search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சம்"

    • விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
    • ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில், விபத்தில் உயிரிழந்த ராமனின் வாரிசுதாரரான அவரது மனைவி நீலா என்பவருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    அருகில் பாரத ஸ்டேட் வங்கி நாகை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை முதன்மை மேலாளர் ராமநாதன், புதுப்பட்டினம் கிளை மேலாளர் ஹேம்நாத் மற்றும் பலர் உள்ளனர்.

    • சீரமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடைக்காகுழி ஊராட்சியில் உள்ள பெருங்குளம் - தச்சக்காணி செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பெருங்குளம் - தச்சக்காணி செல்லும் சாலையில் காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து பெருங்குளம்-தச்சக்காணி சாலை சீரமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார், அடைக்காகுழி ஊராட்சி தலைவர் ஜெயராணி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், அடைக்காகுழி ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகவன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜினோ, சுனில் குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்

    • நேற்றிரவு வழக்கம்போல் இருவரும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
    • ரூ. 3 லட்சம்‌ மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40).

    இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் தாய் இருவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இதேபோல் அருகில் உள்ள வீட்டில் வீரையன் (44) என்பவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவியும், மகளும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் இருவரும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென நள்ளிரவில் வெடிக்கும் சத்தம் கேட்டு இருவரும் கண் விழித்து பார்த்தபோது வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் கத்தி கூச்சலிட்டனர்.

    அதற்குள்ளாக, அருகில் இருந்த மாரிமுத்து என்பவரின் வீட்டிலும் தீ பரவியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தண்ணீர் ஊற்றி போராடி தீயை அணைத்தனர்.

    இதில் வீட்டில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    அதிர்ஷ்டசவமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்திருக்கிறது
    • பெண்கள் மூலம் பேசியதும் அம்பலம்

    நாகர்கோவில்:

    வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் நாடு முழுவதும் பலர் பணத்தை இழந்து வருவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் சிலர் ஏஜண்டுகளை நம்பி பணத்தை இழந்து தான் வருகின்றனர்.

    அப்படி ஒரு சம்பவம் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை, கருங்கல், மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், ஜேம்ஸ்டவுன் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலரை தொடர்பு கொண்ட ஏஜண்டுகள், ஆஸ்திரேலியாவில் வேலை இருப்பதாக கூறி உள்ளனர். இதனை நம்பிய இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், சென்னையில் மருத்துவ பரிசோதனைக்கும் ஏஜண்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

    விரைவில் வேலைக்கான உத்தரவு, விசா போன்றவை வந்து விடும் எனக் கூறி ஒவ்வொரு இளைஞரிடமும் ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஏஜண்டுகள் வசூலித்துள்ளனர்.

    ஆனால் நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தும் எந்தவித விசாவும் வராத நிலையில் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை இளைஞர்கள் உணர்ந்தனர்.இதனை தொடர்ந்து அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அவ்வப்போது தங்கள் செல்போனில் ஏஜண்டு தரப்பில் யாராவது பெண்கள் பேசி, கண்டிப்பாக விசா வந்து விடும் என நம்பிக்கை தெரிவித்ததாகவும் இதனை நம்பி காத்திருந்ததாகவும் ஏமாந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஒரு கட்டத்தில், பணிக்கான விசா கிடைக்க வில்லை. எனவே சுற்றுலா விசாவில் உங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். பின்னர் பணிக்கான விசா வாங்கி தருகிறோம் என்றும் மோசடி கும்பல் உறுதியளித்தனர்.

    இந்தக் கும்பல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதுபோல மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம். குறைந்தது 250 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    இதன்மூலம் மோசடிக் கும்பல் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து பணம் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 

    • படகில் சமையல் செய்யும்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது.
    • தீ மளமளவென பரவி ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்தவர் டொனோட்டஸ் (வயது 38). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற இவரது படகு, நேற்று மாலை கரை திரும்பியது. படகை தொழிலாளர்கள் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர்.

    பின்னர் படகின் சமையல் செய்யும் அறையில் தொழிலாளர்கள் கேஸ் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் பீதியில் படகிலிருந்து வெளியேறி வெளியே வந்தனர்.

    அதற்குள் தீ மளமளவென ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது. இதில் படகின் மேற்கூரையும் எரிந்து நாசமானது.உடனே மீனவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று படகில் பரவிய தீயை அணைத்தனர். அருகில் படகுகளுக்கு டெம்போவில் கொண்டு வரப்பட்ட தண்ணீரையும் மீனவர்கள் பீய்ச்சி அணைத்தனர். படகில் மீன்கள் பதப்படுத்தி வைத்திருந்த அறையில் தீ பரவவில்லை. இதனால் பிடித்து வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்கள் தப்பின. இந்த சம்பவத்தால் நேற்றிரவு குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தகவல்
    • கடந்த 6 மாதங்களாக திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து செல்வது வழக்கம்.

    கடந்த 6 மாதங்களாக திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 24 ஆயிரம் பேரும், பிப்ரவரி மாதம் 73 ஆயிரத்து 700 பேரும், மார்ச் மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரும், ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேரும், மே மாதம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பேரும், ஜூன் மாதம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேரும், ஜூலை மாதம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேரும், ஆகஸ்ட் மாதம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேரும், செப்டம்பர் மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், அக்டோபர் மாதம் 2 லட்சத்து 11 ஆயிரம் பேரும், நவம்பர் மாதம் 2 லட்சத்து 9 ஆயிரம் பேரும், கடந்த டிசம்பர் மாதம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேரும் படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர். மொத்தத்தில் கடந்த ஆண்டில் 17 லட்சம் பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்தனர்.

    இதில் கடந்த ஆண்டில் டிசம்பர் மாதம் மட்டும் அதிக அளவு அதாவது 2 லட்சத்து 53 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாய கிட்டங்கி கட்டிடத்தினை பார்வையிடப்பட்டது.
    • ரூ.68.70 லட்சம் மதிப் பில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார் பில், ராஜாக்கமங்கலம், தோவாளை, அகஸ்தீஸ்வ ரம் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண் டார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கீழ், ராஜாக்க மங்கலம் ஊராட்சி ஒன்றியம், கணியாகுளம் ஊராட்சியில் அழகன் கோணம் இசக்கியம்மன் சாலையில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப் பில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பணியினை பார் வையிட்டதோடு, பறக்கை ஊராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவ வளாகத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாய கிட்டங்கி கட்டிடத்தினை பார்வையிடப்பட்டது.

    மேலும், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல் வாய்மொழி தாணுமாலை யான்புதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாநில திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் செலவில் கூடுதலாக இரண்டு வகுப்ப றைகள் கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு, மாதவலாயம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினையும், வெள் ளமடம் அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.5.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டுள்ள சமையலறை கட் டிடத்தினை ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு, ஆரல்வாய்மொழி பேரூ ராட்சிக்குட்பட்ட பெரு மாள்புரம் அரசு தொடக் கப்பள்ளியில் பழுதடைந்த சமையலறை கட்டிடமும் பார்வையிடப்பட்டது.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்கப்பள்ளி யில் மாநில திட்டத்தின் கீழ் ரூ.68.70 லட்சம் மதிப் பில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற் கான இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டதோடு, வல்லன்குமாரவிளை அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.98.55 லட்சம் மதிப்பில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத் தினையும், இளங்கடை வடக்கு அரசு தொடக் கப்பள்ளியில் ரூ.68.70 லட் சம் மதிப்பில் கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்கான இடத்தினை யும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டதோடு, பணியினை விரைந்து முடித்து மாண வர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரதுறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது.

    மேலும், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சி நகரில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.57 லட்சம் மதிப்பில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டிருந்த பணிகள் என மொத்தம் ரூ.3.71 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, அனைத்து வளர்ச்சித்திட் டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண் டுவர வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, செயற் பொறியாளர் ஏழிசை செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற் பொறியாளர், உதவி செயற் பொறியாளர், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் இவர் புதிய வீடு கட்டுவதற்காக கடன் வாங்க திட்டமிட்டார்.
    • ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதை அனுப்பிய பிறகு கடனுக்கு முன் பணம் ஆக ரூ.7.86 லட்சம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் விஜயகுமார் (வயது 36). கட்டிட மேஸ்திரியான இவர் புதிய வீடு கட்டுவதற்காக கடன் வாங்க திட்டமிட்டார் . அதே நேரத்தில் அவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் வீடு கட்டுவதற்கு ரூ.18 லட்சம் கடன் தருவதாக ஒரு மெசேஜ் வந்தது.

    அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் நில பத்திரங்கள் நகலை ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது . இதை அனுப்பிய பிறகு கடனுக்கு முன் பணம் ஆக ரூ.7.86 லட்சம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை நம்பிய விஜயகுமார் பல தவணைகளாக அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 7.86 லட்சம் அனுப்பினார். ஆனால் 3 மாதம் ஆகியும் பணம்கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை அந்த செல்போன் மற்றும் வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்போது சுமார் ரூ. 42 லட்சம் மதிப்புள்ள 300 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
    • 3 பேர் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 17 செல்போன்கள் கைப் பற்றப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்க ளிலும் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    அதன்படி சைபர் கிரைம் போலீசார், காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். அந்த வகையில் தற்போது சுமார் ரூ. 42 லட்சம் மதிப்புள்ள 300 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

    அவ்வாறு கண்டு பிடிக்க ப்பட்ட செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உரிய நபர்களிடம் இன்று ஒப்ப டைத்தார். செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் கிரைம் பிரிவு போலீ சாரையும் அவர் வெகுவாக பாராட்டினார்.

    மேலும் செல்போன் காணாமல் போன தாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த வருடத்தில் மட்டும் சுமார் ரூ.87 லட்சம் மதிப்புள்ள 622 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார்.

    மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டு வந்த 3 பேர் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 17 செல்போன்கள் கைப் பற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரியாத நபரிடமிருந்து செல்போன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அது குற்ற சம்ப வத்தில் சம்மந்தப்பட்ட செல்போனாக இருக்கலாம்.

    மேலும் பொதுமக்கள் செல்போன்களை தவற விட்டாலோ, அல்லது திருட்டு போனாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கவேண்டும். இல்லையெனில் ( https://eservices.tnpolice.gov.in ) என்ற காவல் துறை இணைய தளத்திலும் தங்க ளது புகாரை பதிவு செய்ய லாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • டாஸ்மாக் மேலாளர்-விற்பனையாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
    • சஸ்பெண்டு நடவடிக்கை பாய்கிறது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக விஜய சண்முகம் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை செல்வன் நகர் ஆகும்.

    இவர் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார்.இவர் டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதை யடுத்து போலீசார் அவரை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் டதி பள்ளி சந்திப்பு அருகே லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகத்தின் கார் சென்றது.பைப்புவிளை அருகே டாஸ்மாக் மேலா ளர் விஜய சண்முகம் காரை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தார்.

    அப்போது வடசேரியில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளரும் டாஸ்மாக் மேலாளரின் கார் டிரைவருமான ரெஜின் அங்கு வந்து காரை எடுக்க முயன்றார். அப்போது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் விசா ரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் தங்கி இருந்த அறைக்கு சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம் மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர் ரெஜின் மீதும் பணம் கேட்டு வாங்குதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக் மேலாளர் மற்றும் கடை விற்பனையாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீ சார் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மீது துறைவாரி யாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட் டுள்ளது. எனவே இருவரும் சஸ்பெண்டு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    • பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி தலைமை தாங்கினார்.
    • 2 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தலா 9 லட்சம் வீதம் 18 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அனைத்து வங்கிகள் ஒருங்கிணைந்து வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆசிர்வாதம், வங்கி மேலாளர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிபாபநாசம் இந்தியன் வங்கி கிளை சார்பில் 2 மகளிர் சுய உதவி குழுவினருக்கு தலா 9 லட்சம் வீதம் 18 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அனைத்து தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், வட்டார இயக்க மேலாளர் சரண்யா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, கவிதா, சசிகலா, உமாராணி, கீதா, சரஸ்வதி மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • பணத்திற்கு ஆசைப்பட்டுகணவன்-மனைவி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
    • இது குறித்து நடவடிக்க வேண்டும் என நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பொது மேலாளர் மாரிமுத்து(42) என்பவர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    நாங்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் நியூ ஸ்டேட் பேங்க் காலனியில் தலைமை இடமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஈரோடு, பவானி, ஓமலூர், சங்ககிரி, அரச்சலூர், மற்றும் அம்பாசமுத்திரம் என 6 இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.

    எங்கள் நிறுவனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவன்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்திற்கு வரச்சொல்லி ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு பணத்தை அவரிடம் வழங்கினோம்.

    அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் திருமணத்தையும் நாங்களே தலைமையேற்று நடத்தி வைத்தோம். இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் எங்கள் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.

    இருவரும் 3 மாதத்திற்குள் எங்கள் நிதி நிறுவனம் இடமிருந்து ரூ.19 லட்சத்து 37 ஆயிரத்து 325 ரூபாயை மோசடி செய்து கையாடல் செய்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உள்ளனர்.

    எனவே அவர்கள் இருவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    ×