search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள்"

    • போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.
    • தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 5 மணி நேரத்தில் 10 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

    குறிப்பாக போடி-மதுரை ரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருப்பதால் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.

    இதே போல் போடி, கொட்டக்குடி, குரங்கணி, பீச்சாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் உருண்டு நடுரோட்டில் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கன மழை காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி சாலையில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இவை காண்பதற்கு மிகுந்த ரம்யமாக இருந்தாலும் தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் குரங்கணி போலீசார் மற்றும் நெடுஞ் சாலைத்துறையினருடன் இணைந்து சாலையில் விழுந்த மரங்களையும், பாறைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்துக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைச்சாலையில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    • சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.
    • கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரையில் தனியார் கியாஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பைப் மூலம் கியாஸ் கொண்டுவரப்பட்டு சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு டேங்கரில் கியாஸ் நிரப்பிய லாரி ஒன்று மீஞ்சூர்-மணலி நெடுஞ்சாலையில் வெள்ளிவாயில் சாவடி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரியில் உள்ள டேங்கரில்இருந்து திடீரென கியாஸ் கசிந்து வெளியேறத் தொடங்கியது.

    சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு இறங்கினார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

    மேலும் வாகனங்கள் திரும்பி செல்ல முடியாததால் அதில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். மேலும் லாரியில் இருந்து வெளியேறிய கியாசை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் அத்திப்பட்டு, மணலி புதுநகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு கேஸ் நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் டேங்கரில் இருந்து கியாஸ்கசிவு ஏற்பட்ட பகுதியை சரிசெய்தனர். இதன்பின்னர் கியாஸ் ஏற்றிய லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதனால் மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் சேறும் குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் மணவாளன் நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கொட்டிவந்தனர்.

    ஆனால் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவது நிறுத்தப்பட்டு பின்னர் வெங்கத்தூர், கன்னிமாநகர் பகுதியில் பள்ளி அங்கன்வாடி குடியிருப்புகள் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டது.

    இதில் தினம்தோறும் 5 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் மலை போல் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை தற்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைத்து கொட்டப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான டிராக்டர்கள் மூலம் கொட்டப்படும் கழிவுகள் சாலையோரம் குவிந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனம் மற்றும் பொது மக்கள் சென்று வரும் நிலையில் குப்பை கழிவுகளால் தொற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கழிவுகளில் பிளாஸ்டிக், தெர்மாகோல், மெத்தை, முட்டை கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் கால் நடைகள், நாய்கள் அதனை இழுத்து சாலையில் போட்டு சென்று விடுகின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் குப்பை கழிவுகளில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    எனவே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • .வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
    • பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்தால் இது போன்ற விபத்துக்கள் நிகழாது என்று தெரிவித்தனர்.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக திருமூர்த்தி மலைக்கு செல்வதற்கு பிரதான சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலமாக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள்,வாகன ஓட்டிகள் பயனடைந்து வருகின்றனர். இதில் உடுமலை திருமூர்த்தி மலை சாலையில் யூனியன் ஆபீஸ் பஸ் நிலையத்தின் அருகே பாதாள சாக்கடை தொட்டி சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து அந்த தொட்டி சீரமைக்கப்பட்டது.இதற்காக அதன் இருபுறங்களிலும் சாலையின் பகுதி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து டிவைடர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சூழலில் நேற்று அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. டிவைடர் இருந்த காரணத்தினால் வாகன ஓட்டிகளுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது உடுமலை நோக்கி சென்ற மூன்று கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. ஆனால் கார்கள் சேதம் அடைந்தது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலையில் பாதாள சாக்கடை தொட்டிகள் சேதம் அடைவது தொடர்கதையாக உள்ளது. ஒரு முறை அமைக்கும் போதே அவற்றை தரமானதாக அமைத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாது. கட்டுமானத்திற்காக வைக்கப்பட்ட டிவைடரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்தால் இது போன்ற விபத்துக்கள் நிகழாது என்று தெரிவித்தனர்.

    • இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் தச்சூர் கூட்டு சாலையில் இருந்து பஞ்செட்டி சர்வீஸ் சாலை வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இணையும். இந்த சர்வீஸ் சாலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது சென்னை, செங்குன்றம், வண்டலூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, தடா, மாதர்பாக்கம், ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொன்னேரி- தச்சூர் கூட்டு சாலை அருகில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் உள்ள சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    மழைநீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் காணப்படுவதால் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி உள்ளது. இதனால் இந்த சர்வீஸ் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    சுமார் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு சர்வீஸ்சாலை படுமோசமாக உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்வதற்கு செங்குன்றம் சுங்கச்சாவடி மூலம் வரி வசூலும் செய்யப்படுகிறது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக வாகன ஓட்டிகள் கூறும்போது, இந்த சாலையை சீரமைக்ககோரி தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சாலையில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றவும், மழைநீர் கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சாலை வழியாக வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறார்கள்.
    • குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    மணலி அருகே உள்ள பொன்னேரி தேசிய நெடுஞ்சாலை எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. மேலும் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் கண்டெய்னர்களின் யார்டுகள் மணலிபுதுநகர், விச்சூர், ஆண்டார் குப்பம் உள்ளிட்ட பகுதியில் இருப்பதால் எப்போதும் இந்த சாலையில் கனரக வாகன போக்குவரத்து இருக்கும். சாலைபோக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான இந்த சாலையில் மாநகரபஸ்கள், கண்டெய்னர் லாரிகள், கார், இருசக்கர வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். இந்த நிலையில் மணலி எம்.எப்.எல். சந்திப்பு அருகே பொன்னேரி நெடுஞ்சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக பல்லாங்குழி போல் காட்சி அளிக்கிறது. மேலும் சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து சிதறிகிடக்கின்றன.

    இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக சாலைப்பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறார்கள்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பொன்னேரி நெடுஞ்சாலை இதேபோல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வப்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதையடுத்து போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையைசீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறும்போது, எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய சாலையாக பொன்னேரி நெடுஞ்சாலை உள்ளது. கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலை சேதமடைந்து வருகின்றது. குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    சாலையை சீரமைப்பதற்காக வாகன வரி, சாலை வரி, என பொதுமக்கள் செலுத்துகின்றனர். அது மட்டுமின்றி சாலைகளை பராமரிப்பதற்காக சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலைகளை பராமரிப்பதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இதற்கான டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் சாலையை பராமரிக்காமல் கிடப்பில் விட்டு விடுகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.

    • மழை நீர் வடிகால் வாய் பணி நிறைவடைந்த நிலையில் சாலைகள் போடாமல் உள்ளது.
    • ராயபுரம் நோக்கி செல்லும் வழியில் திரும்பும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.

    ராயபுரம் பகுதி கிழக்கு கல்மண்டபம் சாலை, ஜே.பி.கோவில் தெரு, சோலையப்பன் தெரு, தாண்டவராயன் தெரு கடந்த சில மாதங்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. ஆனால் மழை நீர் வடிகால் வாய் பணி நிறைவடைந்த நிலையில் சாலைகள் போடாமல் உள்ளது.

    இதனால் உட்பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

    இதே போல் புது வண்ணாரப்பேட்டை பகுதி பூண்டி தங்கமாள் தெரு, வண்ணாரப்பேட்டை பகுதி ஜி.ஏ.ரோடு, எம்.சி.ரோடு, தங்க சாலை தெரு, பிராட்வே மற்றும் மன்னடி போன்ற பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி முடிந்த நிலையில் ஆங்காங்கே சாலையில் மண்களால் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதில் வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.

    இது தொடர்பாக இந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர். பூபாலன் கூறியதாவது:- மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பணி முடிந்தும் சாலைகள் போடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அது மட்டு மில்லாமல் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

    குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. புது வண்ணாரப்பேட்டை பகுதி டோல்கேட் பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது இங்கு இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    ஒரு சில பகுதிகளில் மின்விளக்குகள் விட்டு விட்டு எரிந்து வருகிறது. ராஜாஜி சாலையிலிருந்து ராயபுரம் நோக்கி செல்லும் வழியில் திரும்பும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. விரைவில் தரமான சாலைகள் அமைத்து பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க வழி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வடசென்னை பகுதிகளில் உட்புற சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் இருந்து காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடிகால் பணி முடிந்து சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில் மறுபடியும் குடிநீர் வாரியத்தினர் சாலையை தோண்டியுள்ளனர். இதனால் ரோடுகள் பராமரிக்கபடாமல் உள்ளது.

    பொது இடங்களில் சாலையிலே மது குடித்து வருகிறார்கள். இதனால் பள்ளி மாணவிகள், வேலை முடித்து செல்லும் பெண்கள் பாதுகாப்பின்றி பயந்தபடி செல்கிறார்கள்.

    அது மட்டும் அல்லாமல் குடித்துவிட்டு மது பாட்டில்களை சாலையிலே போட்டு விட்டு செல்கின்றனர். இதை அப்பகுதி துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்வது மில்லை. சாலையில் மது அருந்துபவர்களை போலீசார் கண்டு கொள்வது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவொற்றியூர் கே.சி.பி. சாலையில் மழை பெய்த போது நேற்று முன்தினம் மழை நீர் அதில் தேங்கி நின்றதால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாத நிலையில் உள்ளது.
    • பள்ளத்தை சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடத்தூர், 

    தருமபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள விநாயகர் கோவில் அருகில் தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாத நிலையில் உள்ளது. மேலும், தற்போது சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அந்த பள்ளம் பெரிய பள்ளமாக ஏற்பட்டுள்ளது.

    ஆபத்தான அந்த வளைவில் உள்ள இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றது. அந்த குழியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த ஆபத்தான சாலையில் அதிவேகமாக வாக–னங்களில் செல்பவர்கள் காயமடைந்து உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலையும் உருவாகி வருகிறது. எனவே, இந்த சாலையை முறையாக பராமரித்து பள்ளத்தை சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
    • இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.

    மதுரை

    மதுரையில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு கோடையை மிஞ்சும் வகை யில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதற்கு முடிவு கட்டும் வகையில் சில நாட்களாக மாலை வேளைகளில் பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    ஆனால் அதே வேளை யில் மழைக்கு தாங்காத மாநகராட்சி சாலைகளால் மக்கள் மறுபுறம் கடும் அவ தியடைந்து வருகிறார்கள். ஆங்காங்கே பல்வேறு கார ணங்களுக்காக தோண்டப் பட்ட குழிகள் சிறிய குளம், குட்டைகளாக மாறியுள்ளன. குறிப்பாக பழங்காநத்தம், செல்லூர் உள்ளிட்ட பகுதிக ளில் பெரும் சேதம் ஏற்பட்டு மக்கள் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர்.

    சேறும், சகதியுமான சாலை

    மதுரை மாநகராட்சி 27-வது வார்டு செல்லூர் 60 அடி சாலை மெயின் ரோட் டில் சேறும் சகதியாக வயல்வெளி போல் காட்சி அளிப்பதால் அந்த வழியாக நடந்து செல்வோர், வாக னங்களில் செல்வோர் சாக சம் செய்வது போல் கடக்க வேண்டியதுள்ளது. சீர மைப்பு மற்றும் மராமத்து பணிகள் மந்த நிலையில் நடப்பதால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்ற னர்.

    இதுகுறித்து 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.மாயத்தேவன் கூறுகை யில், செல்லூர் 60 அடி ரோட்டில் சேரும், சகதியாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரு கின்றனர். நடந்து செல் வோர், வாகனங்களில் செல் வோர் விழுந்து செல்கின்ற னர்.

    தினமும் ஆயிரக்கணக் கானோர் கடந்து செல்லும் இந்த ரோட்டில் உடனடியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும். பலமுறை இது குறித்து மாமன்ற கூட்டங்க ளில் எடுத்துரைத்தும் ஆணையாளரிடம் மனு வழங்கியும் பணிகள் நடை பெறவில்லை. சம்பந்தழு ழுட்ட மாநகராட்சி அதிகாரி யிடம் சொல்லியும் அவரும் எதுவும் செய்து கொடுப்ப தில்லை.

    நான் கவுன்சிலராக பொறுப்பேற்ற போது செல்லூர் 60 அடி ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது. 15 மாதங்கள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவ டையவில்லை. மேலும் குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகள் ரிப்பேர் ஆகி உள்ளதால் தூய்மை பணியா ளர்கள் குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. மேலும் குப்பைத்தொட் டியை எடுத்துச் செல்லும் குப்பை லாரிகளும் சரிவர இந்த வார்டுக்கு வருவ தில்லை.

    எனது வார்டு அ.தி.மு.க. வார்டு என்பதால் மாநக ராட்சி அதிகாரிகள் இந்த வார்டை தொடர்ந்து புறக்க ணித்து வருகின்றனர். பாதாள சாக்கடை கழிவு நீர் தெருக்களில் தேங்கி இருக் கும்போது கழிவுநீர் உறிஞ் சும் வாகனத்தை அனுப்பச் சொன்னால் அனுப்புவ தில்லை. மேலும் இந்த வார்டில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. சமீ பத்தில் ஒரு வெறி நாய் எட்டு பேருக்கும் மேல் கடித்தது. உடனடியாக அதி காரிகளுக்கு இதைச் சொல் லியும் நாய் பிடிக்கும் வண்டியை அனுப்பி நாய் களை பிடிப்பதற்கு ஏற்பாடு கள் செய்யவில்லை.

    இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளி யில் செல்ல முடியவில்லை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல பயப்படு கின்றனர். மேலும் இந்த வார்டுக்கு உட்பட்ட பல தெருக்களில் சாலை வசதி கள் இல்லாமல் உள்ளதால் குண்டும், குழியுமாக காணப் படுகிறது. மழை நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிக மாகி வருகிறது.

    எனவே உடனடியாக அனைத்து தெருக்களிலும் தார்ச் சாலைகளை அமைப் பதற்கு மாநகராட்சி அதிகா ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக் களை திரட்டி சாலை மறிய லில் ஈடுபட போகிறேன் என்றார்.

    • சாலையின் நடுவே குறுக்காக பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் -நாஞ்சிக்கோட்டை சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கருணாவதி நகர் பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டு முழுமையாக முடியாத நிலையில் உள்ளது. மேலும் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை கிழக்குப் பகுதிக்கு இணைக்கும் வகையில் சாலையின் நடுவே குறுக்காக பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் அந்த வழியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பணியை விரைந்து முடிக்க கோரி ஏற்கனவே கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கை நிறைவேறாததால் இன்று காலை தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் திடீரென பொதுமக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடர்ந்து நடத்தி உடனடியாக முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இது குறித்து தகவல் அறிந்த தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • இரவு நேரங் களில் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்து ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது.
    • சாலை பகுதியில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் -மண்டு நெடுஞ் சாலையில் ஆங்–காங்கேய பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்து–கள் நடக்கிறது.

    இந்த நெடுஞ் சாலையில் வாழைத் தோட்டம், பெல்ரம்பட்டி, சீங்காடு, அமானி மல்லாபுரம், மாரண்ட ஹள்ளி, தேன் கனிக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு இந்த வழியாக பேருந்துகள் மற்றும் கனரக வானங்கள் இயக்கப் பட்டு வருகிறது.

    இந்த சாலையில் முனியப்பன் கோவில், மண்டு, வாழைத் தோட்டம் நெடுஞ்சாலை வரை சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி இருசக்கர வாகனம் விபத்து ஏற்பட்டு வருகிறது.

    மேலும் இரவு நேரங் களில் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்து ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நட வடிக்கை மேற்கொண்டு நெடுஞ் சாலை பகுதியில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது.
    • இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக்கோடு போல இந்த ஆறு அமைந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் மேல் பழமையான உயர் மட்டப் பாலம் அமைந்துள்ளது.

    தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் இந்த ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்தும், தரைத்தளத்தில் புற்கள் வளர்ந்தும் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தால் பாலத்தின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த பக்கவாட்டு சுவர்களில் சாய்ந்து நின்று சில நேரங்களில் சற்று தொலைவில் செல்லும் ரெயில், சலசலத்து ஓடும் ஆறு என இயற்கையை பலரும் ரசிக்கின்றனர்.

    அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் முழுமையாக உடைந்தால் பொதுமக்கள் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், பாலத்தை முழுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தடுப்பு சுவர்

    குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு ஓடைசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரை பாலமும் உயர் மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன.

    உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்துக்கு அருகில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இரு புறங்களிலும் கரைப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தேங்கி கிடக்கிறது.எனவே நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கான்கிரீட் பாலம்

    குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து கோவை மாவட்டம் ஜல்லிபட்டி செல்லும் மெயின் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூரிலிருந்து பொங்கலூர், மேட்டுக்கடை வழியாக மருதூர், பொன்னாபுரம் பகுதிக்கு செல்லவும் இந்த ரோடுதான் முக்கியமாக விளங்கி வருகிறது. இதில் தும்பலப்பட்டியை ஒட்டி பாயும் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தில் வேறெங்கும்இல்லாதவிதமாக 2 ஓடைகள் இணைகின்றன. மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் பாயும்போது, தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் குறைந்த அளவு தண்ணீர் செல்லும்போது பாலத்தில் பாசி பிடித்து இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மீது தார்ஜல்லி போட்டுள்ளனர். மேலும் பாலத்தின் வடக்கு பகுதியில் குறுகிய வளைவு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ரோட்டின் வளைவுகளை சரிசெய்து, உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைத்து தரவேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×