search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.77 லட்சம் சிக்கியது
    X

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்வதையும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் படத்தில் காணலாம் 

    லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.77 லட்சம் சிக்கியது

    • டாஸ்மாக் மேலாளர்-விற்பனையாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
    • சஸ்பெண்டு நடவடிக்கை பாய்கிறது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக விஜய சண்முகம் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை செல்வன் நகர் ஆகும்.

    இவர் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார்.இவர் டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதை யடுத்து போலீசார் அவரை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் டதி பள்ளி சந்திப்பு அருகே லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகத்தின் கார் சென்றது.பைப்புவிளை அருகே டாஸ்மாக் மேலா ளர் விஜய சண்முகம் காரை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தார்.

    அப்போது வடசேரியில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளரும் டாஸ்மாக் மேலாளரின் கார் டிரைவருமான ரெஜின் அங்கு வந்து காரை எடுக்க முயன்றார். அப்போது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் விசா ரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் தங்கி இருந்த அறைக்கு சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம் மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர் ரெஜின் மீதும் பணம் கேட்டு வாங்குதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக் மேலாளர் மற்றும் கடை விற்பனையாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீ சார் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மீது துறைவாரி யாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட் டுள்ளது. எனவே இருவரும் சஸ்பெண்டு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    Next Story
    ×