search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாட்டு வேலை"

    • முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
    • httsshit.ly.sandidatetes2023 என்ற google form - ல் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது.

    இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி ,என்ஜினீயரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், இத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.

    இம்முகாமில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையான அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக்க ணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திற னாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

    தனியார் நிறுவனங்க ளில் பணியமர்த்த ப்பட்டாலோ அல்லது வேலைவா ய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெற்று வந்தாலோ அவர்களின் வேலை வாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. நெரிசலை தவிர்க்க முன்பதிவு அவசியம் என்பதால் httsshit.ly.sandidatetes2023 என்ற google form - ல் தங்களது சுயவிபரங்க ளை பதிவு செய்து இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருக்கும் வேலையளி ப்போர்கள் விபரம் அறிய hts/www.decctenkasi.com.mega jobfain:202 என்ற google link-ஐ பார்த்து பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார்.

    • எச்1பி விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
    • தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருந்தும் அவர்கள் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் எச்1பி விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    மேலும் சுற்றுலா விசா, வணிக விசாவில் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட காலம் வரைதான் அங்கு இருக்க முடியும். இதே போன்ற விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பணிபுரிய அனுமதி இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் அமெரிக்க விசாவில் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. வணிக மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு பயணிக்கும் தனிநபர், வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருந்தும் அவர்கள் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் புதிய வேலை வாய்ப்பை தொடங்கும் முன் பி1 (வணிகம்) மற்றும் பி2 (சுற்றுலா) விசாவை வேலைவாய்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு மாற்றுவதற்கான மனு மற்றும் கோரிக்கை அளித்து அனுமதி பெற வேண்டும்.

    விசாவின் நிலையை மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அந்த நபர் அமெரிக்காவை விட்டு வெளியேறி பின்னர் புதிய வேலை வாய்ப்பை பெறுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்திருக்கிறது
    • பெண்கள் மூலம் பேசியதும் அம்பலம்

    நாகர்கோவில்:

    வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் நாடு முழுவதும் பலர் பணத்தை இழந்து வருவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் சிலர் ஏஜண்டுகளை நம்பி பணத்தை இழந்து தான் வருகின்றனர்.

    அப்படி ஒரு சம்பவம் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை, கருங்கல், மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், ஜேம்ஸ்டவுன் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலரை தொடர்பு கொண்ட ஏஜண்டுகள், ஆஸ்திரேலியாவில் வேலை இருப்பதாக கூறி உள்ளனர். இதனை நம்பிய இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், சென்னையில் மருத்துவ பரிசோதனைக்கும் ஏஜண்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

    விரைவில் வேலைக்கான உத்தரவு, விசா போன்றவை வந்து விடும் எனக் கூறி ஒவ்வொரு இளைஞரிடமும் ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஏஜண்டுகள் வசூலித்துள்ளனர்.

    ஆனால் நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தும் எந்தவித விசாவும் வராத நிலையில் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை இளைஞர்கள் உணர்ந்தனர்.இதனை தொடர்ந்து அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அவ்வப்போது தங்கள் செல்போனில் ஏஜண்டு தரப்பில் யாராவது பெண்கள் பேசி, கண்டிப்பாக விசா வந்து விடும் என நம்பிக்கை தெரிவித்ததாகவும் இதனை நம்பி காத்திருந்ததாகவும் ஏமாந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஒரு கட்டத்தில், பணிக்கான விசா கிடைக்க வில்லை. எனவே சுற்றுலா விசாவில் உங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். பின்னர் பணிக்கான விசா வாங்கி தருகிறோம் என்றும் மோசடி கும்பல் உறுதியளித்தனர்.

    இந்தக் கும்பல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதுபோல மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம். குறைந்தது 250 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    இதன்மூலம் மோசடிக் கும்பல் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து பணம் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 

    • வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக தகவல் வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ''டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை, ''அதிக சம்பளம்'' என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் வருகிறது.

    இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்ப்டடால் 96000 23645, 87602 48625, 044-28515288 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மார்த்தாண்டம் அருகே ஏஜெண்டு வீட்டு முன்பு போராட்டம்
    • சென்னை தம்பதி உள்பட 3 பேர் மீது புகார் கூறப்பட்டதால் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சியில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டு ஒருவரது வீடு உள்ளது. இந்த வீட்டின் முன்பு 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மார்த்தாண்டம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக பணம் கொடுத்தவர்கள் என்பதும் தற்ேபாது ஏமாந்து நிற்பதால் ஏஜெண்டு வீட்டு முன்பு திரண்டதாகவும் கூறினர்.

    மேலும் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    சென்னை மண்ணடி பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் பெண் மற்றும் அவரது கணவர், குமரி மாவட்ட ஏஜெண்டு ஆகியோர், கடந்த 2020-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் கார்டன் வேலைக்கு ஆட்கள் தேவை உள்ளது என்றும் அதற்காக ஒரு ஆளுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இதனை நம்பி தமிழக-கேரள எல்லை பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேர் பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை கொடுத்து உள்ளனர்.

    அதனை பெற்றுக் கொண்ட டிராவல்ஸ் நிறுவன பெண், விரைவில் விசா மற்றும் டிக்கெட் அனுப்பி தரப்படும் என்று கூறினார். ஆனால் ஒரு வருடம் கடந்தும் எந்த பதிலும் அளிக்க வில்லை. இதனையடுத்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது, நியூசிலாந்து நாட்டில் தற்போது ஆட்கள் தேவை இல்லை, அதே வேலை அமெரிக்க நாட்டில் உள்ளது. அதற்கான விசா தங்களிடம் கைவசம் உள்ளது. அதற்கு கூடுதலாக பணம் செலவாகும் என்றும் உடனே பணத்தை செலுத்தி மருத்துவ சான்று எடுத்தால் ஒரு வாரத்திற்குள் அமெரிக்கா செல்லலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

    இதனை நம்பியவர்கள் உடனடியாக பணத்தை செலுத்தி மருத்துவ சான்று எடுத்துள்ளனர். இதனை யடுத்து மீண்டும் ரூ. 50 ஆயிரம் செலுத்தினால் உடனடியாக டிக்கெட் கிடைத்து நீங்கள் அமெரிக்கா செல்லாம் என்று கூற, அதனையும் நம்பி பணத்தை கொடுத்து விட்டு ஊருக்கு வந்துள்ளனர்.

    ஆனால் வேலைக்கான உத்தரவு எதுவும் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பணம் கொடுத்தவர்கள்,மீண்டும் சென்னைக்கு சென்று அங்கிருந்த அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அலுவலகம் பூட்டி கிடந்து உள்ளது.

    அவர்களது எண்களுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து டிராவல்ஸ் நடத்தி வரும் பெண்ணின் வீடு இருக்கும் வட பழனி பகுதிக்கு சென்று பார்த்த போது அந்த வீடும் பூட்டி கிடந்துள்ளது.

    இதனால் விரக்தியடைந்த 25 பேரும் குமரி மாவட்டம் வந்து, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஆன்லைன் புகார் அளித்து உள்ளனர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பணத்தை வாங்கிய குமரி மாவட்ட ஏஜென்டான திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வீட்டிற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ரூ.36 லட்சம் வரை தாங்கள் இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசார் சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் பெண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

    அப்போது அவர் பணத்தை நாளை காலை 10 மணிக்குள் வழங்குவதாக கூறி இணைப்பை துண்டித்து உள்ளார். பாதிக்கப்பட்ட வர்கள் கூறும்போது தாங்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் வெளிநாடு மோகத்தில் இவர்களிடம் ஏமாந்து இருப்பதாக தெரிவித்தனர்.

    • வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என கனவுகளோடு கம்போடியா நாட்டுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு அங்கு சென்றதும் அதிர்ச்சி காத்திருந்தது.
    • தனி அறையில் அடைத்து வைத்தும் கம்போடியா கும்பல் இளம்பெண்ணை சித்ரவதை செய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் வெளிநாட்டில் உள்ள தொலைக்காட்சி அலுவலகம் ஒன்றில் தொலைபேசி அழைப்பாளர் பணி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு அவர் பேசினார். அப்போது எதிர்முனையில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த முருகன் என்ற வாலிபர் பேசினார். அவர் கம்போடியா நாட்டில் வேலை இருப்பதாகவும், அங்கு உங்களை அனுப்பி வைப்பதற்கான ஏஜெண்டுகள் சென்னையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    வேலையில் சேர்த்து விடுவதற்கு புரோக்கர் கமிஷனாக ரூ.4 லட்சம் தர வேண்டும் என்றும், மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்றும் முருகன் கூறியுள்ளார். இதற்கு இளம்பெண் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து அவரை கம்போடியா நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை சென்னை ஏஜெண்டுகள் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் ராஜ்குமார் என்பவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    புதுச்சேரி இளம்பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக ரூ.4 லட்சம் கேட்ட கும்பல் இறுதியாக ரூ.3¼ லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அவரை சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    வெளிநாட்டு வேலை, கை நிறைய சம்பளம் என கனவுகளோடு கம்போடியா நாட்டுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு அங்கு சென்றதும் அதிர்ச்சி காத்திருந்தது. தொலைபேசி அழைப்பாளர் வேலையை வழங்காமல் அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை எடுபிடி வேலைக்கு பயன்படுத்தி உள்ளனர்.

    நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். ரூ.2½ லட்சத்துக்கு உன்னை விலைக்கு வாங்கியுள்ளோம் என்று கம்போடியா கும்பல் கூறியுள்ளது. தாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் விபசார கும்பலிடம் விற்று விடுவோம். உன்னை அதிக விலைக்கு வாங்குவதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றும் கூறி கம்போடியா கும்பல் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இதனால் பயந்து போன இளம்பெண் வேறு வழியின்றி அவர்கள் சொல்வதை கேட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது தனி அறையில் அடைத்து வைத்தும் கம்போடியா கும்பல் இளம்பெண்ணை சித்ரவதை செய்துள்ளது. இதனை அங்கு பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் பார்த்து இளம்பெண் மீது கருணை காட்டியுள்ளார். பின்னர் அவரது உதவியுடன் புதுவை இளம்பெண் பத்திரமாக புதுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.

    இதன் பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இளம்பெண் புதுச்சேரி டி.ஜி.பி. மனோஜ் குமார் லாலிடம் புகார் தெரிவித்தார். இதன் பேரில் அங்குள்ள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புதுச்சேரி இளம்பெண்ணை முதலியார் பேட்டையை சேர்ந்த வாலிபர் முருகன் மற்றும் சென்னை புரோக்கரான வெளிநாட்டு ஏஜெண்டு ராஜ்குமார் ஆகியோர் திட்டம் போட்டு பணத்துக்காக ஏமாற்று வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து புதுவை வாலிபர் முருகனை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஏஜெண்டு ராஜ் குமாரை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மோசடிக்கும்பல் இளம்பெண்ணிடம் ரூ.3¼ லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு ரூ.2½ லட்சத்துக்கு கம்போடியா கும்பலிடம் விற்பனை செய்திருக்கும் திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சென்னை ஏஜெண்டை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இளம்பெண்ணை சித்ரவதை செய்த கம்போடியா கும்பல் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுவை இளம்பெண்ணை டாலர் கணக்கில் கம்போடியா கும்பல் விலை பேசி இருப்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதன்படி 3500 டாலர் கொடுத்து கம்போடியா மோசடி கும்பல் இளம்பெண்ணை வாங்கி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து இதன் பின்னணியில் உள்ள தமிழகம், புதுவை மோசடி கும்பலையும், கம்போடியா நாட்டை சேர்ந்தவர்களையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

    கம்போடியாவில் இளம்பெண்ணை சித்ரவதை செய்தவர்கள் யார்? என்பதும் அடையாளம் தெரியவந்துள்ளது. அங்கு உள்ள ஒரு நிறுவன மேலாளர் அட்டிடோ மற்றும் ஜான் ஆகியோர் தான் தொலைபேசி அழைப்பாளர் பணிக்கு பதிலாக வேறு வேலை கொடுத்து சித்ரவதை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

    ×