search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் பழனிசாமி"

    காட்டுப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது என குற்றம்சாட்டினார். #KodanadEstate #KodanadVideo #EdappadiPalanisamy
    சென்னை:

    சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பல தலைவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மக்களுக்கு கொடுத்து கொடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர்.

    காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் 51 லட்சம் குழந்தைகள் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கொடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது. கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. தான். 

    தெகல்கா முன்னாள் ஆசிரியரின் பேட்டி தி.மு.க.வால் செய்யப்பட்ட நாடகம். வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

    கொடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு தி.மு.க. நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடுபொடியாக்கி காட்டுவேன். ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர்.

    நான் எதற்கும் அஞ்சமாட்டேன், இறுதி சொட்டு ரத்தம் உள்ளவரை அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பேன் என தெரிவித்தார். #KodanadEstate #KodanadVideo #EdappadiPalanisamy
    தமிழக முதலமைச்சர் பழனிசாமியை மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். #TamilisaiSoundararajan #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்துப்  பேசினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது.



    திருவாரூர் இடைத்தேர்தல் நிலை குறித்த அறிக்கை, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரை தமிழிசை சவுந்திரராஜன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. #TamilisaiSoundararajan #EdappadiPalaniswami
    பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #Tamilnadu #PongalGift #Palaniswami
    சென்னை:

    கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரே‌சன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
     
    சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.

    ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் பயன் அடைகிறார்கள்.



    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த பரிசுத் தொகுப்புடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக 1000 ரூபாய் பொங்கல் பரிசு அளிக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் அறிவித்தார்.

    இதற்கிடையே, தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வரும் 7-ம் தேதி முதல் அனைத்து ரே‌சன் கடைகளிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார். #PongalGiftHamper #EdappadiPalaniswami
    பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். #Tamilnadu #PongalGift #Palaniswami
    சென்னை:

    கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரே‌சன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
     
    சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.

    ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் பயன் அடைகிறார்கள்.



    இதற்கிடையே, தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வரும் 7-ம் தேதி முதல் அனைத்து ரே‌சன் கடைகளிலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். #Tamilnadu #PongalGift #Palaniswami
    அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் நிறைவேற்றப்படும் என்று இந்தியா சிமெண்ட்ஸ் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy #MSDhoni
    சென்னை:

    சிமெண்டு உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 72 ஆண்டு நீண்ட வளர்ச்சிப்பாதை மற்றும் அதன் துணைத் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான என்.சீனிவாசனின் 50 ஆண்டுகளுக்கான தொடர்பினையும், அவருடைய திறமைமிக்க நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆகியவற்றையும் பற்றி எடுத்துக்கூறும் உயர் மதிப்பு புத்தகத்தின் (‘காபி டேபிள் புக்’) வெளியீட்டு விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, என்.சீனிவாசன் பற்றிய உயர் மதிப்பு புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் டோனி பெற்றுக்கொண்டார். இதையடுத்து இந்தியா சிமெண்ட்ஸ் கடந்து வந்த பாதை மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும், விளையாட்டுத்துறைக்கும் என்.சீனிவாசன் அளித்த பங்களிப்புகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.

    சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சந்து போர்டே, சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், கபில் தேவ், ராகுல் டிராவிட், ராம்கோ சிமெண்டு நிறுவனத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, சிமெண்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மகேந்திர சிங்க்வி, உயர் மதிப்பு புத்தகத்தின் ஆசிரியர் கல்யாணி கன்டாடே, வடிவமைப்பாளர் மால்விகா மேஹ்ரா ஆகியோர் பங்கேற்றார்கள்.

    முன்னதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் ரூபா குருநாத் வரவேற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ராகுல் டிராவிட், டோனி ஆகியோர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும், இந்திய கிரிக்கெட் அணிக்கும், விளையாட்டு துறைக்கும் என்.சீனிவாசன் அளித்த அளப்பரிய பங்களிப்புகள் குறித்து பாராட்டி பேசினார்கள். மேலும் கிரிக்கெட் வாரியத்தில் அங்கம் வகித்தபோது அவர் செய்த சாதனைகளையும் எடுத்துக் கூறினார்கள். நிகழ்ச்சிகளை முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் என்.சீனிவாசனின் பங்களிப்பு சுமார் 50 ஆண்டுகள் இருந்திருக்கிறது என்பதை இந்த புத்தகத்தின் வாயிலாக அறிய முடிகிறது. இது தவிர பொது வாழ்க்கையில் இவர் ஆற்றிய பணிகள் பற்றியும் இந்த புத்தகத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம், உலகத்தரத்துடன் ஒப்பிடும் அளவிற்கு ஒரு நிலையை எட்டுவதற்கு அவருடன் இணைந்து பணியாற்றிய உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் கடின உழைப்பும் காரணம் என்றால் மிகையாகாது.

    ஒருவர் முதலாளியாக உயர்வதற்கு முன் சிறந்த தொழிலாளியாக பணியாற்றி இருக்கவேண்டும். அப்படி பணியாற்றியவர்கள் தான் பிற்காலத்தில் ஒரு சிறந்த முதலாளியாக உயரமுடியும் என்பதற்கு என்.சீனிவாசனே முன்னுதாரணம். ஒரு தொழில் அதிபராக வாழ்வில் முன்னேற துடிக்கும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு, இவர் ஒரு முன்மாதிரியான சாதனையாளராக திகழ்கிறார்.

    சீனிவாசனுடைய மேலாண்மை திறமையாலும், உழைப்பாலும், இந்தியாவில் 7 இடங்களில் இந்த நிறுவனம் தனது ஆலைகளை நிறுவியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் சிமெண்டு சங்கர், கொரமண்டல் மற்றும் ராசி கோல்டு என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் சிமெண்டு தொழில் மட்டுமல்லாமல். அத்தொழிலுடன் தொடர்புடைய காற்றாலை, சர்க்கரை, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் தன் கால்களை பதித்து இருக்கிறது.

    விளையாட்டு வீரர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் இல்லாத சூழலில், 1965-ம் ஆண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியது. மேலும் டென்னிஸ், பால் பேட்மிண்டன், கோல்ப், ஸ்குவாஷ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை ஊக்குவித்து, வேலைவாய்ப்பு அளித்தது. மேலும் போட்டிகள் நடத்துவதற்கு உதவிகளையும் செய்தது. விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அறிவிப்பை நான் சுதந்திர தின உரையில் வெளியிட்டேன். விரைவில் அது நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

    என்.சீனிவாசன், மதராஸ் வர்த்தக சபை, எப்.ஐ.சி.சி.ஐ., சிமெண்டு உற்பத்தியாளர் சங்கம், தேசிய சிமெண்டு மற்றும் கட்டடப் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம், மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிமெண்டு தொழிற்சாலைக்கான வளர்ச்சிக் குழு போன்ற பல்வேறு அமைப்புகளில் உயர் பதவிகளை வகித்தவர் என்பதை அறிவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என். சீனிவாசனின் ஆளுமை, நிர்வாகத் திறமை, சிறந்த தொழில் அதிபர், விளையாட்டுத் துறையில் சிறந்த நிர்வாகி, நல்ல குடும்பத் தலைவர் என்ற இவரது பன்முக ஆற்றலை இந்த உயர் மதிப்பு புத்தகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.



    இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட உயர் மதிப்பு புத்தகத்தின் (காபி டேபிள் புக்) முதல் பிரதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி பெற்றுக்கொண்டபோது எடுத்தபடம்.

    இந்தியா சிமெண்டு நிறுவனம் ஐ.பி.எல்.-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளது. இதுதவிர, இந்த நிறுவனம் டி.என்.பி.எல். என்று அமைப்பினை ஏற்படுத்தி தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டில் தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் திறன் வெளிக்கொணரப்பட்டு, அவர்கள் மாநில அளவிலும், இந்திய அளவிலும் உள்ள அணியில் இடம் பெறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இந்த செயலுக்காக என்.சீனிவாசனை பாராட்டுகிறேன். என்.சீனிவாசன் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்த நாட்டிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், புதிய விளையாட்டு வீரர்களை உருவாக் கும் வகையிலும் சிறப்பாக செயல்படவேண்டும்.

    தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீட்டாளர்கள் வருகை புரிவதற்கு அடிப்படை காரணம், தமிழ்நாட்டிலுள்ள வலுவான மனிதவளம், தடையில்லா மின்சாரம் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளும் தான். மேலும் அன்னிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தை வகிக்கிறது. சமீபத்தில் சில துறைகளில் புதிதாக கொள்கைகளை உருவாக்கினோம். முதலீட்டாளர்களுக்கு தெளிவு மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் வகையில் மேலும் பல்வேறு துறைகளிலும் புதிதாக கொள்கைகள் வகுக்கப்படும்.

    2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியடைந்தது. இதைத்தொடர்ந்து, வருகிற ஜனவரி மாதம் 23 மற்றும் 24-ந்தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. தொழில்துறையில் உள்ள தலைவர்கள், தொழில்முனைவோர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறேன். இதில் பங்கேற்று தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் நிலவுவதை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு தொழில் வசதிவாய்ப்பு சட்டம், தொழில் தொடங்குவதற்கான கட்டாய ஒப்புதல் 30 நாட்களுக்குள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

    தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், நிதி சேவைகள், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா என புதிய தலைமுறைக்கான சேவை துறைகளையும் தமிழகம் பெற்றிருக்கிறது. வளர்ச்சிக்கான முன்மாதிரி மாநிலமாகவும் திகழ்கிறது. என்னுடைய அரசு ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான 13 கம்பெனிகளின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் 34 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிறைவாக இந்தியா சிமெண்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் என்.சீனிவாசன் நன்றி கூறினார்.

    விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், டாக்டர் விஜயபாஸ்கர், தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், மைத்ரேயன் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ‘தினத்தந்தி’ நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், கிரிக்கெட் பிரபலங்கள் வெங்சர்க்கார், கிர்மானி, ஸ்ரீகாந்த், அனில் கும்பிளே, ஸ்ரீநாத், வி.வி.எஸ். லட்சுமண், ஷேவாக், ஹேமங் பதானி, எல்.பாலாஜி, ராபின் சிங், சடகோபன் ரமேஷ், நெஹரா, அஜய் ஜடேஜா, கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன்சிங், அம்பத்தி ராயுடு, தொழில் அதிபர் பழனி ஜி.பெரியசாமி, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். #EdappadiPalanisamy #MSDhoni
    என் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்தி நேர்மையான கிரிக்கெட் விளையாட உதவியது தமிழ்நாடு என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி பேசினார். #CoffeeTable #MSDhoni #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும்  முன்னாள் பிசிசிஐ தலைவரான சீனிவாசன் எழுதிய புத்தகம் காபி டேபிள் (COFFEE TABLE). இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

    காபி டேபிள் புத்தகத்தின் முதல் பிரதியை முதலமைசர் பழனிசாமி வெளியிட, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி பெற்றுக் கொண்டார். மேலும், கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட், கபில் தேவ் உள்ளிட்டோரும் முதலமைச்சரிடம் இருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொண்டனர். 



    அப்போது எம்.எஸ்.டோனி பேசுகையில், சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தென்னிந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு கடின உழைப்புடன் கூடிய நிதானமான விளையாட்டை என்னால் வெளிப்படுத்த முடிந்தது. 

    சென்னை அணி எப்போதுமே கடினமாகவும்,நேர்மையாகவும் விளையாடும். என் ஆக்ரோஷத்தை நிதானப்படுத்தி பலமான நேர்மையான கிரிக்கெட் விளையாட தமிழ்நாடு எனக்கு உதவியது என குறிப்பிட்டார்.

    இந்த விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். #CoffeeTable #MSDhoni #EdappadiPalaniswami
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது: 

    அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான ஒப்பந்தம் விரைவில் முடிவு செய்யப்படும். விதிகளை மீறியதால்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஸ்டாலினின் விருப்பம். கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகே யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியும்.

    நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். தேர்தல் அறிவித்தவுடன் கூட்டணி அறிவிக்கும் சூழல் உருவாகும். அப்போது தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami 
    தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் உடனடியாக தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல் மந்திரி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #DamSafetyBill #EdappadiPalaniswami #PMModi
    சென்னை:

    பாராளுமன்ற மக்களவை தொடரில் தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா 2018 நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், தமிழக முதல் மந்திரி எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா 2018-ல் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். தமிழக நலன் குறித்து அணை பாதுகாப்பு மசோதாவில் கருத்தில் கொள்ளப்படவில்லை.



    அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக தமிழகம் வைத்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே, அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப் பெறவேண்டும்.

    மாநிலங்களின் கருத்துக்களை கேட்காமல் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த மசோதவால் ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால் அந்த அணையின் உரிமை பறிபோகும் என தெரிவித்துள்ளார். #DamSafetyBill #EdappadiPalaniswami #PMModi
    முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இன்று இணைந்தார். #ADMK #CMPalaniswami #KanchaKaruppu
    சென்னை:

    நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் தன்னை இன்று இணைத்துக் கொண்டார்.

    இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை அவரது வீட்டில் நடிகர் கஞ்சா கருப்பு இன்று சந்தித்தார். அப்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் என தெரிவித்துள்ளது. #ADMK #CMPalaniswami #KanchaKaruppu
    மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சிறப்பு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #PMModi #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளித்தன.

    இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.



    அந்த கடிதத்தில், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சிறப்பு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பப்பட்டது. #MekedatuDam #PMModi #EdappadiPalaniswami 
    ஊட்டியில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு மையத்தை மூடக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #PMModi #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

    உதகையில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது. மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். 



    1957-ல் தொடங்கப்பட்ட இந்த மையம் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை மூடினால் உதகை,கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

    தென்மாநில விவசாயிகள் பஞ்சாப்பில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும். வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன்தராது. எனவே, ஆய்வு மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #PMModi #TNCM #EdappadiPalaniswami
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் உயிரிழந்த ராணுவ வீரர் சரவணன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். #JammuKashmir #ArmyJawanSaravanan #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சரவணன். இவர் மதுரை மாவட்டம் கரிசல்பட்டியைச் சேர்ந்தவர். இவர் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தார்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது இறந்த தமிழக வீரர் சரவணன் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்பு பணியின்போது மரணம் அடைந்த தமிழக வீரர் சரவணன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். மேலும், சரவணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பட்டுள்ளார். #JammuKashmir #ArmyJawanSaravanan #EdappadiPalaniswami
    ×