் என்ற நைஜீரிய நாட்டு ஆசாமி உள்பட 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். #DelhiMetro #Heroin
    ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே வேன் மீது, டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். #RoadAccident
    காக்கிநாடா:

    ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் காடிசெர்லா வெங்கடபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேற்று காக்கிநாடாவில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் வேன் மூலம் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர்.

    மாலை சுமார் 3 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டலங்கா செருவு என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. வேனுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேனில் இருந்த 5 பெண்கள் மற்றும் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர்.  8 பேர் பலத்த காயங்களுடன் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #RoadAccident
    மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கையின் கொடூர சட்டப்பிடியில் சிக்கியுள்ள 8 தமிழக மீனவர்களை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி திரேஷ்புரம், மாப்பிள்ளையூரணி, சுனாமிநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் இந்த கொடூர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் 26 லட்சம் அபராத தொகை அல்லது 3 மாதம் சிறை என தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    மீனவ சமுதாய மக்களின் வாழ்வில் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டிய மத்திய - மாநில அரசுகள், தங்கள் கடமையில் இருந்து முற்றிலும் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    இந்த சட்டம் இலங்கையால் அமல்படுத்தப்பட்டபோதே இது முழுக்க முழுக்க தமிழக மீனவர்களை குறிவைக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தோம். ஆனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசோ இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இது பெரும் பாதகத்தை தற்போது தமிழக மீனவர்கள் வாழ்வில் ஏற்படுத்திவிட்டது.



    மீனவர்கள் பிரச்சினையில் இந்த மெத்தனப் போக்கை பழனிசாமியின் அரசு தொடர்ந்து கடைப்பிடிக்குமேயானால், அது மீனவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.

    தங்கள் சுயநலனிற்காக மட்டுமே மத்திய அரசோடு நட்புறவுகொள்ளும் இந்த துரோக ஆட்சியாளர்கள், தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 8 மீனவர்களையும், மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, இலங்கை அரசின் இக்கொடூர சட்ட பிடியில் இருந்து அவர்களை காப்பாற்றிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDinakaran
    ராஜஸ்தானில் சுற்றுலா சென்ற பள்ளிக்கூட கார் லாரியுடன் மோதிய விபத்தில் மாணவிகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலும்பர் நகரை சேர்ந்தவர்கள் ஒரு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

    கைராட் பகுதியில் சென்றபோது அந்த கார் முன்னால் சென்ற லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 3 மாணவிகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், ஆசிரியர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற போது விபத்து ஏற்பட்டு 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
    நேபாளம் நாட்டில் பனிப்புயலில் சிக்கி தென்கொரியா மலையேற்றக் குழுவை சேர்ந்த 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #MountGurja #eightclimberskilled #Nepalpeak
    காத்மாண்டு:

    நேபாளம் நாட்டின் அன்னப்பூர்ணா பகுதியில் 7,193 மீட்டர் உயரமுள்ள குர்ஜா என்னும் மலை உள்ளது. உலகின் மிகவும் உயரமான 14-வது மலையாக கருதப்படும் இங்கு அடிக்கடி பனிப்புயல் வீசுவதுண்டு.

    இருப்பினும், சவாலான இந்த மலையை ஏறி சிகரத்தின் உச்சியை தொடும் உற்சாகத்தை அனுபவிப்பதற்காக உள்நாட்டினர் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்றக் குழுவினரும் இந்த குர்ஜா மலையை அதிகம் விரும்புகின்றனர்.



    அவ்வகையில், தென்கொரியா மலையேற்றக் குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக சென்ற நேபாளத்தினர் உள்பட 8 பேர் வீசிய பனிப்புயலில் சிக்கி உயிரிழந்ததாக  இன்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #MountGurja #eightclimberskilled #Nepalpeak
    ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. #TitliCyclone
    ஐதராபாத்:

    வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது. நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். இந்த ஆண்டு உருவான புயல்களில் டிட்லி புயல்தான் அதிக வலுவான புயல் என்று வானிலை இலாகா அறிவித்தது.

    டிட்லி புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகம் புயல் ஆபத்தில் இருந்து தப்பியது. நேற்று மாலை டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

    டிட்லி புயல் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த புயல் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 140 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. 

    இதையடுத்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருந்தபோது அது மேலும் வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.



    மிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின் கம்பங்களும் சரிந்து கிடக்கின்றன.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் டிட்லி புயல் துவம்சம் செய்துவிட்டது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலுக்கு 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன.

    இந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகளில் சென்று அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #TitliCyclone 
    நைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். #Nigeria #BokoHaramAttack
    கனோ:

    நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது.

    இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள போர்னோ மாகாணத்தில் நேற்று இரவு போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் இரண்டு கிராமங்களில் புகுந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். #Nigeria #BokoHaramAttack
    8 வழி சாலை திட்டத்தில் தமிழக அரசு கோர்ட்டு உத்தரவினை மீறி விதி மீறல்களை செய்வதாக ஜி.கே.வாசன் குற்றச்சாட்டியுள்ளார். #GkVasan
    கரூர்:

    கரூர் வெங்கமேடு பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம்-சென்னை இடையேயான 8 வழி சாலை அமைப்பதில் கோர்ட்டு உத்தரவினை மீறி தமிழக அரசு சில விதிமீறல்களை செய்கிறது. இதை அங்கிருக்கும் மக்களே முழுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு மக்கள் மீது திட்டங்களை திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்றவாறு செயல்படுவது தான் ஜனநாயகத்திற்கு நல்லதாக இருக்கும். 8 வழி சாலையை 6 வழி சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை செய்திருப்பது குறித்து இறுதி முடிவு வந்த பின்னரே கருத்து கூற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன்னாள் எம்.பி. நாட்ராயன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல்சேகர், மாநில நெசவாளர் அணி தலைவர் அக்னி ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர். #GkVasan
    8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டப்பிரிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது இல்லை. சட்டவிரோத மானதும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. #GreenwayRoad #Highcourt

    சென்னை:

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு கையப்படுத்தப்பட உள்ள நிலத்தை தமிழக அரசு அளவு எடுத்தது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தங்களது விவசாயநிலங்களை எல்லாம் அரசு கையப்படுத்த அளவிடுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த திட்டத்துக்காக, குளங்கள், மரங்கள், மலைகளை அழிக்க அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.

    இந்த திட்டத்தை எதிர்த்தும், இந்த திட்டத்துக்காக நிலத்தை கையப்படுத்துவதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் விசாரித்தபோது, கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் இருந்து, அதன் உரிமையாளர்களை வெளியேற்றக்கூடாது என்றும் அந்த நடவடிக்கைக்கு தடை விதித்தும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

     


    இந்த நிலையில், இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

    அந்த வழக்கில், 2013ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நிலத்தை கையப்படுத்துவதற்கான சட்டத்தில், பிரிவு 105 அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த 105வது பிரிவின்படி, நெடுஞ்சாலை, அணுஉலை, ரெயில்வே போன்ற அவசர தேவைகளுக்கான திட்டங்களாக இருந்தால், சமூக பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளாமல் நேரடியாக நிலத்தை கையப்படுத்தலாம் என்று கூறுகிறது. அதனால், இந்த பிரிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த பிரிவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பிரிவு 105 அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது இல்லை. இந்த பிரிவு சட்டவிரோதமானதும் இல்லை. இந்த பிரிவை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

    சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கான நிலத்தை கையப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    தற்போது, 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 105 செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இந்த பிரிவை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட அதிகாரிளுக்கு தடை எதுவும் ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். #GreenwayRoad #Highcourt

    ×