search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில்  டிவைடரால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
    X

    போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்.

    உடுமலையில் டிவைடரால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்

    • .வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
    • பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்தால் இது போன்ற விபத்துக்கள் நிகழாது என்று தெரிவித்தனர்.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக திருமூர்த்தி மலைக்கு செல்வதற்கு பிரதான சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலமாக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள்,வாகன ஓட்டிகள் பயனடைந்து வருகின்றனர். இதில் உடுமலை திருமூர்த்தி மலை சாலையில் யூனியன் ஆபீஸ் பஸ் நிலையத்தின் அருகே பாதாள சாக்கடை தொட்டி சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து அந்த தொட்டி சீரமைக்கப்பட்டது.இதற்காக அதன் இருபுறங்களிலும் சாலையின் பகுதி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து டிவைடர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சூழலில் நேற்று அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. டிவைடர் இருந்த காரணத்தினால் வாகன ஓட்டிகளுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது உடுமலை நோக்கி சென்ற மூன்று கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. ஆனால் கார்கள் சேதம் அடைந்தது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலையில் பாதாள சாக்கடை தொட்டிகள் சேதம் அடைவது தொடர்கதையாக உள்ளது. ஒரு முறை அமைக்கும் போதே அவற்றை தரமானதாக அமைத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாது. கட்டுமானத்திற்காக வைக்கப்பட்ட டிவைடரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்தால் இது போன்ற விபத்துக்கள் நிகழாது என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×