என் மலர்
நீங்கள் தேடியது "tourist visa"
- 22,000 இந்திய மாணவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் சீனா தடுத்தது.
- கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதட்டங்களைத் தணிக்க உதவியது.
சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்மூலம் 5 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தியா சுற்றுலா விசாக்களை மீண்டும் வழங்குகிறது.
ஜூலை 24 முதல் சீன குடிமக்கள் சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு COVID-19 தொற்றுநோய் பரவலின் போது சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இந்தியா தடை செய்தது.
22,000 இந்திய மாணவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுத்த சீனாவின்நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சுற்றுலா விசாக்களை வழங்குவதை இந்தியா நிறுத்தியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரு நாடுகளும் டெபாசாங் மற்றும் டெம்சோக் எல்லைகளில் இருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற முடிவு செய்தன, இது கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதட்டங்களைத் தணிக்க உதவியது.
இரு நாடுகளும் டெல்லியில் இருந்து சீனாவிற்கும், டெல்லியில் இருந்து சீனாவிற்கும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அண்மையில் அறிவித்தன.
மேலும் கடைசியாக சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
- எச்1பி விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
- தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருந்தும் அவர்கள் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் எச்1பி விசாவில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
மேலும் சுற்றுலா விசா, வணிக விசாவில் ஏராளமானோர் அமெரிக்காவுக்கு சென்று வருகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட காலம் வரைதான் அங்கு இருக்க முடியும். இதே போன்ற விசாவில் அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பணிபுரிய அனுமதி இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் அமெரிக்க விசாவில் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது. வணிக மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு பயணிக்கும் தனிநபர், வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக விசாவில் அமெரிக்காவில் இருந்தும் அவர்கள் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் புதிய வேலை வாய்ப்பை தொடங்கும் முன் பி1 (வணிகம்) மற்றும் பி2 (சுற்றுலா) விசாவை வேலைவாய்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு மாற்றுவதற்கான மனு மற்றும் கோரிக்கை அளித்து அனுமதி பெற வேண்டும்.
விசாவின் நிலையை மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அந்த நபர் அமெரிக்காவை விட்டு வெளியேறி பின்னர் புதிய வேலை வாய்ப்பை பெறுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம்
சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் மோசடியாளர்கள், ஆள் கடத்தல் காரர்களிடம் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம் என இலங்கை நாட்டு மக்களுக்கு அங்குள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது வேலை மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு முக்கியமானது. எனவே அவர்கள் இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம் என அந்நாட்டு அமைச்சர் மனுஷ நாணயக்காரா தெரிவித்து உள்ளார்.






