என் மலர்
நீங்கள் தேடியது "Risk"
- மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையிலான நான்கு வழி சாலை பணிகள் மும்முரம்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் சாலைகளில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிக்கொண்டு சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், ரேசில் ஈடுபடுவதை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இப்படி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தஞ்சையில் சில வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையிலான நான்கு வழி சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த சாலையில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ரேசில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதாவது சாலைகளில் மின்னல் வேகத்தில் வண்டியை ஓட்டி சென்று வீலிங் சாகசம் செய்கின்றனர். குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இந்த சம்பவம் நடந்து வருகிறது.
மோட்டார் சைக்கிள் முன் சக்கரத்தை அலேக்காக தூக்கியும், பின் சக்கரத்தை தூக்கியும் தீப்பொறி பறக்க வீலிங் சாகசம் செய்தனர்.
தொடர்ந்து இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இது போன்ற சாகச சம்பவம் நடைபெறாமல் தடுக்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்பு பணியையும் பலப்படுத்த வேண்டும் என்றனர்.
- தேங்கிய மழைநீரை உரிய எந்திரங்களை கொண்டு அகற்ற நடவடிக்கை.
- கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு நாட்களில் சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கத்தில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர்அமுதவல்லி தலைமையில், மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தி ல்மழைநீர் வடிகால்வாய்கள் சத்தம் செய்யப்பட்டு தூர்வாரி ஆழப்படுத்துவதையும், தேங்கிய மழைநீரினை உரிய இயந்திரங்களைக் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து உறுதி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலரிடம் அறிவுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள இடற்பாடுகளை களையவும், நிரந்தர தீர்வு காணுவதற்கு விரிவான ஆய்வறிக்கை திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்காலிகமாக உள்ள சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி பேசினார். அதனை தொடர்ந்து கலெக்டர் லலிதா பேசியதாவது:
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு தினங்களில சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதனால் பொது மக்கள் யாரும் நீர்நிலைகள் அருகில் செல்லவோ, குளிப்பதோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ள ப்படுகி றார்கள். மாவட்டத்திலுள்ள 4 பல்நோக்கு நிவாரன முகாம்கள் மற்றும் தற்காலிக நிவாரன முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு எதிர் பாராத அசம்பாவிதங்களை தவிர்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், உதவி ஆணையர் (கலால்) அர நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள்அ ர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), இணை இயக்குனர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முருகண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர்கவித பிரியா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் மின்கம்பங்கள் குடிசை பகுதிகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்
இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்ற பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை மாணவர்களுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.
- நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி அனைவரையும் வரவேற்றார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தினர்.
அரக்கோணம் நான்காவது பட்டாலியனை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வீரர்கள், குழு கமாண்டர் ராஜேஷ்குமார் மீனா, ராஜன் தலைமையில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தாங்களே காத்துக் கொள்வது, ஆபத்தில் சிக்கியுள்ள மற்றவர்களை எவ்வாறு காப்பாற்றுவது போன்று பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகையை மாணவ-மாணவிகளுக்கு செய்து விளக்கம் அளித்தனர்.
நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, அலுவலர் சுகுமாரன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, சீர்காழி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், சீர்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடேசன், ஜோதி, சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் தொகுத்து வழங்கினார்.
பூதலூர்:
கல்லணையிலிருந்து கோவிலடி வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக கோவிலடி, திருச்சின்னம் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த பல மரங்கள் அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டன.
வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் அப்புறப்ப டுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சின்னம் பூண்டி கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த மரமும் ஒன்று வெட்டி அகற்றப்பட்டது. அதன் அடிபாகம் வெட்டப்பட்டு வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படாமல் அந்த இடத்திலேயே சாலையோரம் கிடக்கிறது.அந்த மரத்துண்டில் சிவப்பு கொடி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் மரம் இருப்பதை சிகப்பு கொடியால் அறிந்துகொள்ள இயலும். இரவு நேரங்களில் பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சமயங்களில் மரம் கிடைப்பதை அறிந்து கொள்ளமுடியாமல் விபத்துக்கள் ஏற்படக்கூ டும். எனவே உடனடியாக வெட்டப்பட்டு அகற்றப்ப டாமல் இருக்கும் அடிமர த்தை அகற்றி போக்குவரத்து சீராக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெர்மனியின் முனிச் நகரில் இதய நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மருத்துவ நிபுணர் எபாமேனோண்டஸ் ஃபௌண்டாஸ் கூறுகையில், 10 லட்சம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட 11 ஆய்வுகள் மூலம் குறைவாக தூங்குவதால் இதயநோய் வருவது போன்று தொடர்ந்து அதிகமாக தூங்கினாலும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த காரணிகளால் இதயம் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய இன்னும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஆய்வின்படி, குறைவாக தூங்குபவர்களுக்கு 11 சதவிகிதம் இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகமாக தூங்குபவர்களுக்கு 33 சதவிகிதம் அதாவது 3 மடங்கு அதிகமாக இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி அருகே போடியில் ஜ.க.நி ஆரம்ப பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 1,000மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றன. இந்தபள்ளியின் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது.
அதன் அன்றாட குப்பைகளை இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் பகுதிகளில் குப்பைகளை நகராட்சி சேகரிக்கின்றன. குப்பைகளால் மிகுந்த துர்நாற்றம் வீசுகின்றது. துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பள்ளியில் பயிலும் சிறு வயது குழந்தைகள் என்பதால் குப்பைகளின் துர்நாற்றத்தினால் அடிக்கடி குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, மூச்சுத் திணறல், காய்ச்சல் ஏற்படுகின்றது.
கல்வி கற்கும் குழந்தைகள் நோய்களால் பாதிக்கப்படுவதால் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது.
எனவே நகராட்சியும், பள்ளி நிர்வாகவும் சேர்ந்து குப்பைகள் சேகரிக்கும் இடத்தை வேறொரு இடத்திற்கு மாற்றி அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும், குழந்தைகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை தேவதானப்பட்டிக்கு கொண்டு வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதேபோல் மாணவ-மாணவிகளும் இங்கு வந்து வெளியூர்களுக்கு செல்வதால் தேவதானப்பட்டி முக்கிய சந்திப்பாக உள்ளது.
கோவை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருவதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. பைபாஸ் சாலை அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்றது. தற்போது முழுவதும் முடிவடைந்த நிலையில் சாலை அமைக்கப்படாததால் விபத்து அபாயம் உள்ளது.
இதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக சாலை சாரல் மழைக்கே செல்லரித்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பால பணிகள் முடிந்துள்ளது. ஆனால் சாலை சீரமைக்கப்படாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






