என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.
    • தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது.

    மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் தமிழக முழுவதும் திமுக பொதுக்கூட்டம் நடைபெறுகின்றனர்.

    அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் வளைந்த முதுகோடு அடகு வைத்த ஆட்சி தமிழகத்தில் நடந்தது.

    திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது.

    கொள்ளைப்புறம் வழியாக வலதுசாரி சிந்தனைகளை தமிழ்நாட்டில் புகுத்த பாஜக முயற்சிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கான குரலாக திமுக எப்போதும் ஒலிக்கும்.

    பிரதமர் மோடி சர்வாதிகார எண்ணத்தோடு செயல்படுகிறார். மாநில அரசுகள் டெல்லிக்கு காவடி தூக்கும் நிலைமையை மாற்றி, அதிகார பகிர்வுக்கு வழிவகுப்பேன் என பிரதமர் மோடி சொன்னார்.

    வரி விதிப்பில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. கூட்டாட்சி தத்துவத்தை ஆதரிப்பதாக சொன்ன நீங்கள், அப்படி செய்ததாக ஒரு சாட்சியை காட்ட முடியுமா ?

    மாற்றுக்கட்சி ஆளும் மாநிலங்களை பழிவாங்க மாட்டேன் என சொல்லிவிட்டு, பழிவாங்கும் அரசியலை மட்டுமே செய்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம்.
    • எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த ஏழு வருடமாக விளையாடியவர் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன ஜாஸ் பட்லர். இவரை மெகா ஏலத்தில் குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசன் வருகிற 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனான சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்டர் தனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர், அணியின் ஒரு வீரராக இல்லை என்ற நிலைக்கு நான் இன்னும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    ஐபிஎல் அணியை வழி நடத்தும் வாய்ப்பை கொடுக்கிறது. விளையாட்டில் உயர்தரத்தை வழங்குகிறது. நெருங்கி நட்பை உருவாக்க அனுமதிக்கிறது.

    ஜாஸ் பட்லர் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நாங்கள் இருவரும் ஏழு வருடங்கள் இணைந்து விளையாடியுள்ளோம். இந்தக் காலகட்டத்தில், எங்கள் பேட்டிங் பார்ட்னர்ஷிப் காலம் மிக நீண்டதாக இருந்ததால், நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டோம்.

    எனக்கு பட்லர் மூத்த சகோதரர் மாதிரி. எனக்கு சந்தேகம் வரும்போதெல்லம், அவரிடம் பேசுவேன். நான் 2021-ல் கேப்டனாகும்போது, அவர் என்னுடைய துணைக் கேப்டன். நான் சிறந்த கேப்டனாக உதவி செய்தார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர் மற்றும் என்னுடன் ஆறு பேரை தக்கவைத்தது. இதனால் அவர் அணியில் இருந்து வெளியிடுவது கடும் சவாலாக இருந்தது. இங்கிலாந்து தொடரின்போது அவருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பட்லரிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு வீரராாக இல்லை என்று முடிவுக்கு இன்னும் நான் வரவில்லை எனத் தெரிவித்தேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு விசயத்தை என்னால் மாற்ற முடியும் என்றால், ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் வீரர்களை வெளியிட வேண்டும் என்ற விதியை மாற்றுவேன்.

    ஐபிஎல் விதிக்கு சில நேர்மறையான அம்சங்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக உருவாக்கிய அந்த இணைப்பை, உறவை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தார். நான் வேறு என்ன சொல்ல முடியும்?.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    • தமிழக வெற்றிக்கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • மாவட்ட பொறுப்பாளர்கள் நாளை நேரில் வரும்படி கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 6ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நாளை நடைபெற உள்ளது.

    அதன்படி, மாவட்ட பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை சந்திக்க உள்ளார்.

    தமிழக வெற்றிக்கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதனால், ஏற்கனவே சந்தித்தவர்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் நாளை நேரில் வரும்படி கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை காலை 11 மணியளவில் மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    பிரபல சொகுசு கார் நிறுவனமான லம்போர்கினி குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியான Stroller-களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    லிமிட்டட் எடிசனாக உருவாகியுள்ள உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பெற்றோர்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள்.
    • என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது கர்நாடக மாநில விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் இரண்டு கர்நாடக மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இது வெறும் வதந்திகள்தான். ஆதாரங்கள் தேவை. இந்த விவகாரத்திற்குப்பின் பாஜக-வின் சதித்திட்டம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

    ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரத்தில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி வெறும் யூகம்தான். எந்த அமைச்சர்கள் பெயர் வெளியானது? யாராவது பார்த்தீர்கள் அல்லது கேட்டீர்களா?. அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள். என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.

    என்னுடனோ அல்லது முதல்வருடனோ போட்டோ எடுத்துக் கொண்ட ஒரு நபர், குற்றச்செயலில் ஈடுபட்டால் அவருக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று அர்த்தமா?.

    தங்கம் கடத்திய ரன்யா ராவ் உடன் எந்த அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் வெளிப்படுத்துவீர்களா? என முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பாஜக எக்ஸ் பக்க பதிவு மூலம் கேட்டுள்ளது.

    ரன்யா தங்கம் கடத்தல் வழக்கில் ஒருவேளை பாஜக-வுக்கு தொடர்பு இருக்கலாம், ஆனால் காங்கிரஸ்க்கு தொடர்பு இல்லை. எந்த அமைச்சரும் இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட மாட்டார்கள். முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    விமான நிலையங்களில் வாட்ச், பெல்ட் என அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பரிசோதனைகள் இருக்கும்போது 14 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டுள்ளது என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

    இது பாஜக-வின் சதி திட்டம். இதில் எந்தவொரு அமைச்சரும் ஈடுபடவில்லை என உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • கும்பமேளாவினால் தமிழ்நாட்டில் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மகா கும்பமேளாவிற்காக வடக்கு மற்றும் மத்திய ரெயில்வேவுக்கு தெற்கு ரெயில்வே சார்பாக ரெயில் பெட்டிகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதியில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண்-67209) திருப்பதி - காட்பாடி பயணிகள் ரெயில் மார்ச் 13 முதல் 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    காட்பாடியில் இருந்து காலை 06.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67206) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் திருப்பதியில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67207) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67208) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் சேவை மார்ச் 13 முதல் 16 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67205) திருப்பதி - காட்பாடி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து இரவு 21.10 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 67210) காட்பாடி - திருப்பதி பயணிகள் ரெயில் மற்றும் காட்பாடியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 66017) காட்பாடி - ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் மற்றும் ஜோலார்பேட்டையில் இருந்து காலை 12.55 மணிக்கு புறப்படும் (வண்டி எண் - 66018) ஜோலார்பேட்டை - காட்பாடி பயணிகள் ரெயில் மார்ச் 13 முதல் 17 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது
    • ரெயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 2,197 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த அரசு ஏற்கனவே அனுமதி

    தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை எழுப்பிய புகாருக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மு.தம்பிதுரை அவர்கள் தெரிவித்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது தொடர்பாக கீழ்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

    கடந்த 2021-மே மாதம் முதல் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த இரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இரயில்வே திட்டங்களுக்காக மாநிலம் முழுவதும் கையகப்படுத்தப்படும் நிலங்களின் விவரங்கள்.

    தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் இரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2197.02 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முக்கியமான 17 இரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1253.11 ஹெக் நிலங்களில், 1144.84 ஹெக்டேர் நிலங்களுக்கான நில எடுப்புப் பணிகள் முடிவுற்று (அதாவது 91% சதவீதம்) நிலம் இரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் குறிப்பாக முக்கியத் திட்டங்களான திண்டிவனம்-நகரி அகல ரயில்பாதை (100%), மதுரை-தூத்துக்குடி அகல ரயில்பாதை (100%), மணியாச்சி-நாகர்கோவில் அகல ரயில்பாதை (97%), கன்னியாகுமரி-நாகர்கோவில் அகல இரயில் பாதை இரட்டிப்பாக்குதல் (100%), தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல இரயில் பாதை கட்டம்1 (100%), சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை (98%). கொருக்குப்பேட்டை-எண்ணூர் நான்காவது வழித்தடம் (100%), மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரயில்பாதை (100%), பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு (100%), புதிய அகல இரயில் பாதை (சேலம் கரூர் வழித்தடம் உருவாக்குதல்) (100%), மன்னார்குடி- நீடாமங்கலம் அகல ரயில்பாதை (100%), சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை மூன்றாவது நான்காவது வழித்தடம் (100%), மற்றும் விழுப்புரம்-திண்டுக்கல் அகல இரயில்பாதை (100%) ஆகிய திட்டங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ளவாறு 97% முதல் 100% வரை நில எடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு ஒன்றிய இரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எஞ்சிய நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இரயில்வே துறையால் எடுக்கவேண்டிய நடவடிக்கையால் நிலுவையிலுள்ள இனங்கள்

    திருவண்ணாமலை-திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டத்திற்கு 229,23 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய 2011 ஆம் ஆண்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டும் இரயில்வே துறையினரால் நில எடுப்பிற்கு நிதி ஒதுக்கப்படாததால் நில எடுப்புப் பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன.

    அத்திப்பட்டு புத்தூர் இடையிலான இரயில்வே தடத்திற்கு இதுவரை இரயில்வே துறையினரால் நிலத் திட்ட அட்டவணை (L.P.S) சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ரோஹ்தக் தொகுதியிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது.
    • உள்ளாட்சித் தேர்தலில் 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின

    அரியானா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி 10 நகராட்சிகளில் ஒன்பது மாநகராட்சிகளை பாஜக வென்றுள்ளது.

    மீதமுள்ள ஒரு இடமான மானேசரில் பாஜகவில் இருந்து விலகிய அதிருப்தி தலைவர் இந்திரஜித் யாதவ் வெற்றி  பெற்றார்.

    குருகிராம், பரிதாபாத், ரோஹ்தக், ஹிசார் மற்றும் மூன்று நகராட்சிகள்  உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மார்ச் 2 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேலும், மார்ச் 9 ஆம் தேதி பானிபட் நகராட்சிக்கு தனி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இவை தவிர, அம்பாலா மற்றும் சோனிபட் மேயர் பதவிகளுக்கான இடைத்தேர்தல்களும், 21 நகராட்சி குழுக்களின் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல்களும் மார்ச் 2 ஆம் தேதி அன்றே நடத்தப்பட்டன.

    இதில் பதிவான வாக்குகள் இன்று (புதன்கிழமை) காலை முதல் எண்ணப்பட்டன. கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பாஜக முன்னிலை பெற்றதால், கட்சித் தலைவர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.

    காங்கிரஸ் எங்கும் வலுவான போட்டியை அளிக்க முடியவில்லை. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ரோஹ்தக் தொகுதியிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. மறுபுறம், 26 வார்டு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    முன்னதாக கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது தெரிந்ததே. சட்டமன்றத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் 41 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1981-ஆம் ஆண்டு கொள்ளைக் கும்பல் 24 பேரை சுட்டுக்கொன்றது.
    • இது தொடர்பாக பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பலால் ஒரு கிராமத்தில் 24 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 44 வருடங்கள் கழித்து 3 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி மாவட்டத்தில் ஜேஸ்ரானா காவல் நிலையத்திற்கு உள்பட்ட திஹுலி கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் கொள்ளை கும்பம் நுழைந்தது.

    அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 24 பேரை ஈவு இரக்கமின்றி கொள்ளைக் கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர். சட்டுக்கொன்றதுடன் அவருர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது.

    இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981-ம் அணடு நவம்பர் மாத் 19-ந்தேதி புகார அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 17 குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர். இதில் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் அடங்குவர்.

    மீதமுள்ள 4 பேர் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் வழக்கை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில்தான் கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மார்ச் 18-ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார்.
    • சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருவண்ணாமலையில் 3 சென்ட் இடத்திற்காக விருதம்பாள் என்கிற மூதாட்டி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விருதாம்பாள் உயிரிழந்துள்ளார்.

    சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மூதாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த எல்லப்பன் என்பவர் மற்றும் தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது.

    குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    73 வயதான ஜகதீப் தன்கர் இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 நாள் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை முன்னேற்றம் கொண்டுள்ளதால் இன்று (மார்ச் 12) மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு துணைத் தலைவரின் உடல் நிலையை உன்னிப்பாக கண்காணித்து வந்தோம்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்த பிறகு, எய்ம்ஸ் மருத்துவக் குழு இந்தப் பரிந்துரைகளை வழங்கியது. அவர் குணமடைந்த பிறகு பணியில் சேருவார் என்று எய்ம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடலை அவர் பாடினார்.
    • நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன்

    பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தின் நௌகாச்சியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டணியின் ஹோலி கொண்டாட்டத்தில் ஆளும் ஜேடியு கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் பங்கேற்றார்.

    பிரபல பாடகி சாய்லா பிஹாரி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையேறிய எம்எல்ஏ கோபால் மண்டல் மைக்கை எடுத்து ஆபாசமான பாடல்களை பாடத் தொடங்கினார்.

    "பானி மே பங்கா பங்கி சாய், பாவ்ஜி...' என்று சகோதரரின் மனைவியை ஆபாசமாக அழைக்கும் பாடல் ஒன்றை அவர் மேடையில் பாடி அனைவரையும் கலங்கடித்தார்.

    மேலும் மேடையில் இருந்த பெண் நடனக் கலைஞரை கையை பிடித்து நடனமாடிய அவர், அப்பெண்ணின் கன்னத்தில் 500 ரூபாய் தாளை ஒட்டவைத்தார். மைக்கில் தொடர்ந்து பேசிய கோபால் மண்டல், நான் நன்றாக நடனமாடுவேன் என பலர் கூறுகின்றனர்.

    நான் தினமும் நடனமாடுகிறேன், தினமும் முத்தமிடுகிறேன் என்று கூறினார். எனது நடன வீடியோக்கள் வைரலாகி, முதலமைச்சர் நிதிஷ் குமார் என்னை கடிந்து கொள்கிறார். ஆனால் முதலமைச்சர் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை குறிப்பிட்டு எதிர்க்கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகள் மீது அரசும், நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

     

    ×