search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பள்ளத்தால் அடிக்கடி  விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
    X

    வாழைத் தோட்டம்-மண்டு நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதை படத்தில் காணலாம்.

    சாலை பள்ளத்தால் அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

    • இரவு நேரங் களில் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்து ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது.
    • சாலை பகுதியில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் -மண்டு நெடுஞ் சாலையில் ஆங்–காங்கேய பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்து–கள் நடக்கிறது.

    இந்த நெடுஞ் சாலையில் வாழைத் தோட்டம், பெல்ரம்பட்டி, சீங்காடு, அமானி மல்லாபுரம், மாரண்ட ஹள்ளி, தேன் கனிக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு இந்த வழியாக பேருந்துகள் மற்றும் கனரக வானங்கள் இயக்கப் பட்டு வருகிறது.

    இந்த சாலையில் முனியப்பன் கோவில், மண்டு, வாழைத் தோட்டம் நெடுஞ்சாலை வரை சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி இருசக்கர வாகனம் விபத்து ஏற்பட்டு வருகிறது.

    மேலும் இரவு நேரங் களில் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்து ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நட வடிக்கை மேற்கொண்டு நெடுஞ் சாலை பகுதியில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×